திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி காலமானார்
Recommended Video
சென்னை: திமுக முன்னாள் எம்பியும் பத்திரிகையாளருமான வசந்தி ஸ்டான்லி உடல் நலக்குறைவால் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 56.
திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில் இந்திய பாராளுமன்றத்தின் மேல் சபையான ராஜ்ய சபாவில் தமிழகத்தின் பிரதிநிதியாக தோந்தெடுக்கப்பட்டு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ம் ஆண்டு வரை எம்பியாக பணியாற்றியவர் வசந்தி ஸ்டான்லி.

வசந்தி ஸ்டான்லி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் கனிமொழியின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவருடைய மரணம் திமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டையில் பிறந்தவர் வசந்தி ஸ்டான்லி. சட்டம் பயின்ற அவர், திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினர், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.
வசந்தி ஸ்டான்லி மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல திமுக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடல் சென்னை லாயிட்ஸ் காலனியில் உள்ள அவரது வீட்டில் மாலை 6 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
வசந்தி ஸ்டான்லி மறைவுக்கு கனிமொழி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "வசந்தி ஸ்டான்லியின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. பல சவால்களை தனித்து நின்று சமாளித்தவர். நல்ல பேச்சாளர். எதையும் எதிர்த்து போராடக்கூடியவர். தோழி. அவரது மறைவு மகளிர் அணியின் சகோதரிகளுக்கும் எனக்கும் பெரிய இழப்பு" என பதிவிட்டுள்ளார்.
வசந்தி ஸ்டான்லியின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது. பல சவால்களை தனித்து நின்று சமாளித்தவர். நல்ல பேச்சாளர். எதையும் எதிர்த்து போராடக்கூடியவர். தோழி. அவரது மறைவு மகளிர் அணியின் சகோதரிகளுக்கும் எனக்கும் பெரிய இழப்பு.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 28, 2019












Click it and Unblock the Notifications