ராஜீவ்காந்தி பதவி போச்சு..லீக்கான இன்ஸ்டா சாட்! படக்கென பாயிண்டை பிடித்த பாஜக! பின்னணியில் அந்த தலை?
சென்னை: திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த ராஜீவ் காந்தி திடீரென பதவி மாற்றம் செய்யப்பட்டிருப்பது திமுக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. திமுக மாணவர் அணியின் மாநிலச் செயலாளராக செயல்பட்டு வந்த ராஜீவ் காந்தி அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, தற்போது கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ராஜீவ் காந்தியின் பதவி நீக்கத்துக்கு காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
ராஜீவ் காந்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். அதன் பிறகு திமுக மேடைகளில் தொடர்ந்து சிறந்த பேச்சாளராக செயல்பட்டு வந்தார். குறிப்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளராக தன்னை முன்னிலைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதன் மூலம் அவர் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட சில முக்கிய தலைவர்களுடன் நெருக்கம் பெற்றதாக கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது. அதன் பின்னர் திமுக மாணவர் அணியின் மாநிலச் செயலாளர் என்ற முக்கிய பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.

ராஜீவ் காந்தி
அந்தப் பொறுப்பை ஏற்ற பிறகு மாணவர் அணியின் மூலம் மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக அவரது செயல்பாடுகள் குறித்து கட்சி தலைமையிடம் பல்வேறு புகார்கள் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள், ராஜீவ் காந்தி தேவையில்லாமல் பல்வேறு நிர்வாக விஷயங்களில் தலையிடுகிறார் என்று குற்றச்சாட்டுகள் முன்வைத்ததாக கூறப்படுகிறது.
திமுக அரசியல்
மேலும் சில டெண்டர் தொடர்பான விவகாரங்களிலும் அவர் தலையிட்டதாகவும், தனக்கு நெருக்கமானவர்களுக்கு ஆதரவாக செயல்பட முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ராஜீவ் காந்தி குடும்பத்துடன் கோயம்புத்தூருக்கு குடிபெயர்ந்து அங்கு ஒரு தொகுதியில் போட்டியிட திட்டமிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவை மண்டல அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி உடனும் அவர் ஒரு கட்டத்தில் மோதல் போக்கை கையாண்டதாகக் கூறப்படுகிறது.
பெண் நிர்வாகிகள் புகார்
இந்த சூழ்நிலையில் கட்சியின் சில நிர்வாகிகளும் ராஜீவ் காந்தியின் செயல்பாடுகள் குறித்து தலைமைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கட்சியின் சில பெண் நிர்வாகிகளுக்கு சமூக வலைதளங்கள் வழியாக தேவையற்ற செய்திகளை அனுப்பியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து அவர்கள் கட்சி மேலிடத்திடம் புகார் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக
இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சியான பாஜகவும் தகவல்களை சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரிதாக மாறக்கூடும் என்ற அச்சமும் கட்சி தலைமையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு திமுக தலைமையினர் ராஜீவ் காந்தியை மாணவர் அணிச் செயலாளர் பதவியில் இருந்து மாற்றியதாக கூறப்படுகிறது.
பதவி மாற்றம்
எனினும் அவரை முழுமையாக பொறுப்பிலிருந்து நீக்காமல், கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என்ற புதிய பொறுப்பில் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் மாற்றம் திமுக அரசியல் வட்டாரங்களில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பதவி மாற்றம் என்பது கட்சிக்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் எனவும் கட்சி விவகாரங்களில் இருந்து சில நாட்களுக்கு ராஜீவ் காந்தி ஒதுங்கி இருக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறுகின்றனர் திமுகவினர்.
இன்ஸ்டாகிராம் சாட்
குறிப்பாக பாஜகவின் வாயை அடைக்கவே இந்த நடவடிக்கை என்றும் சொல்கின்றனர். பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் ஒரு நபரின் மனைவி தற்போது தமிழகத்தில் இருக்கிறார். அவருக்கு ராஜிவ் காந்தி இன்ஸ்டாகிராம் மூலம் மெசேஜ் அனுப்பியதாக சொல்லப்படுகிறது. பலமுறை சொல்லிப் பார்த்தும் கேட்காததால் அந்தப் பெண் காவல்துறைக்கு புகார் அளித்திருக்கிறார். மேலும் இதே போல சில பெண்கள் ராஜீவ் காந்தி மீது சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்ததாக சொல்லப்படுகிறது/ அந்த புகார் மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் பாஜக இந்த விவகாரத்தை கையில் எடுத்ததாக சொல்லப்படுகிறது.
பாஜக தலைமை
பாஜக தகவல் திரட்டும் தகவலை கேட்டதும் திமுக ராஜீவ் காந்தி மீது நடவடிக்கை எடுத்துவிட்டது என்கின்றனர். ஆனால் பதவி மாற்றம் பெரிய தண்டனை இல்லை நிச்சயம் இந்த விவகாரத்தை பெரிதாக்க வேண்டும் என கோவை பாஜகவினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். மேலும் ராஜீவ் காந்தி மீது புகார் அளித்த பெண்களின் தகவல்களை திரட்டி அதனை பெரிய விவகாரமாக்கும் முயற்சியிலும் பாஜக தலைமை ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு பின்னணியில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு பெண் பாஜக தலைவரும், ஒரு முன்னாள் மாநில அளவிலான பதவியை வகித்த தலைவரும் தீவிரமாக முயன்று வருவதாக சொல்லப்படுகிறது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications