"அவர்" பெயரையே சொல்லாமல்.. அதையும் மாற்றி சொல்லி... சேலத்தை திணறடித்த ஸ்டாலின்!
திமுக தலைவர் ஸ்டாலினின் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது
சென்னை: யாருக்காக பிரச்சாரம் செய்ய வந்தாரோ, அவர் பெயரையே மறந்துபோய் முக ஸ்டாலின் திணறியதும், வேட்பாளர்களின் பெயரை, மாற்றி மாற்றி சொல்லியதும், பெரும் பரபரப்பை சேலத்தில் ஏற்படுத்திவிட்டது.
Recommended Video

தேர்தல் நெருங்கி வருவதால், பிரச்சாரங்கள் களை கட்டி வருகின்றன.. ஆட்சியை பிடிக்க திமுக கடுமையாக போராடி வருகிறது.
சேலம் மாவட்டம் வீரபாண்டி மற்றும் ஏற்காடு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.. அப்போது கெஜல்நாயக்கன்பட்டியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது..

ஸ்டாலின்
இதில் கலந்துகொள்ள வந்தபோதுதான் நிறைய விஷயங்கள் ஸ்டாலினிடம் கவனிக்கத்தக்கதாக அமைந்துவிட்டது.. பிரச்சாரத்துக்கு வந்தவர், வேட்பாளர்கள் இருந்த மேடையில் ஏறவே இல்லை.. தனியாக பிரச்சார வேனில் இருந்தபடியே பிரச்சாரம் செய்து கொண்டார்.. சுமார் ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்.. அதற்க பிறகுதான், அங்கே இருந்த திமுக தொண்டர்களிடையே உரையாற்றினார்..

வீரபாண்டி ஆறுமுகம்
அதுவும் பிரச்சாரம் முடியும் நேரத்தில் தான், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை புகழ்ந்து பேசினார்.. இந்த தேர்தலில் வீரபாண்டி ஆறுமுகம் மகன் வீரபாண்டி ராஜா, பிரபு ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தலில் வீரபாண்டியாரின் நேரடி வாரிசுதாரர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை.. இதனால் வீரபாண்டி ஆதரவாளர்கள் விரக்தியில் இருந்தனர்..

ஸ்டாலின்
ஆனால் தற்போது வீரபாண்டியார் குடும்பத்திற்கு சீட் வழங்கப்பட்டுள்ளதாக பேசியது மொத்த பேரையும் அதிர செய்துவிட்டது.. அப்படி இருந்தும், அந்த வேட்பாளர் பெயரையே ஸ்டாலின் மறந்துவிட்டார். உடனே சுதாரித்து கொண்டு, வேட்பாளர்களின் பெயர் என்ன என்று பக்கத்தில் இருந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.. ஆனால், அந்த பெயரையும் சரியாக சொல்லாமல் மாற்றி மாற்றி சொன்னதால், அங்கு பரபரப்பு நிலவியது..

நிர்வாகிகள்
அதாவது வீரபாண்டி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் தருண் என்பதற்கு பதிலாக வருண் என்று சொன்னார் ஸ்டாலின்.. ஏற்காடு தொகுதி திமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வனுக்கு பதிலாக தமிழ்அரசன் என்று சொல்லி வாக்கு கேட்டதால் சலசலப்பு கூடியது.. சுற்றிலும் பொதுமக்கள் இருந்ததால், ஸ்டாலினிடம் தவறை சுட்டிக் காட்ட முடியாமல் அங்கிருந்து நிர்வாகிகளும் வேட்பாளர்களும் சற்று திணறிவிட்டதாக தெரிகிறது.

தொண்டர்கள்
இதனிடையே ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை முடித்துக் கிளம்பிய நிலையில் அங்கு வீரபாண்டி தொகுதி சீட் வழங்கப்பட்ட டாக்டர் தருணை தொண்டர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முண்டி அடித்தனர்.. அவர்களை சமாளித்து டாக்டரால் அங்கிருந்து வெளியேற முடியாமல், இதற்கே அரை மணி நேரம் ஆகிவிட்டது..

திணறல்
கூட்டத்தில் சிக்கி கொண்டாலும், வேறு வழி தெரியாமல் வேட்பாளர் பல மணி நேரமாக சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்தார்.. எனினும், ஒரு கட்டத்தில் கடுப்பான வேட்பாளர் அங்கிருந்து ஒருவழியாக கிளம்பி சென்றார்.. அப்போதும், கட்டுக்கடங்காத கூட்டம் அவரை விரட்டி விரட்டி அவரது காரின் அருகில் சென்றது.. இறுதியாக தொண்டர்களை பார்த்து ஒரு பெரிய வணக்கத்தை சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி உள்ளார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications