மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி.. திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு
சென்னை: 30 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். வாக்குப்பதிவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சிலிண்டர் மானியம், வட்டியில்லா கடன் என வாக்காளர்களைக் கவரும் பல்வேறு அறிவிப்புகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

500 வாக்குறுதிகள்
திமுக வெளியிட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் 500 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. அதில் முதல் வாக்குறுதியாகத் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதவிர இந்த தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

கல்விக்கடன் ரத்து
அதன்படி 30 வயதுக்குட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த தேர்தலின் போதே மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், சென்ற முறை திமுகவால் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியவில்லை.

ஸ்டாலின் உறுதி
சமீபத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்திலும்கூட, இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு திமுக ஆட்சியில் கல்விக் கடன்களை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு க ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். இந்நிலையில், தற்போது திமுக தேர்தல் அறிக்கையிலேயே 30 வயதுக்குட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில பட்டியலில் கல்வி
மேலும், தற்போது ஒத்திசைவு பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்!












Click it and Unblock the Notifications