வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. பரபர சூழலில் துரைமுருகன் அறிவிப்பு!
சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 5ஆம் தேதி) காலை 10.30 மணியளவில் நடைபெறும் திமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டமானது காணொளிக் காட்சி வாயிலாக நடைபெறும் எனவும், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் எனவும், கலைஞர் நூற்றாண்டு விழாபற்றி இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் 72 பேரும் கலந்து கொள்வார்கள் எனவும், இதில் கலைஞர் நூற்றாண்டு விழா மட்டுமின்றி, நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த மார்ச் 21ஆம் தேதி, மற்றும் மே 14ஆம் தேதி ஆகிய நாட்களில் கருணாநிதி நூற்றாண்டு விழா குறித்து ஆலோசிப்பதற்காக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், மீண்டும் திமுக மா.செக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
அண்மையில், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ.பத்மநாதன் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜெயபாலன் என்பவர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், திடீரென மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது மா.செக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications