விஜய்யை பார்த்து நடிக்கிறாங்க.. திமுகவை தவெக மேடையில் கடுமையாக அட்டாக் செய்த ஆதவ் அர்ஜுனா
சென்னை: விஜய் அணியும் பேண்ட், சட்டையை கூட காப்பி அடித்து வருகிறார்கள் என்று தவெக இரண்டாம் ஆண்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசினார். மேலும் விஜய் தான் எதிர்க்கட்சி தலைவர் என்றும், 40 இடங்களை பெறுவதற்காக வரவில்லை, ஆட்சி அமைக்க வந்துள்ளோம். எங்களிடம் பணம் இல்லை, மக்கள் ஆதரவும், உழைப்பும் இருக்கிறது. தளபதி விஜய்யை தலைவர் என்று அழைக்கக்கூடிய பரிணாமத்தை நோக்கி பயணிக்கிறோம் என்று ஆதவ் அர்ஜுனா பேசினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று சென்னை மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. விழாவில் பேசிய தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, "பிறப்பால் ஒரு முதல்வர் உருவாகக் கூடாது. மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்ற ஒரு உண்மையை பேசியதால் பல்வேறு சூழ்ச்சிகள் என்னை சூழ்ந்தது. அப்போது எனக்கு ஒரு அழைப்பு வந்தது" என்று பேசினார்.

தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:- தமிழக வெற்றிக் கழகத்தில் என்னுடைய முதல் உரை.. தளபதி என்று நாம் அழைத்து வருகிறோம். தலைவர் என்று அழைக்கும் பரிணாமத்தை நோக்கி நாம் பயணிக்கிறோம். பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலை அம்மாள், வேலு நாச்சியார் கொள்கைகளுக்கும், தியாகங்களுக்கும் வணக்கம்.
பிறப்பால் ஒரு முதல்வர் உருவாகக் கூடாது. மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்ற ஒரு உண்மையை பேசியதால் பல்வேறு சூழ்ச்சிகள் என்னை சூழ்ந்தது. அப்போது எனக்கு ஒரு அழைப்பு வந்தது. நீங்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பணி செய்யுங்கள் என்று. நான் சிறு வயதில் இருந்து பல்வேறு அரசியல் கட்சிகளில் பணி செய்து இருக்கிறேன். பெரியாரை தூக்கி பேசும் 70 வருட அரசியல் அம்பேத்கரை மேடையில் ஏற்றியது இல்லை.
ஊழல்வாதிகளின் கைகளில் ஆட்சி உள்ளது. 75 வருடங்களாக கொள்கை பேசிய தலைவர்கள் இதுவரை என்ன மாற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள். 2021- பிரசாரம் திமுக செய்த போது தமிழகத்தை கடனில் செலுத்திய தமிழகம் என்று கூறியது. 15 வருடத்தில் தமிழக அரசு வாங்கியது

கொள்கைகளை பேசி, கவர்ச்சியாக பேசி ஆட்சியை பிடித்து ஆட்சியின் மூலம் ஊழலை மட்டுமே செய்து கொண்டு இருக்கும் அரசுதான் இன்று இருந்துகொண்டு இருக்கிறது. மேம்பட்ட நாடுகளில் வளர்ச்சி, ஊழல் என்று இருக்கும். பொருளாதாரத்தை உருவாக்கி, அதில் ஊழல்செய்வார்கள் இங்கு கடனை உருவாக்கி அதில் ஊழல் செய்கிறார்கள். இதுதான் பிரசினை. 4 வருடத்தில் 4 லட்சம் கோடி கடன்.
செட்டிங் செய்வது தவிர எதுவுமே தெரியாது. விஜய்யை பார்த்து நீங்கள் ஏன் நடிக்கிறீர்கள். அதுவும் விஜய் போடுகிற பேண்ட் சட்டையை மாற்றி நடித்தால் கூட பரவாயில்லை. இதில் இருந்து தெரிகிறது விஜய்க்கு முதல்வரும் ரசிகர்தான். நாம எல்லோரும் அண்ணன் என்று கூப்பிடுவோம். அடுத்த நாள் பார்த்தால் வாரிசு.. பிறப்பால் பதவி அடைந்தவர் அண்ணன் என்று சொல்லி பேச ஆரம்பித்துவிட்டார். என்ன நடக்குது என்றெ தெரியல. ஜான் ஆரோக்கியசாமிக்கும், புஸ்ஸி ஆனந்துக்கும் , எனக்கும் பிரச்சினை என பேசுகிறார்கள். டைம் வேஸ்ட் பண்ணதீங்க. நாங்கள் தெளிவாக இருக்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications