என்னாது.. செந்தில் பாலாஜி பொதுப்பணித்துறை அமைச்சரா.. அப்ப துரைமுருகன்.. பரபரக்கும் திமுக!
செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்பார் என திமுக நிர்வாகிகள் உறுதி அளிக்கின்றனர்.
கரூர்: இப்போதான் ஓட்டு கேட்டு கொண்டு வருகிறார்.. அதற்குள் செந்தில் பாலாஜி பொதுப்பணித்துறை அமைச்சராவார் என்று திமுக நிர்வாகிகள் பேசிவருவது அரவக்குறிச்சி அதிமுகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
4 தொகுதி இடைத்தேர்லில் மிக முக்கியமானது அரவக்குறிச்சிதான். இதற்கு காரணம் செந்தில்பாலாஜிதான். எப்படியாவது இவரை தோற்கடிக்க அதிமுக தரப்பில் பல வியூகங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. 10 பேர் கொண்ட அமைச்சர்கள் உள்ளிட்ட குழு இந்த அரவக்குறிச்சி வெற்றிக்காகவே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதை தவிர செந்தில் பாலாஜி தொகுதிக்குள் பணத்தை வாரி இறைத்தால் கையும் களவுமாக பிடிக்கவும், அதை வைத்து இந்த தொகுதியில் இடைத் தேர்தலை நிறுத்தவும் பிளான் உள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன!

அனைவருக்கும் வீடு
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் செந்தில் பாலாஜி கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து பேசி வருகிறார். நான்கு பேர் நின்றிருந்தால்கூட அவர்களிடம் சென்று, நீண்ட நேரம் நின்று தொகுதி பிரச்சனைகள் குறித்து பேசுகிறாராம். எல்லாருக்கும் வீடு கட்டித்தரப்படும் என்று பெரிய பெரிய வாக்குறுதிகளை அசால்ட்டாக தந்துவிட்டு போகிறாராம்.

சின்னசாமி
அவரை ஆதரித்து மாநில விவசாய அணிச் செயலாளர் கரூர் சின்னசாமி நேற்று பேசினார். அப்போது, "அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட உள்ளது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார். அப்பொழுது செந்தில் பாலாஜி பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்பார்" என்றார்.

கிளம்பும் பீதி
இன்னும் தேர்தலே முடியல.. ரிசல்ட்டும் வரலை.. ஆட்சியும் 2 வருஷத்துக்கு உள்ளது.. இதில் இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றால் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்பார் என்று திமுகவினர் சொல்லி வருவது அதிமுகவுக்குள் பீதியை ஏற்படுத்தி உள்ளதாம்!

முக ஸ்டாலின்
ஏனெனில் 4 தொகுதிகளில் அதிக அளவு வித்தியாசத்தில் வெற்றி பெற போவது செந்தில்பாலாஜிதான் என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. ஒருவேளை அப்படி ஒருநிகழ்வு நடந்தால், கண்டிப்பாக ஸ்டாலின் செந்தில் பாலாஜிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பு தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சொல்கிறார்களாம் திமுக நிர்வாகிகள்!
சரி பொதுப்பணித்துறை அமைச்சர் செந்தில் பாலாஜின்னா.. அப்ப துரைமுருகன்.. ஆஹா.. இப்பவே கண்ணைக் கட்டிட்டு வருதேய்யா!!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications