"தமிழ்நாடு தலைகுனியாது" பிப்ரவரி முழுவதும் பிரச்சாரம் செய்யும் திமுக.. ஆட்டத்தை தொடங்கிய ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் 234 தொகுதிகளிலும் பிப்ரவரி மாதம் முழுவதும் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட 234 நட்சத்திர பேச்சாளர்கள் தொகுதியாக பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக தரப்பில் அடுத்தடுத்து மண்டல மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இளைஞரணி மண்டல மாநாடு நடத்தப்பட்ட சூழலில், பின்னர் திருப்பூரில் திமுக மகளிர் அணி மண்டல மாநாடு நடத்தப்பட்டது. நேற்று தஞ்சாவூரில் மகளிர் அணி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதனையடுத்து திமுக அடுத்தக்கட்ட பிரச்சாரத் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற பெயரில் திமுக பிரச்சாரக் கூட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற பரப்புரை பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.
இந்த பரப்புரையின் கீழ், முதல்வர் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள், தமிழகத்திலுள்ள 234 சட்டசபைத் தொகுதிகளிலும், பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிரமான பரப்புரை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள். இந்த பரப்புரையின் போது, ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும், ஒரு பொதுக்கூட்டம் நடத்திட வேண்டும்.
மேலும், ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள், மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் உள்ளிட்டோரை ஒரே இடத்தில் அழைத்து, மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் நட்சத்திரப் பரப்புரையாளர்கள் அரசின் சாதனைகளை எடுத்துக்கூறியும், கலந்துகொள்வோரின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு தலைகுனியாது" பரப்புரையை வெற்றியடையச் செய்திடும் வகையில் பரப்புரை குறித்து தக்க விளம்பரங்களைச் செய்திடவும், தொகுதிகளில் தேவையான ஏற்பாடுகளைச் செய்திடவும் மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் / பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிப்ரவரி 1 முதல் 28 வரை ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரக் கூட்டம் நடத்த வேண்டிய இடம் மற்றும் கலந்து கொள்ளும் நட்சத்திர பேச்சாளர்களின் அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் திருச்சி சிவா, ஜெகத்ரட்சகன், எழியன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழச்சி தங்கபாண்டியன், கோவி செழியன், தயாநிதி மாறன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்எம் அப்துல்லா, மனோஜ் பாண்டியன், கலாநிதி வீராசாமி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications