வேஸ்ட் லக்கேஜ்..காங்.க்கு 3000 ஓட்டு இருக்குமா? சீட்டே தர கூடாது! எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய தளபதி
சென்னை: தமிழக அரசியல் களத்தில் குறிப்பாக திமுகவுக்குள்ளேயே திமுக- காங்கிரஸ் உறவு தொடர்பான சர்ச்சைகள் மீண்டும் வெடித்துள்ளன. குறிப்பாக, இந்தியா கூட்டணி குறித்தும், காங்கிரஸ் கட்சி குறித்தும் திமுக மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதி வெளிப்படையாகவும், கடுமையாகவும் விமர்சித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "நாம் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே கிடையாது" என்ற அவரது பேச்சு, திமுகவின் மனநிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்கின்றனர் மதுரை உடன்பிறப்புகள்
தமிழகத்தில் 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் தவிக்கும் காங்கிரஸ் கட்சி, இந்த முறை எப்படியாவது ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்ற தீவிர முனைப்புடன் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.
நீண்ட காலமாக திமுக கூட்டணியில் இடம்பெற்று வந்தாலும், அதிகாரத்தில் நேரடி பங்கு கிடைக்காத நிலை காங்கிரஸ் தலைமைக்கும், தமிழகத் தலைவர்களுக்கும் உள்ளுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி வந்துள்ளது. இந்தச் சூழலில்தான் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் முன்வைக்கும் "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு" என்ற வாக்குறுதி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

திமுக காங்கிரஸ் மோதல்
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், தங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என அறிவித்தது தமிழக அரசியலில் புதிய விவாதத்தை தொடங்கியது. இதுவரை ஆட்சி செய்த திமுக, அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளும் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் வழங்காத நிலையில், விஜய்யின் இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகளை ஆச்சரியப்படுத்தியது. இதையே வாய்ப்பாக பயன்படுத்திய காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள், திமுக கூட்டணியிலும் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர்.
மாணிக்கம் தாகூர்
குறிப்பாக விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர், "ஆட்சியில் பங்கு" என்ற கோரிக்கையை வெளிப்படையாக பேசத் தொடங்கினார். சமூக வலைதளங்களிலும் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதே காலகட்டத்தில், ராகுல் காந்திக்கு நெருக்கமான காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து பேசியதும், திமுக கூட்டணியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் திமுக தலைமை மட்டுமல்ல, கூட்டணி கட்சிகளும் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.
தமிழக காங்கிரஸ்
இந்த சூழலில், டெல்லியில் காங்கிரஸ் மேலிடம் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்து பேசி, கூட்டணி குறித்து வெளிப்படையாக பேச வேண்டாம் என அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. அதன் பின்னர் காங்கிரஸ் தரப்பிலிருந்து எழுந்த குரல்கள் தற்காலிகமாக அடங்கியிருந்தன. ஆனால் அந்த அமைதி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டத்தில், திமுக மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதி, காங்கிரஸ் கட்சியை பெயர் சொல்லியே கடுமையாக சாடினார்.
பழனிவேல் தியாகராஜன்
இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தனது உரையில், ஆளுநர் விவகாரம், பாஜக - அதிமுக உறவு, திருப்பரங்குன்றம் சர்ச்சை என பல விஷயங்களை பேசினார் கோ.தளபதி. குறிப்பாக, "மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றோர் எம்பியாகிவிட்டார்கள். அவர்களுக்கு யார் எம்எல்ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என்ற மனநிலை இருக்கிறது. இன்று பங்கு வேண்டும், நாளை வேறு பங்கு வேண்டும் என பேசுகிறார்கள். இதையெல்லாம் தலைமை புரிந்து கொண்டு, அடுத்த தேர்தலில் அவர்களுக்கு சீட் கூட தரக்கூடாது" என்று அவர் கூறினார்.
இண்டியா கூட்டணி
மேலும், "நாம் உணர்வோடு இண்டியா கூட்டணியில் இருக்கிறோம். இந்த கூட்டணியை காப்பாற்றி கொண்டிருக்கிறோம். நாம் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே இருக்காது. டெல்லியில் இந்த கூட்டணி பேசப்படுகிறது என்றால், அதற்கு முதல்வர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் ஆகிய மூவர்தான் காரணம்" என்று கூறிய அவர், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை அமைப்பை கூட கேள்விக்குள்ளாக்கினார். "ஒரு தொகுதிக்கு 3 ஆயிரம், 4 ஆயிரம் வாக்குகள்தான் இருக்கும். வார்டு அளவில் பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி இவ்வளவு பேசுவது வேதனை" எனவும் கடுமையாக விமர்சித்தார்.
திமுக - காங்கிரஸ்
கோ.தளபதியின் இந்த பேச்சு, திமுக - காங்கிரஸ் உறவில் உள்ள மறைமுக விரிசல்களை வெளிப்படையாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குள் உள்ள அதிகார சமநிலை, எதிர்கால தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு போன்ற விவகாரங்கள், வரும் நாட்களில் மேலும் தீவிர அரசியல் விவாதங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications