சல்லி சல்லியா சிதறிய பிளான்.. முக்கிய "புள்ளி"களுக்கு திமுக குறி.. வெள்ளை கொடியுடன் மாஜிக்கள்!

ஊழல் அமைச்சர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க போகிறதாம் திமுக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில அதிமுக மாஜி அமைச்சர்கள் இந்த 2 மாதங்களாகவே எடுத்து வந்த சமாதான முயற்சிகள் எல்லாமே சுக்குநூறாக நொறுங்கி கொண்டிருக்கிறது.. ஊழல் புகார் குறித்த விசாரணையை திமுக துரிதப்படுத்தி உள்ளதாம்.. இதனால் அதிமுக கூடாரமே கதிகலங்கி போயுள்ளதாகவும், மீண்டும் திமுக தலைமையை சரிக்கட்டும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகின்றன..!

முக ஸ்டாலின் தன்னுடைய பிரச்சாரங்களில், மறக்காமல் சொன்ன ஒரு விஷயம், திமுக ஆட்சிக்கு வந்தால், அதற்கு ஊழல் புரிந்துள்ள அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்கள் மறுபடியும் தூசி தட்டி விசாரிக்கப்படும், அப்படி புகார்கள் உண்மை என நிரூபணமாகும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.

அமைச்சர்கள் மட்டுமல்லாமல், ஊழலுக்கு துணை புரிந்த அத்தனை அரசு உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

 அதிமுக புள்ளி

அதிமுக புள்ளி

இதையடுத்து, திமுக அரியணை ஏற துவங்கும் முன்பேயே, அதிமுகவின் முக்கிய புள்ளி, புதுக்கோட்டையில் இருந்து தூது அனுப்பினார்.. சில சமாதான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.. இவருக்கு பிறகு, நான்கைந்து அமைச்சர்கள், திடீரென திமுக அரசின் செயல்பாடுகளை வெளிப்படையாகவே புகழ்ந்து பேச தொடங்கிவிட்டனர்.. இதுவும் ஒருவகையில் சமாதான முயற்சியாகவே பார்க்கப்பட்டது.

 லிஸ்ட் ரெடி

லிஸ்ட் ரெடி

ஆனால், திமுக தலைமை எதையும் கண்டுகொள்ளவில்லை.. இப்போது தொற்று பணிகளில் முழு கவனத்தை செலுத்தி வந்தாலும், ஊழல் இல்லாத சிறந்த ஆட்சி என்பதை நிரூபிக்க, இதுபோன்ற அதிரடிகளையும் கையில் எடுக்க வேண்டிய நிலைமை உள்ளது.. அதற்காகத்தான், 'சுத்தமான கைகளை' உடைய ஐஏஎஸ் அதிகாரிகளை தன்னை சுற்றிலும் வைத்திருக்கிறார்..

நடவடிக்கை

நடவடிக்கை

இப்போது, ஊழல் பட்டியல் குறித்து அதிகாரிகள் சத்தமில்லாமல் விசாரணையைத் தொடங்கிவிட்டார்களாம்.. இருந்தாலும் கீழ் மட்டத்தில் மேலும் சில அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளார்களாம்.. அதற்கு பிறகுதான் விசாரணை வேகம் எடுக்குமாம்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

அதுமட்டுமல்லாமல், தொற்று வேகம் எடுத்து வரும்நிலையில், முழு கவனத்தையும் திமுக அதில்தான் செலுத்தி வருகிறது.. அதனால்தான், அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி அனைவரின் கருத்தை கேட்டு பெற்று வருகிறார்.. எடப்பாடி பழனிசாமிக்கு அரசு வீட்டில் தங்க அனுமதி, விஜயபாஸ்கருக்கு டீமில் பொறுப்பு, என அரசியல் நாகரீகம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், மற்றொரு புறம் தன்னுடைய "ஊழலற்ற அரசு" என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

சொதப்பல்

சொதப்பல்

இந்த விஷயம் தெரிந்துதான், மேலும் சில மாஜி அமைச்சர்கள் திமுக தலைமையை சமாதானப்படுத்த வெள்ளை கொடியுடன் காய் நகர்த்தி வருகிறார்களாம்.. இந்த 2 மாசமாக, எடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளும் சொதப்பலாகிவிட்டதே என்று நொந்து போயுள்ளார்களாம்.. எனவே, அதிமுகவில் இருந்து சென்ற செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், ராஜகண்ணப்பன், சேகர் பாபு போன்றவர்கள் மூலம் சமாதானமும் பேசி வருகிறார்களாம்... இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம்,. நயினார் நாகேந்திரன் ஒரு லிஸ்ட் எடுத்து வருகிறாராம்..

பாஜக

பாஜக

இவரும் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்றவர் என்பதால், ஊழல் மாஜிக்கள் யார் என்ற விவரங்களை எடுத்துள்ளாராம்.. எப்படியும், திமுக அரசு மாஜிக்கள் மீதான நடவடிக்கையை கிண்ட ஆரம்பித்தால், இவர்கள் பாஜகவின் உதவியைதான் நாடுவார்கள்.. அதை வைத்து, அவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியையும் பாஜக மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது..!

தொற்று

தொற்று

ஆக மொத்தம்.. இப்போதைக்கு தொற்று பிரச்சனையே தலையாக உள்ளதால், அதில் முழு கவனத்தை திமுக செலுத்தி வருகிறது.. இருந்தாலும், மாஜிக்கள் மீதான புகார்கள் துரிதமாவதும், இந்த விஷயம் தெரிந்து மாஜிக்கள் திமுகவை சமாதான படுத்த முயல்வதும் என அரசியல் களமே பிஸியாக இருந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+