ஆஹா.. சூப்பரா நோட் பண்றார்ப்பா ஸ்டாலின்.. மாஜிக்கள் அடித்த "ஃபாரின் டிரிப்".. பறந்த உத்தரவு!
ஊழல் புரிந்த முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது
சென்னை: வெவரமாத்தான் இருக்கார் ஸ்டாலின்.. எதையுமே மறக்கல.. கொரோனா தடுப்பு ஒழிப்பு செயல்பாடுகள் ஒருபக்கம் இருந்தாலும் அதிமுக தரப்பிலான விஷங்களையும் கையில் எடுத்து, அதன் செல்வாக்கை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
"நல்லாட்சி தருவோம்., அதிலும் மக்களுக்கான நல்லாட்சி தருவோம்" என்று முதல்வர் ஸ்டாலின், உறுதி தந்ததன் அடிப்படையில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார்.. அதுபோலவே, கடந்த காலங்களில் நடந்த விவகாரங்களையும் பார்த்து பார்த்து கிண்டி எடுத்து வருகிறார்.. இப்போது அப்படி ஒரு விஷயம்தான் சிக்கி உள்ளது.
2019 ஆகஸ்ட், செப்டம்பர் மாதம்.. எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி, இவங்க எல்லாரும் கோட்-சூட் போட்டுட்டு ஃவெளிநாட்டுக்கு போனாங்களே ஞாபகம் இருக்கா.. அந்த விஷயத்தைதான் ஸ்டாலின் குறி வைத்துதான், பாயிண்ட் பாயிண்டாக கேள்வி எழுப்பி உள்ளார்.

ஸ்டாலின்
முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி உட்பட பல அமைச்சர்கள் அப்போது வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.. வெளிநாடுகளுக்கு செல்வதால், வழக்கம்போல இருந்த இவர்கள் எல்லாருமே, வேட்டி - சட்டைகளுக்கு பதிலாக பேன்ட் - சட்டை - கோட் - சூட் என வித்தியாசமான கெட்அப்பில் இருந்தனர்.

வளர்ச்சி திட்டம்
டிரஸ், அலங்காரம் எல்லாம் அவரவர் சுயவெறுப்பு என்றாலும், துறைரீதியாக பல வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வருவதற்வே இந்த வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளப்பட்டதாக அரசுத்தரப்பில் சொல்லப்பட்டது.. ஆனால், பார்த்தால் அப்படி தெரியலேயே.. ஏதோ இன்ப சுற்றுலா செல்லவே இந்த வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை அமைச்சர்கள் பயன்படுத்திக்கொண்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

அமைச்சரவை
முதல்வர் ஸ்டாலினும், "இதென்ன தமிழக அமைச்சரவையா, இல்லை, சுற்றுலா அமைச்சரவையா? அதிமுக ஆட்சியில் 2 தொழில் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தினாங்க.. அதன் பயனாக 5 லட்சம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும் சொல்றாங்க.. அதெல்லாம் எங்கே? அரசால் வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா?" என்று காட்டமாக கேட்டிருந்தார். ஆனால், அதிமுக தரப்பில் அதற்கு எந்ததவிதமான பதிலும் வரவே இல்லை.

கையெழுத்து
தற்போது, இந்த வெளிநாட்டுப் பயண விவரங்களை தான் கிண்டி கிளற உத்தரவிட்டுள்ளாராம் ஸ்டாலின்.. வெளிநாட்டு பயணத்துக்கு செலவழித்த அரசு பணம் எவ்வளவு? இந்த பயணத்தால் அரசுக்கு கிடைத்த நன்மைகள் என்னென்ன? 5 லட்சம் கோடி பெறுமானமுள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தானது எங்கே? என்பது குறித்தெல்லாம் தனியாக அறிக்கை கேட்டிருக்கிறாராம்..

குடைச்சல்
மேலும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டு மூலமாகக் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்தும் அறிக்கை கேட்டிருக்கிறாராம்.. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணிகளில் இறங்கி உள்ளனர்.. ஒருவேளை இதில் ஏதாவது முறைகேடு நடந்தால், அதை வைத்தும் அதிமுகவுக்கு ஒரு செக் வைக்க காத்திருக்கிறாராம்.. ஏற்கனவே ஊழல் புகார்கள் குறித்த லிஸ்ட்கள் ரெடியாகி இருக்கும்போது, இன்னொரு பக்கம் இந்த ஃபாரீன் ட்ரிப் மேலும் குடைச்சலை அதிமுக தரப்புக்கு ஏற்படுத்தி வருகிறது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?












Click it and Unblock the Notifications