மன்னார்குடி கலகலக்க.. சைலன்ட்டான சசி.. இதான் சான்ஸ்.. அந்த இடத்திற்கு மீண்டும் ஸ்கெட்ச் போட்ட திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்ன நடந்தாலும்.. எங்கு தோல்வி அடைந்தாலும் மீண்டும் கண்டிப்பாக மன்னார்குடியில் வென்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் திமுக இருக்கிறது. இங்கு மீண்டும் டிஆர்பி ராஜாதான் எம்எல்ஏ என்று திமுக தரப்பு முழு நம்பிக்கையோடு இருக்கிறது.

டெல்டா மாவட்டங்களில் எப்போதும் திமுக மிகவும் வலிமையாக இருக்கும். முக்கியமாக டெல்டாவில் இருக்கும் திமுக மாவட்ட செயலாளர்கள் மற்ற மாவட்டங்களை விட மிகவும் வலிமையாக இருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த திருச்சி மாநாட்டில் கூட திமுகவின் டெல்டா படை கலக்கி இருந்தது.

இந்த நிலையில் வர போகிற சட்டசபை தேர்தலிலும் டெல்டாவில் இருக்கும் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் திட்டத்தில் திமுக இருக்கிறது. இதற்காக தங்களின் மாவட்ட செயலாளர்கள், எம்பிக்களை களமிறக்கி திமுக தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது.

திமுக

திமுக

முக்கியமாக என்ன நடந்தாலும்.. மன்னார்குடியில் மட்டும் கண்டிப்பாக வெற்றிபெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் திமுக உள்ளது. மன்னார்குடியில் தற்போது திமுக சார்பாக டிஆர்பி ராஜா எம்எல்ஏவாக இருக்கிறார். 2011, 2016 சட்டசபை தேர்தலில் இங்கு வரிசையாக போட்டியிட்டு டிஆர்பி ராஜா வெற்றிபெற்றார். மீண்டும் இங்கு ஹாட் டிரிக் அடிக்கும் திட்டத்தில் டிஆர்பி ராஜா இருக்கிறார்.

திட்டம் என்ன

திட்டம் என்ன

மன்னார்குடியில் திமுகவிற்கு பெரிய அளவில் ஆதரவு இருக்கிறது என்பதுதான் களநிலவரம். மழை, புயல் வந்தால் டிஆர்பி ராஜா நேரடியாக களத்திற்கு வருகிறார், மக்கள் இவரை எளிதாக அணுக முடிகிறது. இதற்கு முன் இருந்தவர்கள் எல்லாம் இவ்வளவு எளிதாக பார்க்க கூடிய வகையில் இல்லை.. ஆனால் டிஆர்பி ராஜா மக்களோடு மக்களாக இருக்கிறார் என்று இவருக்கு மன்னார்குடியில் குட் நேம் இருக்கிறது.

 மீண்டும் போட்டி

மீண்டும் போட்டி

அதோடு மன்னார்குடிக்கு ரயில் கொண்டு வந்தது இவர்தான்.. நீண்ட நாள் கோரிக்கைகள் பலவற்றை டிஆர்பி ராஜா நிறைவேற்றி இருக்கிறார். இதனால் மீண்டும் டிஆர்பி ராஜா வெற்றிபெறவே அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். மன்னார்குடியில் இவரை எதிர்த்து போட்டியிடும் சிவா.ராஜமாணிக்கம் டப் பைட் கொடுத்தாலும் வெற்றிபெற பெரிய வாய்ப்பு இல்லை என்று திமுக தரப்பு நம்புகிறது.

திமுக

திமுக

இன்னொரு பக்கம் மன்னார்குடியில் சசிகலா குடும்பத்திற்கே பெரிய வாய்ஸ் இல்லை. திவாகரன் மட்டும்தான் கொஞ்சம் பவர் உள்ளவராக இருக்கிறார். ஆனால் அவரே அதிமுகவிற்கு ஆதாரவாக இல்லை. இப்போது சசியும் சைலன்ட் ஆகிவிட்டார். இதனால் மன்னார்குடியில் எந்த சிக்கலும் இன்றி மீண்டும் வெற்றிபெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் திமுக இருக்கிறது.

வாய்ப்பு

வாய்ப்பு

திமுக தலைமையும் மன்னார்குடியை கிரீன் லிஸ்டில்தான் வைத்துள்ளது.டெல்டாவில் திமுக சார்பாக தேர்தல் நேரத்தில் பெரிய பொதுக்கூட்டங்கள் நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு உள்ளது. திருவாரூர், நன்னிலம், திருச்சி, திருத்துறைப்பூண்டி என்று அனைத்து மாவட்டங்களையும் கவர் செய்யும் விதமாக பொதுக்கூட்டங்கள் நடக்க உள்ளன. இதில் மன்னார்குடிதான் அதிக கவனம் பெறும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+