சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செஸ் ஒலிம்பியாட்டில் கவனிச்சீங்களா.. ஸ்டாலின் குடும்ப ஆதிக்கம்தான் இருந்தது.. ஜெயக்குமார் ஆவேசம்!

Google Oneindia Tamil News

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் திமுக குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் நிறைந்திருந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டியுள்ளார்.

Recommended Video

    செஸ் ஒலிம்பியாட்டில் கவனிச்சீங்களா.. ஸ்டாலின் குடும்ப ஆதிக்கம்தான் இருந்தது.. ஜெயக்குமார் ஆவேசம்!

    தமிழ்நாட்டில் போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடனான மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இவர் 'சாஃப்ட் முதலமைச்சர்' என்று யாரும் கருதிட வேண்டாம். நேர்மையானவர்களுக்கு தான் நான் சாஃப்ட். தவறு செய்வோருக்கு - குறிப்பாக போதைப் பொருள் நடமாட்டத்திற்கு துணை போவோருக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன். அதற்கான அதிகாரத்தை நான் எங்கும் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.

     செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு மிகச் சிறப்பாக நடத்தியது.. மனமார பாராட்டிய பிரதமர் மோடி! செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு மிகச் சிறப்பாக நடத்தியது.. மனமார பாராட்டிய பிரதமர் மோடி!

     ஜெயக்குமார் பேச்சு

    ஜெயக்குமார் பேச்சு

    இந்த நிலையில் ராமச்சந்திர ஆதித்தனாரின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்ததற்கு முழுக் காரணமும் திமுக அரசு தான். ஆட்சியும், அதிகாரமும் கையில் வைத்துக் கொண்டு போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும்.

    மு.க.ஸ்டாலின் மீது விமர்சனம்

    மு.க.ஸ்டாலின் மீது விமர்சனம்

    ஆனால் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்று மாறிவிடுவேன் என்று கூறிக் கொண்டு, திமுகவினர் செய்து வரும் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இதே சர்வாதிகாரியின் ஆட்சியில் தான், ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரச்னைகள் நடந்துகொண்டு இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்முரமாக இருக்கிறார்.

    உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    செம்மொழி மாநாடு போல், செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் திமுகவின் குடும்ப ஆதிக்கம் தான் இருந்தது. உதயநிதியின் புகழ்பாடும் அமைச்சர்கள் தான் அதிகமாக இருக்கின்றனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பிரச்னைகளை சரி செய்யாமல், உதயநிதியின் ரசிகர் மன்ற வேலைகளை தான் செய்கிறார்.

    போதைப்பொருள் புழக்கம்

    போதைப்பொருள் புழக்கம்

    பருவமழை பெய்யும் என்று கூறப்படுகிற நிலையில், மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு இதுவரை ஈடுபடவில்லை. மழைநீரை சேமிக்காமல், கிடைக்கும் நீரையும் தமிழக அரசு வீணடித்து வருகிறது. திமுக அரசு விளம்பரங்கள் மூலம் ஆட்சியை நடத்தி வருகிறது. அதிமுக ஆட்சியில் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட்டது. ஆனால் இன்று காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்காமல், எம்எல்ஏ-க்களுக்கு கடிதம் எழுதுவதன் மூலம் எதுவும் நடக்கப் போவதில்லை.

    அமமுக பொதுக்குழு கூட்டம் நடக்கவிருப்பதாக தெரிந்துகொண்டேன். அப்படியே ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் அங்கே சென்றால், அதிமுக எழுச்சியுடன் செயல்படும். ஆளுநர் ஆர்.என்.ரவி - ரஜினிகாந்தி சந்தித்து அரசியல் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

    English summary
    Former AIADMK minister Jayakumar has alleged that DMK family members dominated the Chess Olympiad.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X