வாக்கு எண்ணிக்கை நாளில் குஷ்பு சுகவீனம்.. திமுகவின் துரைமுருகனும் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை பெரும் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல நடிகை குஷ்புவும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக தி.மு.க பொருளாளர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடிய வகையில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கையும் நடந்து வருகிறது.

ட்விட்டர்

ட்விட்டர்

இந்த நிலையில், பிரபல நடிகை குஷ்பு தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான அவர், நாட்டு நடப்புகள் குறித்து பல்வேறு கருத்துக்களை ட்விட்டர் மூலமாக தெரிவித்து வந்தார்.

சோகம்

சோகம்

இப்போது உடல்நலம் குன்றியதையும் ட்விட்டர் மூலமாகவே வெளிப்படுத்தி உள்ளார். அதில், "தற்போது மருத்துவமனையில் தான் இருக்க முடியும், டிவி விவாதங்களில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது" என்று ட்விட்டரில் சோகத்துடன் பதிவிட்டுள்ளார். ஆஸ்பத்திரியில் தான் அனுமதிக்கப்பட்டு உள்ளதையும் செல்பியாக எடுத்து போட்டுள்ளார்.

துரைமுருகன்

துரைமுருகன்

அதேபோல, திமுகவின் பொருளாளரும் மூத்த தலைவருமான துரைமுருகனுக்கு உடல் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் துரைமுருகன். கடந்த ஜனவரி மாதம்கூட நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வீடு திரும்பியிருந்தார்.

கவலை

கவலை

இப்போது மீண்டும் உடல்நலக்குறைபாடு ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை விவரங்கள் ஒரு பக்கம் மகிழ்ச்சியை தந்தாலும், துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது, திமுகவினரிடையே பெருத்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+