ஞாபகம் இருக்கா? கலைக்கப்பட்ட கருணாநிதி ஆட்சி! உதயநிதியின் பேச்சால் ஸ்டாலினுக்கு சு.சாமி ‛வார்னிங்’

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு பெரிய அளவில் விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்நிலையில் தான் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சி கலைப்பை குறிப்பிட்டு சுப்பிரமணியன் சுவாமி முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.

சென்னையில் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சில நாட்களுக்கு முன்பு சனாதன ஒழிப்பு என்ற பெயரில் மாநாடு நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலினின் மகனும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

 DMK govt dismissed by me, Subramanian swamy warns to CM Stalin for his son Udhyanidhi Sanatana speech

அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரிய அளவில் விவாதத்தை கிளப்பி உள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷா, பல மாநில பாஜக முதல்வர்கள் முதல் பாஜகவினர் அனைவரும் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் என்பது உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்து தான். அதாவது, ‛‛இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்காக எனது வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது.

கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம். எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள்'' என்றார்.

இதற்கு தான் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் நிலையங்களில் புகார்கள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த பரகாம்ச ஆச்சாரியா உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உதயநிதியின் தலையை கொண்டு வருவோருக்கு ரூ.10 கோடிக்கும் அதிகமான தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனால் தற்போது திமுக மற்றும் பாஜகவினர் இடையே இதுதொடர்பாக பெரிய அளவில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதிதியின் ஆட்சி கலைப்பை குறிப்பிட்டு அவர் முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

‛‛தற்கொலை செய்யும் நிலையில் திமுக உள்ளதா? சனாதன தர்மத்தின் மீதான முட்டாள்தனமான, தேசவிரோதத் தாக்குதல் என்பது 1990-91ல் விடுதலை புலிகளுக்கு துணையாக இருந்து கருணாநிதி தற்கொலை(ஆட்சி கலைப்பு) செய்தது போலானது. அப்போது நான் ராஜீவ் காந்தியின் ஆதரவுடன் விடுதலை புலிகளுக்கு கருணாநிதி உதவியதற்காக திமுகவின் ஆட்சியை கலைத்தேன். அதில் இருந்து கருணாநிதியின் மகன்(மறைமுகமாக முதல்வர் ஸ்டாலின்) பாடம் கற்று கொள்ள வேண்டும். மேலும் வெறிப்பிடித்தது போல் இந்துமத எதிர்ப்பை நிறுத்துங்கள். இல்லாவிட்டால்...'' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில் சுப்பிரமணியன் சாமி, ‛‛அமைச்சராக இருக்கும் ஸ்டாலின் மகன் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதிகோரி தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். மீண்டும் ஒருமுறை அவர் சனாதன தர்மத்தை இழிவுபடுத்தினால் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்வதற்கான வேலையை செய்வேன். ஏனென்றால் இந்தியா என்பது அனைத்து மாநிலங்களும் இணைந்தது தான். இதில் தனி கூட்டமைப்பு இல்லை என்பதை கடந்த 1991ல் நிரூபித்து உள்ளேன்'' என தெரிவித்துள்ளார். இதில் சுப்பிரமணியன் சுவாமி 1991 என குறிப்பிட்டு இருப்பது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்ட ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+