நபிகள் நாயகம் பற்றி அவதூறு! பாஜக செய்தித் தொடர்பாளர்கள் இருவரையும் கைது செய்க! திமுக வலியுறுத்தல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நபிகள் நாயகத்தை பற்றி அவதூறு பரப்புரை செய்த பாஜக செய்தித் தொடர்பாளர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

நுபுர் சர்மாவையும், நவீன் ஜிண்டாலையும் கட்சியிலிருந்து மட்டும் நீக்கி பா.ஜ.க. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலக்கூடாது என திமுக கூறியுள்ளது.

இது தொடர்பாக திமுக சிறுபான்மை நல உரிமைபிரிவு மாநிலச் செயலாளர் மஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

 அவதூறு கருத்து

அவதூறு கருத்து

''அண்ணல் நபிகள் பெருமான் குறித்து அவதூறு கருத்தைத் தெரிவித்த பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர்கள் இருவரும் கைது செய்யப்பட வேண்டும்.பொறுப்பற்ற வகையில் செய்யப்படும் இதுபோன்ற வெறுப்பு விமர்சனங்கள் சமூகத்தில் அமைதியை மட்டுமல்ல, எதிர்காலத்துக்கே கேடு விளைவிக்க கூடியவை.''

 கைது செய்க

கைது செய்க

''அவர்கள் இருவர் மீதும் கட்சி ரீதியான நடவடிக்கை மட்டும் எடுத்து பா.ஜ.க. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலக்கூடாது. சட்டரீதியான நடவடிக்கை அவசியம் என்பதை தி.மு.க. சிறுபான்மையினர் நலவுரிமைப் பிரிவு வலியுறுத்துகிறது.'' இவ்வாறு மஸ்தான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வலுக்கும் கோரிக்கை

வலுக்கும் கோரிக்கை

பாஜக செய்தித் தொடர்பாளர்கள் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்புகளில் இருந்தும் வலுப்பெற்று வருகிறது. நபிகள் நாயகத்தை பற்றி பாஜக செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்த கருத்துக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளதுடன் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. ஆனால் அதிமுக தரப்பில் இது தொடர்பாக எந்த ரியாக்‌ஷனும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    Nupur Sharma Comment On Muhammad | முகமது நபிகள் பற்றி நுபுர் சர்மா.. என்ன நடக்கிறது? | *Politics
    மே 27-ஆம் தேதி

    மே 27-ஆம் தேதி

    மே 27-ஆம் தேதியன்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தின் போது, நபிகள் நாயகத்தை பற்றி பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா பேசியது, இன்று உலகளவில் இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. ஒட்டுமொத்த அரபு நாடுகளும் ஒன்றிணைந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதால், பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கைது செய்யப்படவும் அதிகம் வாய்ப்புள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+