Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

75 ஆண்டுகளாகக் கொள்கை பேசும் திமுக... அரசியலில் வென்று காட்டிய முதல் மாநிலக் கட்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவுக்கு இது திருவிழாக்கோலம். ஆம்! திராவிட மாடல் அரசு கலைஞர் நூற்றாண்டைத் தடபுடலாகத் தமிழகம் முழுக்க கொண்டாடி வருகிறது. அதற்குள் இன்னொரு பக்கம் தனது பவள விழாவுக்குத் தயாராகிவிட்டது திமுக.

இதற்கான விழா ஏற்பாடுகள் மிக விமரிசையாக வேலூரில் நடைபெற்று வருகின்றன. வரும் 17 அன்று திமுகவின் 'முப்பெரும் விழா' அங்கே களைக்கட்ட இருக்கிறது. விழாவில் அண்ணா, பெரியார், பாரதிதாசன், கலைஞர், பேராசிரியர் அன்பழகன் பெயர்களில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

DMK is celebrating its 75th anniversary

முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி தனது பவளவிழாவை 1998 ஜூன் 3 அன்று கொண்டாடினார். அப்போது சென்னை மெரினாவில் ' சிப்பிக்குள் முத்து' தோன்றுவதைப் போன்று மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அந்த மேடை அலங்காரமே தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கக் கூடியதாக இருந்தது. விழாவுக்கு முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் அழைக்கப்பட்டிருந்தார்.

DMK is celebrating its 75th anniversary

விழாவில் கலந்துகொண்ட மூப்பனார், விழா நாயகரான கருணாநிதிக்குத் தங்கச்சங்கிலி போட்டார். அதைப் பெற்றுக்கொண்ட விழா நாயகர், "மூப்பனார் பரிசளித்த தங்கச்சங்கிலியில் உள்ள கண்ணிகள் போல திமுக- த.மா.கா உறவு வலுவாகவே உள்ளது" என்றார்.

இந்தப் பவளவிழாவில் மக்கள் நலன் சார்ந்த விசயங்களுக்கு மட்டுமே செலவுகள் செய்யப்பட வேண்டும். ஆடம்பரமான செலவுகள் எவையும் இருக்கக் கூடாது என மு.கருணாநிதி உத்தரவு போட்டிருந்தார். ஆகவே, 7.02 கோடி செலவில் தமிழ்நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டன.

DMK is celebrating its 75th anniversary

கலைஞரின் பவளவிழா முடிந்து இப்போது 25 ஆண்டுகள் கழித்து திமுக தன் பவள விழாவுக்குத் தயாராகி உள்ளது. திமுகவை அண்ணாதுரை 1949இல் நிறுவினார். அதாவது இந்தியா விடுதலை அடைந்த 2 ஆண்டுகளில் திமுக ஒரு மாநிலக் கட்சியாக உதயமானது.

1949 கட்சியைத் தொடங்கிய அண்ணா, சமுக இயக்கமாக நடைபோட்டுக் கொண்டிருந்த திமுகவைத் தேர்தல் பாதைக்கு 1957இல் திருப்பினார். அந்தத் தேர்தலில் 15 இடங்களில் வென்றது திமுக.

DMK is celebrating its 75th anniversary

அடுத்து 62இல் 50 இடங்களில் வென்றது. அதன் பின்னர் 1967இல் அசைக்க முடியாத சக்தியாக இருந்த தேசிய கட்சியான காங்கிரசை தோற்கடித்து ஆட்சிக்கட்டிலில் கட்சியை அமர்த்தினார் அண்ணா.

அதுவரை ஒரு மாநிலக் கட்சி இந்தியாவில் இந்த மாதிரியான ஒரு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியதில்லை. இந்த வரலாற்று வெற்றிக்கு அவர் முன்வைத்த வலுவான கொள்கைகளே முக்கிய பங்குவகித்தன.

DMK is celebrating its 75th anniversary

ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் என்றார் அண்ணா. அவர் மத ஆதிக்கம் என்று சொல்லவில்லை. சாதி ஆதிக்கம் என்று சொல்லவில்லை. மொழி ஆதிக்கம் என்று தனியே பிரித்துப் பேசவில்லை. எந்த வடிவத்தில் ஆதிக்கம் வந்தாலும் அதை எதிர்ப்பதே திமுகவின் கொள்கை என்றார்.

எக்காலத்திலும் இந்தி திணிப்பை என்றைக்குமே எதிர்ப்போம் என்றார். வன்முறையைத் தவிர்த்து வறுமையை வெல்வோம். மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி என்றார்.

DMK is celebrating its 75th anniversary

அவர் சொன்ன இந்தக் கொள்கைகள் எதையுமே அன்றைய தேசிய கட்சிகள் பேசியதே இல்லை. ஆகவேதான், அண்ணா 1967இல் முதல்வரானார்.

அதுவரை செல்வந்தர்கள்தான் சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக முடியும் என்ற நிலை இருந்தது. அப்படி எந்தப் பின்புலமும் இல்லாத ஒரு இளைஞர் சக்தியின் கையில் அண்ணா ஆட்சி அதிகாரத்தைக் கைமாற்றிக் கொடுத்தார்.

DMK is celebrating its 75th anniversary

குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட, மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் அரசியல் அதிகாரம் பெற்றனர். அதற்கு அண்ணா முன்வைத்த கொள்கை மிக முக்கியமாகப் பங்கை வகித்தன.

திமுக ஆட்சியில்தான் நிலச் சீர்திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது. உச்சவரம்பு 30 ஸ்டாண்டர்ட் ஏக்கரிலிருந்து 15 ஆகக் குறைக்கப்பட்டது. அதைப் போல் இந்தியாவிலேயே பட்டியலின மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்ததும் திமுக அரசுதான்.

DMK is celebrating its 75th anniversary

அண்ணா இந்தி திணிப்பை அன்றைக்கு எதிர்த்தார். கலைஞர், ஸ்டாலின் என்று இன்று வரை திமுக அந்தக் கொள்கையை விலகாமல் நிற்கிறது. மேலும் அக்கொள்கை இன்றைக்கு வலுப்பெற்றுள்ளது.

"திமுகதான் இருமொழிக் கொள்கையைச் சட்டமாக்கியது. இரு மொழிக் கொள்கை உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். அதைப்போல் தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது திமுகதான்" என்கிறார் டிகேஎஸ் இளங்கோவன்.

அண்ணாதான் மெட்ராஸ் பிரசிடென்சி என்பதை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். அப்போது 'தமிழ்நாடு என்று பெயர் உள்ளவரை அண்ணாதுரைதான் இம்மாநிலத்தை அண்ணாதுரைதான் ஆட்சி செய்வதாக அர்த்தம்' என்றார்.

அதே குரல் இன்று காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் மூலமாக புதிய முழக்கமாக வெளிப்பட்டு உள்ளது. "இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குப் பெண்கள் உரிமை தொகை பெறுகிறார்களோ அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின்தான் ஆள்கிறான் என்று பொருள்" என விளக்கம் அளித்துள்ளார் ஸ்டாலின். இது அண்ணாவின் நீட்சி.

DMK is celebrating its 75th anniversary

"1930களில் இலங்கை பண்டார நாயக்கா ஒரு விசயத்தைக் குறிப்பிடுகிறார். அதாவது Two languages one nation and one language two nation என்ற ஒரு கருத்தை முன்வைக்கிறார்.

அப்படி அவர் பேசிய காலகட்டத்தில் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களை உருவாக்கப் பலத்த எதிர்ப்புகளை முன்வைக்கும் கட்சியாகத்தான் காங்கிரஸ் இருந்தது.

அப்படியான காலத்தில் இந்திய அரசியலைப்புச் சட்டத்தை நெகிழ்ந்து கொடுக்க வைத்தது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்களிப்பு அதிகம் உள்ளது" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்

இவர் சொல்வது உண்மைதான். திமுக 'திராவிட நாடு' கோரிக்கையை திமுக முன்வைத்த போது 1962இல் 'போர் வரினும் சரி, திமுக பிரிவினை கோரிக்கை யை ஏற்க முடியாது' என்றார் பிரதமர் நேரு.

சீனா உடனான போரைத் தொலைநோக்குடன் புரிந்துகொண்ட அண்ணாதுரை, 'வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும்' என்று எளிமையான விளக்கம் அளித்துவிட்டு திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார். ஆனால், மொழிவழி மாநிலக் கொள்கையை ஏற்று 'மெட்ராஸ்' என்பதைத் தமிழ்நாடு என மாற்றத் தீவிர களம் அமைத்தார்.

ஆனால், காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தை 'தனித் தமிழ்நாடு' கோரிக்கை எனத் திசை திரும்பியது. 1957இல் திமுக கொண்டு வந்த 'தமிழ்நாடு' தீர்மானம் தோல்வி அடைந்ததாக ஆளுநர் உரைக்கு விளக்கம் அளிக்க முன்வந்த அன்றைய நிதி அமைச்சர் சுப்பிரமணியம் சட்டசபையில் அறிவித்தார்.

அதன்பின்னர் 1967இல் முதலமைச்சராகப் பதவியேற்ற அண்ணாதுரை 'மெட்ராஸ்' மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் வைத்தார். இது திமுக ஆட்சிக்குக் கிடைத்த மாபெரும் வரலாற்று வெற்றி.

ஆகவேதான் அண்ணா, 1969இல் மறைந்தபோது 1.5 கோடி பேர் கூடினர். அது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது. இன்றுவரை இந்தச் சாதனை முறியடிக்கப்படவில்லை. அவரது கட்சியின் கொள்கைகளும்தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+