"வீடியோ காட்டட்டுமா".. நீங்கள் பேசியது சரி என்றால், கனல் கண்ணன் பேசியதும் சரிதான்.. அண்ணாமலை அதிரடி

கனல் கண்ணன் பேச்சுக்கு அண்ணாமலை ஆதரவு தெரிவித்து பேட்டி தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "அரசு மேடையில் நீங்கள் பேசியது எல்லாம் கருத்துச்சுதந்திரம் என்றால், கனல்கண்ணன் பேசியதும் கருத்துச்சுதந்திரம் தான்" என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Kanalkannan Stunt master மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு! | Periyar Controversy *TamilNadu

    சமீபகாலமாகவே, இந்து சமய அறநிலைத்துறையை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்... அதேபோல் திராவிடம், பெரியாரின் கருத்துக்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்..

    திடீர் திடீரென பெரியார், அம்பேத்கர் சிலைகள் உடைக்கப்படுகின்றன.. அதற்கு நிறம் மாற்றப்படுகிறது.. அதிலும் பெரியார் சிலைகள் தொடர்ந்து உடைக்கப்பட்டும் வருவது அதிகமாகி உள்ளது.

    மேலும், இந்துக்களுக்கு எதிராக திமுகவும், அதன் கூட்டணிகளும் செயல்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.. எனவேதான், இந்து முன்னணியின் சார்பில் கடந்த ஒரு மாதமாக இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் என்ற பயணம் தொடங்கி நடைபெற்று வந்தது.. அதன் நிறைவு விழா சென்னை மதுரவாயலில் நடந்தபோதுதான், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில தலைவரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியது சர்ச்சையாகிவிட்டது.

     கனல் கண்ணன்

    கனல் கண்ணன்

    "ஸ்ரீரங்கத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்" என்று பேசியிருந்தார். கனல் கண்ணன் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று புகார்கள் போலீசில் தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன.. இந்நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது, கனல் கண்ணன் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.. அண்ணாமலை அதற்கு தந்த நீண்ட விளக்கம் இதுதான்:

     யூடியூப்

    யூடியூப்

    "2 விஷயங்களில் பாஜக தெளிவாக உள்ளது.. நம்முடைய பாஜகவை பொறுத்தவரை, எப்போதுமே மத அரசியல் கிடையாது.. தமிழகத்தில் ஒருவர் யூடியூப் சேனலில், சிவபெருமானை அவமானப்படுத்தினார், அசிங்கப்படுத்தினார்.. தில்லை நடராஜரின் நடனத்தை கேலி கிண்டல் செய்திருக்கிறார்.. இதுதொடர்பாக பாஜகவினர், 45 இடங்களில் புகார்களை தந்திருக்கிறார்கள்.. ஆனால், ஒரு இடத்திலும் புகாரை பெற்றுக் கொள்ளவில்லை..

     சிவபெருமான்

    சிவபெருமான்

    சைவர்கள் அதிகமாக இருக்கக்கூடிய தமிழகத்தில் சிவபெருமானை அவமானப்படுத்திவிட்டு, இவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் உள்ளனர்.. முதல்வரும் அவர்களை சந்தித்து பேசி, டீ எல்லாம் தந்து குடிக்க வைத்து அனுப்பி வைக்கிறார்.. அப்போ நீங்க என்ன சொன்னீங்க, இதெல்லாம் கருத்து சுதந்திரம் என்றுதானே காரணம் சொன்னீர்கள்.. அப்படித்தான் கனல் கண்ணனும் ஒரு வார்த்தையை சொல்லி உள்ளார்.. கருத்து சுதந்திரம் என்ற பெயரில், திமுககாரர்கள் பேசிய எத்தனையோ வீடியோக்களை நான் உங்களுக்கு காட்டுகிறேன்..

     கனல் கண்ணன்

    கனல் கண்ணன்

    கனல் கண்ணன் பேசுவது தவறு என்றால், இவர்கள் பேசியது எல்லாமும் மிகப்பெரிய பாவம்.. தப்புன்னு இதை சொல்லக்கூடாது.. மிகப்பெரிய பாவம் என்றே சொல்லணும்.. கடவுளை அவமானப்படுத்துவது, பெண்களை கொச்சைப்படுத்துவது, மற்ற மதத்தினரின் நம்பிக்கைகளை கேலி செய்வது, இதெல்லாம் இவர்கள் செய்வார்கள்.. அதனால், எப்போதுமே ஒருமாநில அரசின் நிலைப்பாடு சரியாக இருக்க வேண்டும்.. கருத்து சுதந்திரம் என்றால் என்ன? எல்லாரும் எல்லாமும் பேசலாமா? அப்படின்னா, உங்களையோ, அல்லது உங்க கட்சிக்கு எதிராகவோ பேசினால் மட்டும் அது தவறா?

     சப்ஜெக்ட்

    சப்ஜெக்ட்

    ஸ்ரீரங்கம் கோயிலில் எப்படி அந்த சிலையை வைத்தீர்கள்? அந்த பணம் எங்கிருந்து உங்களுக்கு வந்தது? அதுக்கு கவர்ன்மென்ட் ஆர்டர் எப்போது போட்டீங்க? இதெல்லாம் பேசினால் அதுவே ஒரு பெரிய சப்ஜெக்ட்.. கோயிலுக்கு வெளியேவே சிலையை வைத்திருக்கிறீர்களே, அதை பற்றி கோயிலுக்கு வந்து செல்லும், ஆயிரம் பேரிடம் ஒரு கருத்து கணிப்பு நடத்தி பாருங்கள்.. அந்த ஆயிரம் பேரும் சொல்லுவார்கள், அந்த சிலை, கோயிலுக்கு வெளியே தேவையே இல்லை என்பார்கள்..

     முட்டாள்தனம்

    முட்டாள்தனம்

    ஏன் என்றால், கோயிலுக்கு மத நம்பிக்கை உள்ளவர்கள்தானே செல்வார்கள்.. "கடவுளை நம்புபவன் முட்டாள்" என்று எங்கே நீங்க சிலையை வைக்க வேண்டும் என்றால், கோயிலுக்கு யாரும் போகாத பொதுவான இடங்களில் வைக்கலாம்.. இதுதான் ஒரு அரசினுடைய கடமை.. கோயிலுக்கு வாசலிலேயே இப்படி சிலையை வைப்பது முட்டாள்தனம்.. அதை யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.. இதைதான் கனல் கண்ணன் பேசிய பேச்சாக நான் பார்க்கிறேன்.. கொள்கை, பேச்சு இவை அனைத்தையும் அனைவருக்கும் சமம் என்று இந்த அரசு நினைக்க வேண்டும்" என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+