கோர்ட் கோர்ட்டா போகணும்.. முடிவு எடுத்த திமுக.. அண்ணாமலைக்கு போகிற இடமெல்லாம் கேட்.. அப்போ அதுதானா?
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு போகிற இடமெல்லாம் கேட் போட தொடங்கி இருக்கிறது ஆளும் திமுக தரப்பு.
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நேற்று திமுக மூத்த எம்பி, மாக்கலவை குழு தலைவர் டி ஆர் பாலு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். தன்னை பற்றி பரப்பிய வதந்திக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் .

சொத்துக்கள் குறித்து பரப்பிய வதந்திக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் 100 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.
அண்ணாமலைக்கு எதிராக அதிகாரபூர்வமாக தொடுக்கப்படும் 3வது மன நஷ்ட வழக்கு ஆகும் இது.
என்ன காரணம்?
பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து திமுகவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்தார். திமுகவினரின் சொத்து பட்டியல்கள் என்று குறிப்பிடப்படும் எக்ஸல் சீட் ஒன்றை அவர் வெளியிட்டார்.
அதேபோல் முதல்வர் ஸ்டாலின் மீதும் சில புகார்களை அண்ணாமலை பிரஸ் மீட்டில் அவர் வைத்தார். திமுக மீது சரமாரி புகார்களை வைத்தார்.
திமுக அமைச்சர்களின் சொத்து மதிப்பு என்றும் சிலவற்றை காட்டினார்.
திமுகவின் சொத்து மதிப்பு என்று அண்ணாமலை வெளியிட்ட ஆவணங்களுக்கு 48 மணி நேரத்தில் ஆதாரம் கட்ட வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்படும். 500 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு அவர் மீது வழக்கு தொடுக்கப்படும், என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்எஸ் பாரதி மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக திமுகவின் டாப் தலைவர்கள் அடுத்தடுத்து மான் நஷ்ட வழக்கு தொடுத்து வருகின்றனர்.
ஆர்எஸ் பாரதி வழக்கு இல்லாமல் அண்ணாமலை மீது மேலும் சில வழக்குகள் பதியப்படும் என்று கூறப்படுகிறது.
சொத்து பட்டியல் விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு 48 மணி நேரம் கெடு விதித்து அமைச்சர் உதயநிதி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ரூ 2039 கோடி சொத்து சேர்த்ததாக ஒரு அவதூறு தகவலை தெரிவித்துள்ளீர்கள்
அதற்கு ஆதாரம் இருந்தால் காட்ட வேண்டும். இல்லையென்றால் நிபந்தனையற்ற மன்னிப்பை அண்ணாமலை அடுத்த 48 மணி நேரத்திற்குள் கேட்க வேண்டும். இல்லையெனில் ரூ 50 கோடி நஷ்ட ஈட்டை கொடுக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் கனிமொழி எம்பி மீதும் அண்ணாமலை புகார்களை வைத்து இருந்தார். இந்த நிலையில் கனிமொழி அளித்த பேட்டியில், திமுகவினர் குறித்து அவதூறாக பொய் பரப்பிய அண்ணாமலைக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நானும் என் தரப்பில் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்புவேன் என்று கூறி உள்ளார்.
கோர்ட் கோர்ட்டா ஏற போகிறார்?

முன்னதாக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்புச்செயலார் ஆர்எஸ் பாரதி அளித்த பதிலில், அண்ணாமலைக்கு 15 நாட்கள் அவகாசம் , அதற்குள் திமுக சொத்துக்கான பத்திரங்களை வெளியிடுங்கள் என்று என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்எஸ் பாரதி சவால் விடுத்து உள்ளார்.
செய்தியாளர்கள் நேரத்தை அண்ணாமலை வீணடித்துவிட்டார். சாலமன் பாப்பையா பட்டிமன்றம் போல காமெடியாக இருந்தது அண்ணாமலை பேச்சு . அண்ணாமலை பேச்சு சிரிப்பை வரவழைத்தது.
அவர் எல்லாம் எப்படி ஐபிஎஸ் ஆனார், எப்படி பாஸ் ஆனார் என்ற கேள்வி வருகிறது. தேர்தலில் போட்டியிட்டவர்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்பது விதி.
திமுக சார்பாக போட்டியிட்டவர்களும் சொத்து விவரங்களை வெளியிட்டனர். அதில் பொய் சொல்லி இருந்தால் நடவடிக்கை எடுக்கும் விதி முறை இருக்கிறது. அண்ணாமலை என்ன மோடி மீது குற்றச்சாட்டு வைக்கிறாரா? என்ன இது? அவர் இப்படி பேசலாமா?
அவதூறு பரப்பிய அண்ணாமலை கண்டிப்பாக நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். முதல்வர் ஸ்டாலின் மீது அண்ணாமலை புகார் வைத்து இருக்கிறார். 2006-2011 ஆட்சியில் மெட்ரோ பணியில் ஊழல் என்று கூறி உள்ளார். 2014ல் இருந்து மோடி தானே ஆட்சியில் இருக்கிறார். அவர் மீது கண்டிப்பாக நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களுக்கு சுற்றுப் பயணம் செய்வார், என்று கூறினார்.
அதன்படியே தற்போது அண்ணாமலைக்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகள் போடப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications