நம்பிக்கை இல்லா தீர்மானம்.. 'என்ன செய்வோமோ அதை நிச்சயம் செய்வோம்'.. துரைமுருகன் சூசகம்
Recommended Video

சென்னை: சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் வரும் ஜுலை 1ம் தேதி நடக்க உள்ள நிலையில், திமுக எப்படி எதிர்கொள்ளும் என்பதை எதிர்கொண்ட பிறகு தெரிந்து கொள்ளுங்கள் என அக்கட்சியின் பொருளாளரும் எதிர்க்கட்சி துணை தலைவருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும் சட்டமன்றத்தில் என்னென்ன பிரச்னைகள் குறித்து பேசப்போகிறோம் என்பதை இப்போதே சொல்ல முடியாது என மறுத்துவிட்டார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான துரைமுருகன் பங்கேற்றார். இந்த கூட்டத்திற்கு பின்னர் சட்டசபை அலுவல்கள் கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும். என்றைக்கு எந்த துறையின் மீது மானிய கோரிக்கை உள்ளிட்ட விவரங்கள் வெளியாகின..

இந்நிலையில் அலுவல் ஆய்வு கூட்டம் முடிந்த பின்னர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக சார்பில் அலுவல் ஆய்வு கூட்டத்தின் உள்ளே பேசியதை வெளியே சொல்லக்கூடாது அதுதான் மரபு என்றார்.
அப்போது எதிர்க்கட்சிதலைவர் ஸ்டாலின் இந்த ஆட்சி தேர்தலுக்கு முன்பே அகற்றப்டும் என்றாரே என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த துரைமுருகன், அதெல்லாம் பொறுத்திருந்து பாருங்கள். பத்திரிகைகளிடம் என்னென்ன செய்யப்போகிறோம் என்பதை விளக்கமாக சொல்லிவிட்டு செய்கிற விஷயமா இது? அதெல்லாம் என்ன செய்வோமோ அதை நிச்சயம் செய்வோம் என்றார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்விக்கு, அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ அப்படி எதிர்கொள்வோம் என்றார். சட்டமன்றத்தில் என்னென்ன பிரச்னைகள் குறித்து பேசப்போகிறோம் என்பதை இப்போதே சொல்ல மாட்டோம் என்று கூறிய துரைமுருகன், அப்படிச்சொன்னால் அவர்கள் தயாராகிவிடுவார்கள் சட்டமன்ற கூட்டம் வரும் ஜுலை 30 வரை நடைபெறுகிறது என்றார்.
-
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications