திமுக மாவட்ட கழக தேர்தல் அறிவிப்பு.. 72 கழக மாவட்டங்கள்.. வேட்பு மனு கட்டணம் எவ்வளவு தெரியுமா?
சென்னை : திமுக மாவட்ட கழக தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22ஆம் தேதி முதல் தொடங்குவதாக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிர்வாக வசதிக்காக கோவை, திருப்பூர், தருமபுரி, மதுரை மாநகர் ஆகிய மாவட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
72 மாவட்ட கழகங்களில் உள்ள பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ. 1000 செலுத்தி வேட்பு மனு படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர், மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட துணைச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் 22ஆம் தேதி தொடங்குகிறது.
செப்.22-ம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக வேட்பு மனுத் தாக்கல் நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக உட்கட்சித் தேர்தல்
திமுகவின் 15ஆவது உட்கட்சி தேர்தல் கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் கிளை, ஒன்றிய, நகர அளவிலான நிர்வாகிகளுக்கான பெரும்பாலான இடங்களுக்கான தேர்தல் சுமூகமாக நடைபெற்று முடிந்துள்ளது. மாநகராட்சியில் உள்ள பகுதி செயலாளர்களுக்கான வார்டு வரையறையை சமீபத்தில் திமுக தலைமை வெளியிட்டது. அதன்படி தேர்தல் நடைபெற்றது.

சுமூகமாக
தேர்தல் ஆணைய விதிகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் உட்கட்சித் தேர்தலை நடத்தி அதனை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதிமுகவில் ஏற்கனவே உட்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தில் முடிவுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கிளை, ஒன்றிய, நகர அளவிலான நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்துள்ளது.

மாவட்ட செயலாளர்கள்
அடுத்ததாக மாவட்ட கழகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. மாவட்ட செயலாளர், மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட துணைச் செயலாளர்கள், பொருளாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆகிய தவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் 22ஆம் தேதி தொடங்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இட இதுக்கீடு விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 25,000
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுகவின் 15வது கழக பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிற பின்வரும் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் அவைத் தலைவர், மாவட்ட செயலாளர், 3 மாவட்ட துணை செயலாளர்கள் ஆகிய பொறுப்புகளுக்குப் போட்டியிடுவோர் அதற்கென உள்ள படிவத்தில் முறைப்படி பூர்த்தி செய்து பொறுப்பு ஒன்றுக்கு ரூ.25,000 கட்டணமாக செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். வேட்பு மனு படிவம் ரூ.1000. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக
திமுக மாவட்ட கழக தேர்தலுக்காக செப்.22-ம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல் செப்.25-ம் தேதி நிறைவு பெறுகிறது. 72 கழக மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. நிர்வாக வசதிக்காக கோவை, திருப்பூர், தருமபுரி, மதுரை மாநகர் ஆகிய மாவட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக வேட்பு மனுத் தாக்கல் நடைபெறும் தேதியையும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
-
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள்












Click it and Unblock the Notifications