கொரோனா எதிரொலி.. பொதுக்குழுவை ஒத்திவைத்தது திமுக.. கட்சி நிகழ்ச்சிகளும் கூண்டோடு ரத்து!
சென்னை: கொரோனா வைரஸ் எதிரொலியாக தமிழகம் முழுவதும் திமுக நிகழ்ச்சிகள் மார்ச் 31ம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாகவும். பொதுக்குழு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Recommended Video
இது தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 15.3.2020 அறிக்கையின் வாயிலாகா திமுக பொதுக்குழு கூட்டத்தில் 29.3.2020 ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

16.3.2020 கடிதத்தின் வாயிலாக கழகப்பொருளாளர் துரைமுருகன் பொதுச்செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட விழைவதாகவும் எனவே அவர் தமது பொருளாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் என்னிடம் தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொண்டு 29.3.2020 அன்று நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் கோவிட் -19 வைரஸ் பரவாம தடுக்கும் வகையிலும்- முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வண்ணம், தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பின் அடிப்படையில் ஏற்கனவே 29.3.2020 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட கழகப் பொதுக்குழு ஒத்திவைக்ககப்படுவததோடு, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ள கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் வருகிற 2020 மார்ச் 31 வரை ஒத்தி வைத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications