’கதாநாயகன்' திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியது.. ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள் என்ன?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையினை (DMK Election Manifesto) முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். நேற்று வேட்பாளர்களை அறிவித்த ஸ்டாலின், தற்போது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் என்றாலே தேர்தல் அறிக்கையும் கவனம் பெறும். எந்த கட்சிகள் எந்த அறிவிப்பினை வெளியிடுகிறார்கள் என்பதை வைத்தும் வாக்காளர்கள் தங்கள் ஓட்டை செலுத்துவார்கள். இதனால் தேர்தல் அறிக்கை ஒவ்வொரு தேர்தலின் போதும் ஹீரோவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த சட்டசபை தேர்தலில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வாக்குறுதி முக்கிய திமுக வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியினை செய்து வருகிறார்கள். தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீடு, பிரச்சாரம் என தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் திமுகவும் வேகம் எடுத்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் 26 கட்சிகள் கூட்டணி வைத்துள்ளதால் இந்த முறை சற்று தாமதமாகவே நேற்று திமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
அப்போது பேசிய ஸ்டாலின் நாங்க லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம் என்று கூறியிருந்தார். இதையடுத்து தான் தேர்தல் அறிக்கை எப்போது வெளியாகும் என ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் நாளை (இன்று) வெளியாகும் என தெரிவித்தார். இதன்படி தற்போது திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
என்னென்ன அறிவிப்புகள்?
இந்த முறை திமுக எந்த மாதிரியான வாக்குறுதிகளை அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், முதியோர், அரசு ஊழியர்கள் என பலரையும் கவரும் விதமாக திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழு கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
மகளிர் வாக்குகளை கவரும் விதமாக புதிய அறிவிப்புகள் எதேனும் வருமா எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகையினை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருந்தார்.
கடந்த தேர்தலில் முக்கியத்துவம் பெற்ற வாக்குறுதிகள்
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் இலவச பேருந்து பயணத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்டவை மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இதேபோன்று பழைய ஓய்வூதிய திட்டம், கேஸ் மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தன. அனைத்து தரப்பு வாக்குகளையும் கவரும் விதமாகவே இந்த வாக்குறுதிகள் இருந்ததால், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடியின் ப்ரிட்ஜ் அறிவிப்பு
அதிமுக 291 அறிவிப்புகளுடன் தேர்தல் வாக்குறுதியை கடந்த வாரம் வெளியிட்டது. முதல் கட்டமாக வெளியிட்ட வெளியிட்ட அறிவிப்பில், வரிச் சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தைச் சமாளிக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். அதேபோல, குல விளக்கு திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டம் செயல்படுத்தப்படும்.
வீடு இல்லாத ஏழைகளுக்குக் கிராமங்களில் கான்கிரீட் வீடுகளும், நகர்ப்புறங்களில் அடுக்குமாடி வீடுகளும் கட்டித்தரப்படும் என்று அறிவித்தார். அதேபோல, வீட்டுக்கு ஒரு பிரிட்ஜ் இலவசமாக அளிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கவர்ச்சிகர அறிவிப்புகளுடன் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்ட நிலையில், இன்று திமுக தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications