தப்பு செஞ்சுட்டாரே எடப்பாடியார்.. "நழுவ விட்டுட்டாரே".. திமுக வெற்றிக்கு "தீயாய்" உதவும் தினகரன்..!
கூட்டணி விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி தவறு செய்துவிட்டார்
சென்னை: அதிமுக தெரிந்தே இந்த தவறுகளை செய்துவிட்டதா? அல்லது திக்கு தெரியாமல் ஒரு பலவீனமான கூட்டணியை வைத்து சிக்கி கொண்டு விட்டதா என்று தெரியவில்லை.. அதிமுகவின் தோல்விக்கு அதன் கூட்டணியே மிகப்பெரும் சறுக்கலாகி கொண்டிருக்கிறது..!
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளின்போதும், பிந்தைய கணிப்புகளின்போதும் 70 இடங்களை அதிமுக தாண்டவில்லை.. ஒரு சில கணிப்புகள் அதிமுகவுக்கு 40 இடங்கள்கூட கிடைக்காது என்றார்கள்..
இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.. இதில், திமுகவின் அபார வெற்றிகளை அதிமுக தடை செய்து கொண்டிருக்கிறது.

திமுக
அதாவது பல்வேறு இடங்களில் அதிமுகவும் திமுகவை முந்தி கொண்டு வருகிறது. ஒருவேளை அதிமுக தலைமை குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, கூட்டணி விஷயத்தில் கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால், திமுகவுக்கு டஃப் தந்திருப்பார் என்றே தெரிகிறது. முக்கியமாக, அமமுகவை விட்டுவிட்டார்.. சசிகலா பற்றி யோசித்து யோசித்தே, அமமுகவின் கூட்டணியையும் தவறவிட்டுவிட்டார்.. தினகரன் இறங்கி வந்தும் இதை எடப்பாடியார் கூட்டணிக்கு சம்மதிக்கவில்லை..

கூட்டணி
2019 தேர்தலிலேயே அமமுக ஒரு அதிர்வை தென்மாவட்டங்களில் ஏற்படுத்தியபோதே, அதிமுக தலைமை சுதாரிக்க தவறிவிட்டது.. அமமுகவை தனியாக விட்டால், அது அதிமுகவின் வாக்குகளை பெருமளவு பிரிக்கக்கூடிய சக்தியாக உருவெடுக்கும் என்று தெரிந்தும்கூட, வாய்ப்பை மிஸ் பண்ணி விட்டார் எடப்பாடியார். தென்மாவட்டம் என்றாலே அது அதிமுகவின் கோட்டை என்ற இமேஜையும் டேமேஜ் செய்துவிட்டார்.

சசிகலா
குறைந்தபட்சம், தேமுதிகவையாவது உள்ளே இழுத்து போட்டிருக்கலாம்.. கடைசிவரை கூட்டணிக்காக கெஞ்சி கொண்டிருந்தார் பிரேமலதா.. வாய்விட்டே கேட்டும் விட்டார்.. பொறுமைக்கும் எல்லை உண்டு என்று கதறினார்.. இவ்வளவும் பிரேமலதா செய்ய காரணம், விஜயகாந்த் அதிமுக-பாஜக கூட்டணியை ஆசைப்பட்டார் என்பதற்காகத்தான்.. அதையும் எடப்பாடியார் காது கொடுத்து கேட்கவில்லை.

கூட்டணி
இவ்வளவு நாள் கூட்டணியில் இருந்தார்களே, இதற்கு முந்தைய தேர்தல்களில் அதிமுகவின் வெற்றிக்கும் தேமுதிக உதவியாக இருந்ததே என்ற நன்றியையும் எடப்பாடியார் நினைத்து பார்க்கவில்லை.. தேமுதிகவுக்கு வாக்கு வங்கி அவ்வளவாக இல்லை என்ற காரணத்தை சொல்லி ஒதுக்க முடியாது.. ஏனென்றால், தேமுதிகவைவிட பாஜகவுக்கு வாக்கு வங்கியே இல்லை..

எடப்பாடி பழனிசாமி
அதுமட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பரவலான ஓட்டு வங்கி தேமுதிகவுக்கு இப்போதும் இருக்கிறது.. இதைதான் சரியாக பயன்படுத்தி கொண்டார் தினகரன். இந்த தேர்தலில் அதிமுக தோற்றால், அதற்கு முக்கிய காரணம் அமமுக, தேமுதிகவை தவறவிட்டுவிட்டதுதான்.. அதற்கு காரணியாக இருப்பவர் சாட்சாத் எடப்பாடி பழனிசாமி மட்டுமே..!












Click it and Unblock the Notifications