"நாலாம்தர அரசியல்வாதி".. கள்ளச்சாராயம் பலி.. அறிக்கை கேட்ட ஆளுநர் ரவி.. விளாசிய திமுக! பரபர ட்விஸ்ட்
சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணங்கள் குறித்து ஆளுநர் ஆர். என் ரவி விளக்கம் கேட்டதற்கு ஆளும் திமுக தரப்பின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விழுப்புரத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல்(38) என்பவர் விழுப்புரத்தில் பலியாகி உள்ளார்.

ஏற்கனவே செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதில் பலியான நபர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் கள்ளச்சாராயம் உச்சத்தில் இருந்தது. 90 களில் உச்சத்தில் இருந்த பிஸ்னஸ் ஆகும் இது. அதன்பின் அரசு தீவிரமாக செயல்பட்டு இதை முடக்கியது.
அப்போது கண்கள் போன பரிதாபமும், உயிர்கள் போன கொடூரமும் அரங்கேறியது. அதன்பின் டாஸ்மாக் வந்ததும் கள்ள சாராயத்திற்கான தேவை குறைந்தது. படிப்படியாக கள்ளச்சாராயம் அதிகம் ஆனது.

அறிக்கை: இந்த நிலையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணங்கள் குறித்து ஆளுநர் ஆர். என் ரவி தலைமை செயலாளர் இறையன்புவிடம் அறிக்கை கேட்டு இருந்தார்.
இதற்கு திமுக தரப்பின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், அரசியல் தெளிவு, வரலாறுகள் அறியாத ஒருவர் தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டு அவர் செய்யும் அலப்பறைகள் அளவு கடக்கின்றனர் தமிழ்நாட்டில் விஷச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த வேதனை யில் அரசியல் நடத்திட சில அரசியல் ஆத்திரக்காரர்கள் முற்பட்டுள்ளநிலை யில் நமது ஆளுநர் ரவியும் தன் பங்குக்கு அந்தத் துயரச் சம்பவத்தில் விளம்பர வெளிச்சம் தேட முற்பட்டுள்ளார்!
அவர் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்று ஊடகங்களிலும், செய்தித்தாள்களிலும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டுள்ளன. ஆளுநர் விரிவான விளக்க அறிக்கை கேட்பதில் என்ன தவறு?- என்று ஒரு சிலர் கேட்கக்கூடும்!
ஆளுநர் கேட்பதில் தவறு இல்லை; கேட்ட விதம்தான், அவர் எத்தகைய விஷமத்தனத்தோடு - விஷம் கக்கி யுள்ளார் என்பதை வெளிப்படையாக் குகிறது! நடந்தவை குறித்து முழு விபரங்களை அரசின் மூத்த அதிகா ரியை தொலைபேசி யிலோ, நேரிலோ அழைத்து அறிந்து கொள்ள ஆளுந ரால் முடியும் என்றாலும், அப்படிச் செய்யாது. அதனை ஒரு அறிக்கை யாக வெளியிட்டு ஊடகங்களுக்கு அனுப்பி. தான் ஏதோ பெரிய செய லைச் செய்து விட்டதாக எண்ணும் சிறுபிள்ளைத்தனம் தான், ஆளுநரின் நெஞ்சம் எல்லாம் எவ்வளவு வஞ்சம் உள்ளது. என்பதை உணர்த்துகிறது.
ஆளுநர் ரவி விளக்கம் கேட்டு, அனுப்பியுள்ள அறிக்கையின் ஒவ் வொரு வரியிலும், விளக்கம் என்ற பேரில் கேட்டுள்ள சில கேள்விகள்; அவரது அரசியல் தெளிவற்றத் தன் மையின் மொத்த வெளிப்பாடு மட்டு மல்ல; அவர் கழக அரசை நோக்கி பாய்ந்து எழுப்பியுள்ள ஒவ்வொரு கேள்வியும், அவரது எஜமானர்கள் மேற்பார்வையில் நடக்கின்ற குஜராத் அரசையும் தாக்கிக் கடித்துக் குதறும் என்பதை அறியாமல் அசட் டுக் கேள்விகளை எழுப்பியுள்ளார்!.
இந்தக் கேள்விகளை அரசிடம் எழுப்பு முன் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறும் குஜராத் (2022), உத்தரப்பிரதேசம் (2019), மத்தியப் பிரதேசம் (2021) போன்ற பி.ஜே.பி. ஆளும் மாநிலங் களில் நூற்றுக்கணாக் கானோர் விஷச் சாராயம் குடித்து பலியானார்களே; அப்போது அங்குள்ள ஆளுநர்கள் இப்படி விஷமத் தனத்தோடு ஆளும் பா.ஜ.க. அரசிடம் விளக்கம் கேட்டு அறிக்கை வெளியிட்டனரா? என்பதையாவது கேட்டறிந்திருக்க வேண்டாமா?
தான் மெத்தத் தெரிந்த மேதை போல சட்டமன்றத்தில் அரசு தயாரித் துத் தந்த உரையைப் படிக்காது. அதிலே இடைச் செருகல்கள் செய் தும், சில பகுதிகளை விடுத்தும் பேசி அதன்பிறகு முதலமைச்சர் எடுத்த சாதுரிய முடிவால் சூடுபட்டு சட்டப் பேரவையை விட்டு கருத்த முகத் தோடு ஓட்டமும் நடையும் என்பார். களே அதுபோல வெளியேறிய நிகழ்ச் சிகளை எல்லாம் அடிக்கடி ஆளுநர் ரவி மறந்து விடுகிறார். ஒருமுறை சூடுபட்ட பூனை கூட மீண்டும் அந்தக் காரியத்தைச் செய்யத் தயங்கும். ஆனால் ரவி, தான் வகிக்கும் பதவிக் குப் பெருமை சேர்க்கும் காரியங் களில் ஈடுபடாது. எப்போதும் சிறு பிள் ளைத்தனத்தோடு செயல்பட்டு கடும் விமர்சனத்திற்கு ஆளாகிறார்! அவ ரைப் பொறுத்தவரை 'நெகட்டிவோ. "பாசிட்டிவோ" எது எப்படி இருந்தாலும் சரி, விளம்பர வெளிச்சம் தன் மீது பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இப்போது தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் ரவி, தலை மைச் செயலாளர் வெ.இறையன் புக்கு அனுப்பியுள்ள அந்தக் கடிதத் தில் கேட்டுள்ள விபரங்களை
ஊடகங்களும் செய்தி ஏடுகளும் வெளியிட்டுள்ளன.
"தமிழகத்தில் இரண்டாயிரம் பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட டுள்ளனர். கள்ளச் சாராயம் இல்லை என்றால் அவ்வளவு பேரை கைது செய்ய அவசியம் ஏன் நேரிட்டது? அவர்கள் கைது செய்யப்பட்டதற் கான் காரணங்கள் என்ன? என் பதை விளக்கமான அறிக்கையா கத் தரவேண்டும் - என தலைமைச் செயலாளர் இறையன்புக்கு ஆளு நா ரவி கடிதம் எழுதியுள்ளதாக ஏடு களில் செய்தி வெளிவந்துள்ளது. இந்தச் சம்பவத்தின் விசாரணை எந்தக் கட்டத்தில் உள்ளது? - என்ப தையும் அறிக்கையாக அளிக்க வேண்டும். - என ஆளுநர் ரவி கேட்டிருப்பதாக செய்திகள் ஏடு களில் வெளி வந்துள்ளன!
நடந்துவிட்ட விஷச்சாராய சாவுகள் குறித்தும் அதன் காரணமாக அரசு எடுத்திடும் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் ஊடகங்கள், ஏடுகளில் செய்திகள் தெளிவாக வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சம்பவங் கள் மேலும் நடைபெற்றுவிடக் கூடாதே என்று மிகுந்த எச்சரிக்கையோடு அரசின் எல்லாவிதச் சக்தி களும் முடுக்கப்படுகின்றன; இதற்குத் தேவை யான அரசு இயந்திரங்கள் விரைவாகச் செயல்பட னென்ன. என் செய்ய வேண்டும் என்பதற் காக முதலமைச்சர்- தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு முழு வீச்சுடன் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் மக்கள் மத்தியில் தனது இருப்பைக் காட்டிக் கொள்ள
ஆளுநர் ரவி அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். விபரம் தெரியாத நாலாம்தர அரசியல்வாதிபோல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்!
ஆளுநர் ரவிக்கு ஒரே நாளில் தமிழ்நாட்டில் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதும், கள்ளச்சாரா யம் இல்லை என்றால் அவ்வளவு பேரை கைது செய்ய அவசியம் ஏன் ஏற்பட்டது என்றும் சந்தேகம் எழுந் துள்ளது! இந்தச் சந்தேகத்தை தமிழ் நாடு தலைமைச் செயலாளரிடம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யக் கோருவதை விடுத்து,
இதுபோன்று 2 ஆயிரம் பேரை ஏன் கைது செய்யவேண்டும் என குஜராத் ஆளுநருக்கு ஒரு தொலை பேசி போட்டு கேட்டிருந்தால் அவர் விளக்கி இருப்பார்.
குஜராத் மாநிலத்தில் மது விலக்கு அமலில் உள்ளது. காந்தி பிறந்த அந்த மாநிலத்தில் காந்தியார் பிறந்த இல்லத்துக்கு அருகில் எல்லாம் கள்ளச்சாராயம் மலிவுச் சரக்காக விற்பனையாவதாக பல நேரங் களில் புகைப்பட ஆதாரங்களுடன் ஏடுகளில் செய்திகள் வந்தன. அந்த குஜராத் மாநிலத்தில், ஆளுநர் ரவிக்கு இஷ்டமான பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீக அரசியல்தான் பல ஆண்டு காலமாக நடந்து வருகிறது. எல்லாம் அறிந்த அதிமேதாவியாக தன்னைக் கருதிக் கொண்டு அவ்வப்போது செயல்பட்டு வரும் ஆளுநர் ரவிக்கு இது தெரியா திருக்க நியாயமில்லை.
அங்கே அதாவது அந்த பி.ஜே.பி. ஆளும், மதுவிலக்கு அமுலில் உள்ள குஜராத் மாநிலத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு விஷச்சாராயத் துக்கு 42 பேர் பலியானதாகவும், நூற்றுக்கணக்கானோர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்ப தாகவும், பலர் கண் பார்வையைப் பறிகொடுத்ததாகவும் வெளிவந்த செய்திகள் ஆளுநர் ரவிக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்!
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் காவல் துறையினர் 2500 பேரை கைது செய்ததாகவும், ஏறத்தாழ 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ளச்சாராயத்தைக் கைப்பற்றி ள்ள தாகவும் ஏடுகளில் கொட்டை எழுத்துக்களில் செய்தி வெளிவந் ததை ஆளுநர் ரவி அறிந்தேயிருப்பார்; ஏனென்றால் அவர் மெத்தத் ரிந்த மேதாவி! தமிழ்நாட்டிலாவது மதுவிலக்கு அமுலில்லை.
குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமுலிலிருக்கிறது. இந்த விஷ மது அருந்தி பல பேர் மர ணம் அடைந்த நிலையில் குஜராத் போலீஸ் 2500 பேரை கைது செய்த போது அந்த மாநில ஆளுநர் குஜராத் அரசுக்கு, மதுவிலக்கு அமுலில் இருக்கும் மாநிலத்தில், அதனைத் தீவிரமாக நடைமுறைப்படுத்திவரும் நிலையில் இவ்வளவு பேரை அதாவது 2500 பேரை கைது செய்ய அவசியம் ஏன் ஏற்பட்டது" - என்று கேள்வி கேட்டு,
அது குறித்து அறிக்கை தாக்கல் செய்யக்கோரி கடிதம் எழுதி அதனை ஏடுகளுக்கும், ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்ததாக செய்திகள் வெளிவந்ததாகத் தெரியவில்லை.
ஆளுநர் ரவி விளம்பர வெளிச்சத் தில் இருக்க நினைத்தால், தனது பதவியைத் துறந்து அண்ணாமலை போல ஏதாவது ஒரு மாநிலத்தின் பி.ஜே.பி. தலைவராக ஆகிவிடலாம். அதைவிடுத்து தாறுமாறாகச் செயல் பட்டு ஆளுநர் பதவிக்குரிய தகுதி யைச் சீரழிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வருவதை நிறுத்துவது நாட்டுக்கு நல்லது!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications