சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக பிரமுகரின் போலி மதுபான ஆலை- போலீசுக்கு போட்டு கொடுத்ததால் திண்டுக்கல் இளைஞர் படுகொலை?

Google Oneindia Tamil News

சென்னை: திண்டுக்கல் அருகே திமுக பிரமுகர் இன்பராஜ் நடத்தி வந்த போலி மதுபான ஆலையை போலீசில் போட்டுக் கொடுத்ததால்தான் ஸ்டீபன் என்ற இளைஞர் ஒருவர் தலை துண்டித்துப் படுகொலை செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி இபி காலனியில் நிர்மலாதேவி என்ற பெண் சில நாட்களுக்கு முன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது தலையை தனியாக துண்டித்தனர் கொலையாளிகள்.

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு இன்பார்மராக இருந்து அடைக்கலம் கொடுத்தவர் நிர்மலாதேவி. அதனால்தான் நிர்மலா வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது துண்டிக்கப்பட்ட தலை, திண்டுக்கல் நந்தவனப்பட்டி பசுபதி பாண்டியன் வீடு முன்பாகவும் வைக்கப்பட்டது.

இறையன்பு எடுத்த ஆக்சன்.. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு செக்- களமிறக்கப்பட்டார் ஐஏஎஸ் சுப்ரியாஇறையன்பு எடுத்த ஆக்சன்.. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவருக்கு செக்- களமிறக்கப்பட்டார் ஐஏஎஸ் சுப்ரியா

ஸ்டீபன் க்கொலை

ஸ்டீபன் க்கொலை

அதேநாளில் திண்டுக்கல் அருகே அனுமந்தராயன்கோட்டை பேருந்து நிலையத்தில் ஸ்டீபன் என்ற இளைஞர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு கிடந்தது. அவரது உடல் மட்டப்பாறை அருகே வீசப்பட்டிருந்தது. திண்டுக்கல்லில் ஒரே நாளில் ஒரே பாணியில் நடந்த இந்த தலை துண்டிப்பு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின்னர் தமிழகம் முழுவதும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் அடுத்தடுத்த நடத்தப்பட்ட டிஸ்ஆர்ம் ஆபரேஷனில் 2000க்கும் அதிகமான ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேம்பாலத்தில் இருந்து குதித்ததால் உடைந்தது கால்

மேம்பாலத்தில் இருந்து குதித்ததால் உடைந்தது கால்

திண்டுக்கல் நிர்மலாதேவி கொலை வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிலர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்த நிலையில் திண்டுக்கல் ஸ்டீபன் கொலை வழக்கில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான மன்மதன் என்பவர் போலீசார் பிடிக்க வந்த போது தப்பி ஓடினார். மேலும் திண்டுக்கல்- திருச்சி மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து அவர் தப்பிக்கவும் முயன்றார். இதனால் அவரது கால் உடைந்தது. இதையடுத்து மாவுக்கட்டுப் போட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலி மதுபான ரெய்டு

போலி மதுபான ரெய்டு

கடந்த 22-ந் தேதி அனுமந்தராயன் கோட்டை திமுக பிரமுகர் இன்பராஜூக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 11,143 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனை நடந்த இரவுதான் ஸ்டீபன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

காட்டி கொடுத்ததால் கொலை

காட்டி கொடுத்ததால் கொலை

அதாவது இன்பராஜுன் போலி மதுபான ஆலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததே ஸ்டீபன் என சந்தேகித்துள்ளனர். இதனையடுத்து ஸ்டீபனை வரவழைத்து முதலில் மதுபானம் வாங்கிக் கொடுத்தனர். பின்னர் சாப்பாடும் வாங்கி கொடுத்து அனுப்பி வைத்தனர். அப்போது அனுமந்தராயன் கோட்டை பேருந்து நிலையத்தில் ஸ்டீபன் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த ஒரு கும்பல், மதுபோதையில் இருந்த ஸ்டீபனை வெட்டிப் படுகொலை செய்து தலையை துண்டித்து. பின்னர் உடலை மட்டப்பாறை அருகே வீசிச் சென்றது என்கிறது போலீஸ் தரப்பு.

English summary
Dindigul Police sources said that DMK Functionary Inbaraj has linked with Dindigul Youth Murder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X