புயல் வேகத்தில் ஸ்டாலின்! இன்று ஒரே நாளில் 9 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு! பரபரக்கும் அறிவாலயம்
சென்னை: இன்று ஒரு நாளில் மட்டும் 9 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகிறது திமுக. காங்கிரஸ், மதிமுக, தவாக, மஜக, எஸ்.டி.பி.ஐ, கொங்கு இளைஞர் பேரவை கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொமதேக மற்றும் மமகவுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை, ஆளுங்கட்சியான திமுக கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் நடத்தி வருகிறது. சென்னை அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

முதல் நாளில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுடன் நேற்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது திமுக.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகள் ஒதுக்குவதாக திமுக தரப்பில் கூறப்பட்டது. அதற்கு கடந்த தேர்தலை போல் 6 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட்கள் வலியுறுத்தினர். தேமுதிக மற்றும் புதிய கட்சிகள் வரவைச் சுட்டிக்காட்டி தொகுதிகளை குறைத்துக் கொள்ள திமுக தரப்பு வலியுறுத்தி உள்ளது.
கடந்த தேர்தலில் 3 தொகுதிகளில் போட்டியிட்ட கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்க திமுக சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்போது, இந்த சீட் எண்ணிக்கை உறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் பிரதான கூட்டணி கட்சியாக உள்ள காங்கிரஸுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 28) நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
0க்கும் மேற்பட்ட தொகுதிகளை வழங்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பு கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளதை சுட்டிக்காட்டி, கடந்த தேர்தலில் வழங்கப்பட்ட 25 தொகுதிகளையே வழங்க முடியும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், 1 மாநிலங்களவை சீட் வழங்குவதற்கும் திமுக சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து, மதிமுக, வேல்முருகன் தலைமையிலான தவாக, தமிமுன் அன்சாரி தலைமையிலான மஜக, நெல்லை முபாரக் தலைமையிலான எஸ்.டி.பி.ஐ, தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை இன்று நடத்துகிறது திமுக பேச்சுவார்த்தைக் குழு.
மேலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஈஸ்வரனின் கொமதேக மற்றும் மமகவுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. இன்று ஒரு நாளில் மட்டும் 9 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகிறது திமுக. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின். விசிக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளுடன் நாளை மறுநாள் (மார்ச் 2) திமுக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
-
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு -
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி! -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
சொத்து கணக்கை காட்டுவாரா சங்கீதா விஜய்? தவெக தலைவர் மொத்த மதிப்பும் இவ்வளவா? திமுக மாஸ்டர் பிளான் -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
கோட்டையை எட்டிப்பிடிக்கும் ‘மகளிர்’ மேஜிக்! ரூ.2000 தேடி வருதுங்க! வங்கி கணக்கில் அடிக்கும் ஜாக்பாட் -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
புதிய கட்சிகள் வரவால் திமுகவுக்கு நெருக்கடி.. 165-க்கும் குறைவான தொகுதியில்தான் இந்த முறை போட்டியா? -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு? -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள் -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல்












Click it and Unblock the Notifications