Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொங்கு பாஜகவிற்கு திமுக தரும் அடுத்த ஷாக்.. இன்னும் வரப்போறாங்களாம்.. டென்ஷனில் அதிமுக

அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து திமுகவில் ஏராளமானோர் இணைகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக பட்டியலின பிரிவு மாநில பொதுச் செயலாளர் என்.விநாயகமூர்த்தி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துவிட்டார். இவரை போல் அதிமுக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணைகிறார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்துவிட்ட நிலையில் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டாலும் அது தங்களுடைய வெற்றியாகவே திமுக பார்க்கிறது. எனவே சீட் கொடுத்த திமுகவை மகிழ்ச்சிப்படுத்த வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

அதிமுக

அதிமுக

அதிமுகவும் களத்தில் இருப்பதால், இந்த தேர்தல் நேரத்தில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளை தங்கள் கட்சியில் இணைக்க இரு தரப்பினரும் மும்முரம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் தமிழக பாஜகவின் மாநில பட்டியலின பிரிவின் பொதுச் செயலாளர் விநாயக மூர்த்தி தலைமையிில் ஈரோடு மாவட்ட பாஜக இளைஞர் அணி செயலாளர் வெங்கடேஷ், மதுரைவீரன் மக்கள் இளைஞர் அணிச் செயலாளர் பழ வீரக்குமார் ஆகியோர் பாஜகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர்.

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர்

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர்

அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அவர்கள் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வின்போது கோவை செல்வராஜ், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, துரைமுருகன், பொன்முடி, திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி, செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் இருந்தனர்.

செய்தியாளர்களை சந்தித்த விநாயகமூர்த்தி

செய்தியாளர்களை சந்தித்த விநாயகமூர்த்தி

இந்த நிகழ்வுக்கு பிறகு விநாயகமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலின பிரிவின் மாநில பொதுச் செயலாளர் பணியாற்றி வந்தேன். தற்போது தமிழகத்தையும் தமிழக மக்களையும் காப்பாற்றுகிற தலைவராக முதல்வர் பணியாற்றி வருகிறார். அவர் தலைமையின் கீழ் பணியாற்றவும் கருணாநிதி முதல்வராக இருந்த போது எங்கள் அருந்ததியர் சமுதாய மக்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீட்டை பெற்று தந்தார்.

மதுரை வீரன் மக்கள் கட்சி

மதுரை வீரன் மக்கள் கட்சி

இதனால் 2009-இல் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர் கல்வி பயன்று வருகிறார்கள். அரசு பணிகளிலும் பணியாற்றி வருகிறார்கள். நான் "மதுரை வீரன் மக்கள் கட்சி" என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகிறேன். இதில் 3 லட்சத்திற்கும் மேலானவர்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள். அவர்களையும் முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைத்து பணியாற்றுவதற்கும் இணைப்பு விழா நடத்துவதற்கும் ஏற்பாடு செய்து வருகிறேன்.

ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர்களாக உள்ளனர். இவர்கள் அத்தனை பேரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்களிப்பார்கள். இந்த தொகுதி முழுவதும் முழு வீச்சுடன் தீவிர களப்பணியாற்றி மாபெரும் வெற்றி பெற வைத்து முதல்வரின் கைகளில் ஒப்படைப்பேன் என இந்த நேரத்தில் உறுதியாக சொல்கிறேன். இவ்வாறு விநாயகமூர்த்தி தெரிவித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த என். விநாயகமூர்த்தி ஈரோடு மாமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து விசிகவிலிருந்து விலகிய என்.விநாயகமூர்த்தி பாஜகவில் சேர்ந்த நிலையில் தற்போது திமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விநாயகமூர்த்தி உள்ளிட்டோரை திமுகவில் இணைத்ததன் முயற்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தட்டி தூக்கிய திமுக

தட்டி தூக்கிய திமுக

ஏற்கெனவே அதிமுகவில் அதிருப்தியில் இருந்த தங்க தமிழ்ச் செல்வன், தோப்பு கே வெங்கடாசலம், கோவை செல்வராஜ் உள்ளிட்டோரையும் அமைச்சர் செந்தில் பாலாஜியே தூண்டில் போட்டு அலேக்காக தூக்கி வந்தார் என சொல்லப்படுகிறது. அது போல் அதிமுகவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்து பின்னர் ஜெயலலிதா காலமானதும் தினகரன் ஆதரவு எம்எல்ஏவாக செயல்பட்ட பழனியப்பன் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். இதற்கும் காரணம் அமைச்சர் செந்தில் பாலாஜி என சொல்லப்படுகிறது.

மாற்றுக் கட்சியினர்

மாற்றுக் கட்சியினர்

இவ்வாறு மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைவதற்கு என்ன காரணமாக இருக்கலாம்? இதுகுறித்து திமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், திமுக தற்போது ஆளும் கட்சி. இன்னும் 3 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும். இதனிடையே லோக்சபா தேர்தல் வருகிறது. அடுத்து 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் கழக ஆட்சிதான் நடைபெறும். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் போல் மாற்றுக் கட்சியினரை வாழ வைக்கும் கட்சியாக திமுக உள்ளது. மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்கள் பல பேருக்கு கட்சியில் நல்ல பதவிகள் வழங்கப்பட்டன. அது போல் ஆட்சியிலும் எம்எல்ஏ, அமைச்சர் உள்ளிட்ட பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. 2031 வரை திமுக ஆட்சிதான் என்பதால் இந்த 8 ஆண்டுகளில் எத்தனையோ தேர்தல் வரும் அதில் இவர்கள் தங்கள் செல்வாக்கிற்கேற்ப வாய்ப்புகளை பெறுவார்கள். இதனால்தான் வந்து இணைகிறார்கள். தமிழகம் என்றாலே அதிமுக, திமுகதான். அதிமுகவை பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அவர்களுக்குள் கோஷ்டி பூசல் நடந்து வருகிறது. எனவே தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு கொண்ட திமுகவில் பிற கட்சியினர் இணைகிறார்கள். இன்னும் பலர் அதிமுக, பாஜக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளிடம் இருந்து நிறைய பேர் திமுகவிற்கு வருவார்கள் என திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். ஈரோடு இடைத்தேர்தல் சமயத்தில் இது போன்ற சம்பவங்கள் அதிமுக, பாஜகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இன்னும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் தங்கள் கட்சி கட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய சூழலும், கோஷ்டி பூசல்களுக்கு முடிவு கட்ட வேண்டிய கட்டாயமும் இந்த இரு கட்சிகளுக்கும் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+