சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"டிக்" அடித்த ஸ்டாலின்.. யார் அந்த 2 பேர்.. இவர்கள்தான் "அட்வைஸர்களா?".. எகிறும் எதிர்பார்ப்பு

திமுக குறித்த ரிப்போர்ட்களை கேட்டு எடப்பாடியார் டென்ஷன் ஆகி வருகிறாராம்

Google Oneindia Tamil News

சென்னை: அடுத்து திமுகதான் ஆட்சி என்ற செய்திகள் வட்டமடித்து வரும் நிலையில், அக்கட்சி தலைமை குறித்த செய்திகள் நாளுக்கு நாள் வேற லெவலில் வந்து கொண்டிருக்கிறது.. இப்போதும் அப்படியே ஒரு தகவல் கசிந்து வருகிறது..!

அடுத்து திமுகவே ஆட்சி அமைக்கும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், அரசு உயர் அதிகாரிகள் லிஸ்ட் ஒன்று தயாராகி வருவதாக 10 நாளைக்கு முன்பே தகவல் வெளியானது.. அதற்கேற்றபடி, சில அதிகாரிகளும் ஸ்டாலினுக்கு போன் செய்து வாழ்த்துக்களை சொல்லியும் வருகிறார்களாம்.

''சமூக பிரச்சினைக்கு குரல் கொடுத்தவர் விவேக்''.. கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் புகழாரம்! ''சமூக பிரச்சினைக்கு குரல் கொடுத்தவர் விவேக்''.. கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!

பிறகு, அமைச்சர்கள் லிஸ்ட் ஒன்று தயாராகி கொண்டிருப்பதாகவும், 31 பேர் கொண்ட அந்த லிஸ்ட்டை ஸ்டாலின் ரெடி செய்துவிட்டு, அதற்கு பிறகே கொடைக்கானலுக்கு சென்றுள்ளதாகவும் இன்னொரு செய்தி வந்தது.. இதையடுத்து, யார் யார் அமைச்சர்கள் என்று பெயர் வாரியாகவும் டம்மி லிஸ்ட் ஒன்று, சோஷியல் மீடியாவில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.

 ஆயத்தங்கள்

ஆயத்தங்கள்

இதையடுத்து, திமுக ஆட்சி அமைக்க நாளே குறிக்கப்பட்டு விட்டதாகவும், மே 2-ம் தேதி ரிசல்ட் என்பதால், மே 6-ம்தேதி பதவியேற்பதற்கான ஆயத்தங்களை செய்து வருவதாகவும் நேற்று மற்றொரு தகவல் கசிந்தது.. அதுமட்டுமல்ல, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில்தான், புதிய திமுக அரசு பதவியேற்பதற்கான விழா நடக்க போவதாகவும் சொல்லப்பட்டது.

 அமைச்சர்கள்

அமைச்சர்கள்

இப்படி நித்தம் ஒரு உறுதிப்படுத்தப்படாத தகவல் வந்து கொண்டிருப்பதுபோலவே, இப்போதும் ஒரு தகவல் பரவி வருகிறது.. அதிகாரிகள், அமைச்சர்கள் லிஸ்ட் ரெடியான நிலையில், ஆலோசகர்களையும் திமுக தலைமை தேர்வு செய்துவிட்டதாம்.. அதாவது, திமுக ஆட்சி அமையும் பட்சத்தில் ஸ்டாலினுக்கு ஆலோசனை சொல்வதற்காகவே, இந்த தேர்வு நடந்துள்ளது.

 ஸ்டாலின்

ஸ்டாலின்

தேர்தலுக்கு பிறகு, சில ஐஏஎஸ், அதிகாரிகளும், முன்னாள் அதிகாரிகள் சிலரும் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளதாக தெரிகிறது.. இதற்கு பிறகுதான், இரண்டு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளையே தன்னுடைய அட்வைஸர்களாக வைத்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார் ஸ்டாலின்... அதன்படியே 2 அதிகாரிகளின் பெயர்களையும் டிக் அடித்துள்ளாராம்..

 ஆலோசகர்கள்

ஆலோசகர்கள்

இவர்கள் இருவருமே கருணாநிதியிடம் பணியாற்றியவர்கள் என்றும் அவரது நன்மதிப்பை நேரடியாகவே பெற்றவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. அரசு ரீதியான பதவிகளை தாண்டி, தனக்கு ஆலோசனை சொல்வதற்கான இந்த ஸ்பெஷல் ஆலோசகர்கள் தேர்வு என்றும் சொல்லப்படுகிறது.. ஆனால், அவர்கள் யார் என்று தெரியவில்லை.. அதேசமயம், இந்த தகவல் உண்மைதானா என்றும் தெரியவில்லை.. எதுவானாலும் ரிசல்ட்டுக்கு பிறகே தெரியவரும்.. பார்ப்போம்..!

English summary
DMK Leader MK Stalin plans to appoint two Retd IAS Officer, say Sources
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X