திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கு.. தம்பியின் ஜாமீன் மனு தள்ளுபடி - ஹைகோர்ட் உத்தரவு
ரூ.5 லட்சம் கடனை திரும்பக் கேட்டதால் நண்பர்கள் உதவியுடன் மஸ்தானை கொன்றதாக போஸீஸாரிடம் அவரது தம்பி ஆதம்பாஷா வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: திமுக முன்னாள் எம்பி டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில் அவரது தம்பியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மஸ்தான் தஸ்தகீர். இவருக்கு 66 வயது. இவர் அதிமுகவில் 1995-ம் ஆண்டு முதல் 2001 -ஆம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்பியாக இருந்து வந்தார். பின்னர், அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் மாநில சிறுபான்மையினர் நலச் செயலாளராக மஸ்தான் இருந்து வந்தார். இந்த சூழலில், கடந்த ஆண்டு டிசம்பர் 22-ம் தேதி அவரது வீட்டிலிருந்து திருச்சி நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரை அவரது உறவினரான இம்ரான் என்பவர் ஓட்டி வந்ததாக தெரிகிறது. அப்போது மஸ்தானுக்கு திடீரென திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

தம்பிக்கு தொடர்பு
இந்நிலையில், மஸ்தான் சாவில் மர்மம் உள்ளதாக அவரது மகன் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, சந்தேகத்தின் அடிப்படையில் காரின் டிரைவர் இம்ரான் உட்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய போது, அவர்களிடம் செல்போன் உரையாடல் குறித்து விசாரிக்கப்பட்டது. அப்போது, மஸ்தான் கொலையில் அவரது தம்பி கவுஸ் ஆதம்பாஷாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

பரபர வாக்குமூலம்
இதன் தொடர்ச்சியாக, அவரது தம்பியான கவுஸ் ஆதம்பாஷாவை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில்,
பூர்வீக சொத்து தகராறு, பணப்பிரச்சினையே மஸ்தான் கொலைக்கு முக்கிய காரணம் என்றும், ரூ.5 லட்சம் கடனை திரும்பக் கேட்டதால் நண்பர்கள் உதவியுடன் மஸ்தானை கொன்றதாக போஸீஸாரிடம் அவரது தம்பி ஆதம்பாஷா வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜாமீன் வழங்கக் கூடாது
இந்த சூழலில், தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதம்பாஷா மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கானது, நீதிபதி தமிழ்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மஸ்தானின் மகன் ஹரிஸ் ஷாநவாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுராஜ், "மஸ்தான் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தடய அறிவியல் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குடும்பப் பிரச்சனைக்காக அவரை கொலை செய்துள்ளனர். எனவே ஆதம்பாஷாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது" என்று வாதிட்டார்

ஜாமீன் மனு தள்ளுபடி
காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் வினோத், டாக்டர் மஸ்தான் மரணம் தொடர்பாக தடய அறிவியல் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். மேலும் விசாரணை ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார் இதையடுத்து, கவுஸ் ஆதம்பாஷாவின் ஜாமீன் மனுவை நீதிபதி தமிழ்ச்செல்வி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
DVAC தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் மிட்டல் பாஜக ஆதரவாளர்.. தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எப்படி வழங்கப்படும்? இப்போதே திட்டத்தை கையில் எடுக்கும் திமுக? கசிந்த தகவல்! -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம்












Click it and Unblock the Notifications