தேசிய கல்வி தரவரிசையில் தமிழ்நாடு டாப்.. காரணம் திராவிட அரசுதான்- கல்வியாளர் கருத்து
சென்னை: மத்திய அரசு வெளியிட்ட (NIRF Rankings 2024) சிறந்த கல்வி தரவரிசையில் அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களுடன், தமிழ்நாடு டாப் இடத்தில் இருக்கிறது. தரமான கல்வி தரும் ஏராளமான கல்வி நிறுவனங்களுடன் தமிழ்நாடு உயர் கல்வியில் சிறந்து விளங்க திராவிட மாடல் அரசு தான் காரணம் என்று கல்வியாளர் முருகையன் பக்கிரிசாமி ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஒன் இந்தியா தமிழுக்கு கல்வியாளர் முருகையன் பக்கிரிசாமி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்ட பட்டியலில், தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் 18 தகுதியை பெற்றிருக்கிறது என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. இன்று வந்துள்ள பட்டியலில் 6 பல்கலைக்கலங்கள் மாநில அரசு நடத்துபவை ஆகும். அண்மையில் ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு குறித்து பேசும் போது, உயர்கல்வியில் சிறந்துவிளங்குவதாக பாராட்டினார். ஆளுநர் தமிழ்நாட்டை எப்போதுமே எதிர்க்கட்சிகள் போல் ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால் அவரே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கல்வி நிறுவனங்கள் பட்டியலில் வேளாண்மை முதல் மேலாண்மை வரை எல்லா கல்லூரிகளையும் எடுத்துள்ளார்கள். எல்லாவற்றிலும் சிறந்த இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இதனை பார்க்கும் போது, ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் அடித்து வந்ததை போன்று, தமிழ்நாடு கல்வியில் நிறைய சாதனை படைத்துள்ளது. உயர் கல்வியில் 53 சதவீதத்தை நாம் எப்போதோ எட்டி பிடித்துவிட்டோம். தேசிய உயர்கல்வி சேர்க்கை என்பது 27.2 ஆக உள்ளது. அவர்கள் 2030ல் 50 சதவீதத்தை அடைய வேண்டும் என்று நினைக்கிறது மத்திய அரசு. ஆனால் நாம் இப்போதே 53 சதவீதத்தை அடைந்துவிட்டோம்..
அப்படி உயர்கல்வியை அடைவதற்காக நிறைய திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. புதுமைப் பெண் திட்டம் என்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக பெண்கள் உயர் கல்வி சேர்க்கை தமிழ்நாட்டில் 34 சதவீதம் உயர்ந்துள்ளது. 12ம் வகுப்பு படித்தால் கிராமப்பகுதிகளில் ஒரு பெண் திருமணம் செய்து வைப்பார்கள். பின் தங்கிய பகுதிகளில் பார்த்தால் யாராவது ஒருவரிடம் (கல்யாணம்) பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று பார்ப்பார்கள்.. 18 வயதான பெண்ணை திருமணம் செய்து வைத்தால், அதற்கு தகுந்த சீர்வரிசை கொடுத்தால் போதும் என்ற மனநிலை இருந்தது. ஆனால் மாதம் 1000 ரூபாய் இளங்கலை பட்டப்படிப்பு படித்தால் கொடுக்கிறோம் என்று அறிவித்ததால் உடனடியாக பெண்கள் உயர்கல்வி சேர்க்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
பெண் குழந்தைகளுக்கு உள்ளது போலவே ஆண் குழந்தைகளுக்கு தற்போது தமிழ் புதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.. தமிழ்நாடு அரசு கல்வித்துறையை பொறுத்தவரை மிக அதிக கவனம் எடுத்துக்கொண்டுள்ளது. கல்வி ஒன்று தான் திருட முடியாத சொத்து கூறிய முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாதம் ஒரு முறையாவது கல்வி விழா நடக்கிறது. தமிழ்நாட்டில் கல்வியில் உலக அளவில் தமிழ்நாட்டு மாணவர்கள் வெல்ல வேண்டும் என்று முனைப்பில் முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார். முன்பெல்லாம் ஐஐடி என்றால் கான்பூர் ஐஐடி என்று சொல்வார்கள். இப்பேது சென்னை ஐஐடி ஆறாவது முறையாக இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனமாக முதல் இடத்திற்கு வந்துள்ளது.
நமது மாநிலத்ததை பொறுத்தவரை அந்த காலத்திலேயே கல்வி தான் சொத்தும் என்றும், புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு படிப்பை கொடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு விரும்பியது. ஒரு காலத்தில் மருத்துவப்படிப்பில் சேர வேண்டும் என்றால் சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று இருந்தது. அதை தூக்கி எறிந்தவர் நம்முடைய தந்தை பெரியார் அவர்கள் தான். கல்விக்காக திராவிட மாடல் அரசு நிறைய விஷயங்களை செய்து வருகிறது."இவ்வாறு கூறினார். இன்னும் நிறைய கருத்துக்களை கூறியுள்ளார். அதனை செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள வீடியாவில் காணுங்கள்.
-
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications