அடுத்த அதிரடி.. "வீரபாபு"வை களம் இறக்குகிறாரா ஸ்டாலின்.. மா.சு.வுடன் அவசர ஆலோசனை
சித்த மருத்துவர் வீரபாபுடன் மா.சுப்பிரமணியம் ஆலோசனை நடத்துகிறார்
சென்னை: நம் கஷ்டம் எல்லாம் தீர போகிறது.. விரைவில் வர போகிறார் சித்த மருத்துவர் வீரபாபு.. தமிழகம் எதிர்கொண்டு வரும் மிக கடினமான சூழலில், சித்த மருத்துவர் வீரபாபுவுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தி வருகிறார்.. இதையடுத்து புது நம்பிக்கை பிறந்துள்ளது..!

யார் இந்த வீரபாபு..?
தமிழகத்தில் முதல் சித்த மருத்துவ கோவிட்-19 பராமரிப்பு மையத்தை நடத்தியவர்தான் வீரபாபு.. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மருத்துவ சிகிச்சைக்காக அரசு ஒதுக்கிய ஜவஹர் கல்லூரி சித்த மருத்துவ மையத்தில் பணியாற்றியவர்.. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்று நோயாளிகளைக் குணப்படுத்தியவர்..

மருத்துவம்
பாரம்பரிய மருத்துவம், மூலிகை உணவுகள் மூலம் விரைவாக நோயாளிகளை குணமாக்கியதால் தமிழகம் முழுவதும் இவர் அறியப்பட்டார்.. 'உழைப்பாளி' என்னும் மருத்துவமனையை தொடங்கி, அங்கே 10 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டவர்.

சித்த மருத்துவம்
சித்த மருத்துவத்துறை அங்கீகரித்துள்ள, கபசுரக் குடிநீரோடு, ஆடாதொடை கசாயம், கற்பூரவள்ளி ரசம், சிறப்பு மூலிகை தேனீர் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு நோயாளியின் உடலுக்கு ஏற்ப தந்து, சூரிய ஒளி சிகிச்சையும் சேர்த்து அளிப்பவர். இவரிடம் 7 நாட்கள் சிகிச்சை பெற்ற 6 பேருக்கு, கொரோனா நெகட்டிவ் என்று வந்தது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பாரம்பரியமான மூலிகை மருத்துவத்தால், 7 நாட்களில் கொரோனாவிலிருந்து மக்கள் விடுபட்டு வந்ததால், பெரிதும் பேசப்பட்டவர்தான் வீரபாபு.

தமிழக அரசு
தற்போது தமிழகத்தில் தொற்றின் 2வது மிக மோசமாகி உள்ளது.. ஒருநாளைக்கு 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு இதை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.. அதில் ஒரு பகுதியாக, சித்த மருத்துவத்தையும் கையில் எடுத்துள்ளது.. அந்த வகையில் சித்த மருத்துவர் வீரபாபுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

எளிமை
இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அரசு தொடங்க முன்னெடுப்பாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனையோ ஆஸ்பத்திரிகளில் உள்ளே நுழையும்போதே ரூ.500, ரூ.1000 என்று கட்டணம் வாங்கும் நிலையில், பல ஏழை மக்களால் சிகிச்சை பெற முடியாத நிலைமை உள்ளது.. அந்த வகையில் எளிமையான சித்த மருத்துவம் பெரிதும் கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது..

வீரபாபு
ஒருவேளை வீரபாபு இனி தொடர்ந்து தொற்று பாதித்த மக்களுக்கு சிகிச்சை தர ஆரம்பித்தால், நிச்சயம் இது தமிழக மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும். கொரோனா பாதிப்பு திமுக அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறி உள்ள நிலையில், கொரோனாவுக்கு இன்னும் மருந்தே கண்டுபிடிக்காத நிலையில், அலோபதியில் மருந்துக்காக ஆயிரக்கணக்கில் பணத்தை கொட்டி வரும் நிலையில், வீரபாபுவை அழைத்து தமிழக அரசு சந்தித்து பேசி வருவது புது நம்பிக்கையையும், தெம்பையும் தந்து வருகிறது..!
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை!












Click it and Unblock the Notifications