1971 இல் மிருக பலம் பெற்ற திமுக! சுருண்டு விழுந்த காமராஜர்? இந்திராவுக்கு தண்ணி காட்டிய கருணாநிதி!
சென்னை: 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதுவரை தேசிய தலைவர்களாக வலம் வந்த காமராஜர் மற்றும் ராஜாஜியின் செல்வாக்கு படுமோசமாகச் சரிவைச் சந்தித்திருந்தது.
நாட்டில் நான்காவது முறையாக 1967இல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுகவை ஆதரித்த ராஜகோபாலாச்சாரியின் சுதந்திரா கட்சி 1971இல் நடந்த தேர்தலில் காமராஜின் ஸ்தாபன காங்கிரசை ஆதரித்து களம் கண்டது. அப்போது இந்திய அளவில் இந்திரா காந்தி தலைமையிலும் ஒரு அணியும் காமராஜர் தலைமையில் ஒரு அணியுமாகக் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. இரண்டு கட்சிகளும் அதே மூவர்ணக் கொடியைப் பயன்படுத்தின.

இந்திராவின் காங்கிரஸ் கட்சி Requistitionists என அடையாளம் கொடுக்கப்பட்டது. காமராஜர் தலைமையில் மூத்த தலைவர்களை உள்ளடக்கிய இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சி Organisation என்று அழைக்கப்பட்டது. அதுதான் தமிழ்நாட்டில் ஸ்தாபன காங்கிரஸ் என்று சொன்னார்கள்.
அண்ணா மறைவுக்குப் பின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவில் முதலமைச்சரான கருணாநிதி தலைமையிலான திமுக முதன் முறையாகத் தேர்தலில் களம் கண்டது. நேரு மற்றும் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் காமராஜர், நாட்டின் பிரதமராக இந்திராவை அமர்த்தினார். அவர் தன் செல்வாக்கை வலுப்படுத்த கட்சியின் மூத்த தலைவர்களை ஓரங்கட்டினார். காமராஜை மீறிய முடிவுகளை எடுத்தார். ஆகவே, காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஸ்தாபன காங்கிரஸ் ஆனது. இந்திரா தன் கட்சியை இந்திரா காங்கிரஸ் ஆனது.
திமுக தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருந்தது. அதன் ஆட்சிக் காலம் ஒரு ஆண்டு இருக்கும்போதே நாட்டில் பொதுத் தேர்தலை நடத்த இந்திரா முடிவு செய்தார். அவரது அறிவுறுத்தலை ஏற்று அமைச்சரவையை ஓராண்டுக்கு முன்னதாகவே கலைப்பதாகப் பரிந்துரைத்தார் கருணாநிதி.
மக்களைவை 1970 டிசம்பர் மாதம் கலைக்கப்பட்டு, 1971 பிப்ரவரியில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. திமுக பொதுக்குழு ஜனவரி 3 ஆம் தேதி கூடியது. அதில் அமைச்சரவை கலைப்புக்கு ஒப்புதல் கிடைத்தது. ஜனவரி 5 ஆம் தேதி ஆளுநர் சட்டசபை கலைக்கப்பட்டதாக அறிவித்தார்.
"இந்தியாவைக் காக்க இந்திரா - கம்யூனிஸ சதிகளை முறியடிக்கச் சுதந்திரா கட்சிக்கு நட்சத்திரம் சின்னத்திலும் காமராஜர் ஸ்தாபன காங்கிரசுக்கு கை ராட்டை சின்னத்திலும் வாக்களிக்கும்படி" ராஜாஜி அறிக்கை வெளியிட்டார்.
இழுபறியில் திமுக கூட்டணி
இந்திரா காங்கிரஸ் மாநிலத் தலைமையாக சி.சுப்பிரமணியன், எம்.பக்தவத்சலம் இருந்தனர். பக்தவத்சலத்தை முதல்வர் நாற்காலியில் அமர்த்தியவர் காமராஜர். அவர் இந்திரா ஆதரவு நிலைப்படை எடுத்திருந்தார். இந்திரா காங்கிரஸ் சட்டசபையில் 80 சீட்டுகளைக் கேட்டது. 20 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கேட்டது. ஆனால், திமுக தரப்பு சட்டமன்றத்திற்கும் 15 தொகுதிகளையும் 5 எம்.பி சீட்டுகளும் தருவதாகச் சொன்னது. அதைக் கேட்டு, 'இது சுயமரியாதைக்கு இழுக்கு' என்றனர் இந்திரா கட்சித் தலைவர்கள். அதற்கு "எங்கள் இயக்கமே சுயமரியாதை இயக்கம்' என்று நகைச்சுவையாகச் சுட்டிக் காட்டிப் பேசினார் கருணாநிதி.
மீண்டும் 20 எம்.எல்.ஏ சீட்டுகள், 10 எம்.பி சீட்டுகளைக் கேட்டது இந்திரா தரப்பு. முன்னதாகவே கூட்டணிக் கட்சிகளுக்கு உரியத் தொகுதிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுவிட்டதாக கூறி முடியாது எனக் கைவிரித்தது திமுக தலைமை. கூண்டுக்குள் சிக்கிய புலியாக மாறியது இந்திரா கட்சியின் நிலைமை.
எனவே இறுதியில் 10 எம்.பி சீட்டுகள் ஒதுக்கப்பட்டது. முன்னரே 5 தொகுதிகளில் அறிவிக்கப்பட்ட திமுக வேட்பாளர்கள் விலக்கிக்கொள்ள முடிவு செய்தது திமுக. 20 தொகுதிகள் சட்டசபைக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. திமுக கூட்டணிக்கு 'மாற்றுக் கூட்டணி' எனப் பெயர் சூட்டப்பட்டது. ராஜாஜி, காமராஜ் தலைமையிலான அணிக்கு 'மகா கூட்டணி' எனப் பெயர் வைக்கப்பட்டது.
மாற்றுக் கூட்டணியில் 201 தொகுதிகளில் திமுக களம் கண்டது. 10 இடங்கள் சிபிஐ நின்றது பார்வர்ட் பிளாக் கட்சிக்கு 9 தொகுதிகள் கிடைத்தன. முஸ்லிம் லீக் 8, பிரஜா சோஷியலிஸ்ட் 4, தமிழரசு கழகம் 2 எனப் பகிர்ந்து அளிக்கப்பட்டன. நாடாளுமன்றத்திற்கு 20தொகுதிகளில் திமுக நின்றது. சிபிஐ 4 தொகுதியும் முஸ்லிம் லீக் பார்வேர்ட் பிளாக் தலா 1 எனக் களம் கண்டன.
சைதாப்பேட்டையில் மு.க வெற்றி
இத் தேர்தலில் கருணாநிதி சைதாப்பேட்டை சட்டசபை தொகுதியில் களம் கண்டார். அவர் 63,334 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்து நின்ற ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் 50,823 பெற்றார். க.அன்பழகன் புரசைவாக்கம் தொகுதியில் 47182 வாக்குகளைப் பெற்று வென்றார். எழும்பூரில் அரங்கண்ணல் 40,596 வாக்குகளை வாங்கி வென்றார். ஆயிரம் விளக்குத் தொகுதியில் கே.ஏ. மதியழகன் (38,891) வென்றார்.
திருவல்லிக்கேணியில் நெடுஞ்செழியன் (36,237) வெற்றிபெற்றார். மயிலாப்பூரில் அனந்த நாயகியும் தி நகரில் கே.எம். சுப்பிரமணியன் ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் வென்றனர்.
இந்தத் தேர்தலில் தேசிய கட்சிகள் சார்பாகப் பாரதிய ஜன சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட்) இந்தியத் தேசிய காங்கிரஸ் (Organisation). பிரஜா சோஷியலிஸ்ட் கட்சி, சமிக்யுக்தா சோஷியலிஸ்ட் பார்டி, சுதந்திரா கட்சி ஆகியவைக் களம் கண்டன.
மாநிலக் கட்சியாகத் திராவிட முன்னேற்றக் கழகம், பார்வேர்ட் பிளாக், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை போட்டியிட்டன. அதில் சிபிஐ 8 இடங்களில் வென்றன. திமுக 184 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. முஸ்லிம் லீக் 2 இடங்களையும் பிரஜா சோஷியலிஸ்ட் கட்சி 4 இடங்களையும் சுதந்திரா கட்சி 6 இடங்களையும் ஸ்தாபன காங்கிரஸ் 15 தொகுதிகளையும் கைப்பற்றின. இந்திரா காங்கிரஸ் 8 இடங்களை மட்டுமே பிடித்தது.
பெரும்பான்மை மிக்க பலத்துடன் திமுக ஆட்சியை அமைத்தது. மு.கருணாநிதி இரண்டாவது முறையாக முதல் அமைச்சரானதுடன் தேசிய அளவில் வலிமையான தலைவராக உருவெடுத்திருந்தார். காமராஜரின் ராஜாஜியும் தேசிய தலைவர்கள் என்ற இடத்திலிருந்து கீழே இறங்கி இருந்தனர்.
- எழுதியவர் கடற்கரய்
-
ஹசீனா சையத் கீழ்த்தரமான குணத்தை காட்டிட்டாங்க! காங்கிரஸ் மகளிர் அணி தலைவி அட்டாக்! -
ராகுல் வரலைன்னா.. பெரிய சிக்கலாகிடும்.. டெல்லியில் பதறிய தமிழக காங்கிரஸ் தலைகள்! என்னாச்சு? -
“குடிநீர் இன்றி கிராமமே காலி செய்ததா?”- அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு கருணாஸ் கொடுத்த பதிலடி! -
எகிறி அடிக்க ரெடியாகும் வில்லிவாக்கம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆப்பு! திமுக இறக்கிய முக்கிய ஆயுதம்! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
கையில் கறுப்பு-சிவப்பு கயிறு.. பாக்கெட்டில் ஸ்டாலின் படம்! தென்மாவட்டங்களில் அடித்து தூக்கும் ஓபிஎஸ் -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
மீண்டும் டிஆர்பி ராஜா அமைச்சர்..? கோரஸாக வந்த குரல்.. பிரச்சாரத்திலேயே உறுதி கொடுத்த உதயநிதி! -
திமுக வேட்பாளர் நிறுவனத்தில் ஐ.டி ரெய்டு.. பரபரக்கும் கரூர்!












Click it and Unblock the Notifications