அண்ணாமலையை "வேறு மாதிரி" டீல் செய்யும் திமுக தலைவர்கள்.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பெயரை குறிப்பிட்டு செய்தியாளர்கள் எந்த கேள்வி கேட்டாலும், எடப்பாடி பழனிசாமி சுத்தமாக கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார். அரிதிலும் அரிதாகவே பதில் அளிப்பார். எடப்பாடி மட்டுமல்ல, உதயநிதி, முதல்வர் ஸ்டாலினுமே பதில் அளிக்கவே மாட்டார்கள்.. அந்த வரிசையில் அமைச்சர் துரைமுருகனும் இணைந்துள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை, அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக மாநில தலைவராக கடந்த 2021ம் ஆண்டில் பொறுப்பேற்றார்.அவர் பாஜக தலைவராக ஆன பின்னர், தமிழகத்தில் அமைந்த திமுக அரசை ஒவ்வொரு பிரச்சனையிலும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இவருடைய அதிரடியான அரசியல் இதுவரை பாஜகவில் இல்லாத ஒன்றாக இருந்தது. ஒவ்வொரு அமைச்சர்களையும் கண்காணித்து, அவர்களுக்கு எதிராக மூவ் செய்து அண்ணாமலை நடத்திய அதிரடி அரசியல் திமுகவிற்கே சில நேரங்களில் சவாலாக இருந்தது.

இந்த சூழலில் கிடைக்கிற கேப்பில் எல்லாம், அண்ணாமலை அதிமுகவையும் விமர்சித்து வந்தார். இதனால் அதிமுகவினரும் கோபத்தில் இருந்தனர். ஒருகட்டத்தில் கோபம் அதிகமாக பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என்ற நிலைப்பாட்டையே அதிமுக எடுத்தது. இதன்படி வருகின்ற 2024-ல், நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக , கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மற்ற கட்சிகளின் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தும்விட்டது.
இதனிடையே அண்ணாமலையின் அரசியலை ஆரம்பம் முதலே வெறுத்து வரும் திமுக, அதிமுக தலைவர்கள், அவரை டீல் செய்யும் விதிமே வேறுமாதிரி இருந்தது. அதிமுகவை பொறுத்தவரை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒருமுறை கூட அண்ணாமலை முன்னின்று நடத்திய எந்த பெரிய பிரச்சனைக்கும் உடனே ஆதரவு தெரிவித்ததும் இல்லை. ஏன் அண்ணாமலையின் கேள்விகளுக்கோ, விமர்சனங்களுக்கோ ஒருமுறை கூட பதில் அளித்தது இல்லை. அரிதிலும் அரிதாகவே பதிலளித்திருப்பார். அதுவும் இப்போது தான் நடந்தது.
அண்ணாமலை தன்னை பெரிய தலைவராக முன்னிறுத்த விரும்புவதாக கருதிய எடப்பாடி பழனிசாமி, அவரை முன்னிறுத்தும் எந்த விஷயத்திற்கும் ஆதரவு தெரிவித்தது இல்லை. ஏன் அவர் பற்றி எந்த கேள்விக்கும் செய்தியாளர்களுக்கு ஆரம்பம் முதலே எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தது இல்லை. தன்னுடைய கட்சியின் மற்ற தலைவர்களை வைத்தே எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க வைத்திருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி இப்படி என்றால், தமிழக முதல்வர் ஸ்டாலின், ஒருமுறை கூட அண்ணாமலையின் பெயரை கூட உச்சரிக்க மறுத்துவிட்டார். எந்த செய்தியாளர் சந்திப்பிலும் அண்ணாமலை பற்றி பேசியதே இல்லை.. பாஜக என்ற தொனியில் தான் முதல்வர் ஸ்டாலின் பேசுவார். பதிலும் அளிப்பார்.இப்படித்தான் இன்று வரை அண்ணாமலையின் அரசியலை கையாண்டு வருகிறார். அண்ணாமலை பற்றி எந்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பதிலும் அளித்தது இல்லை.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பலமுறை அண்ணாமலை பற்றி கேள்விகளை தவிர்த்தே வந்தார். அண்ணாமலைக்கு எல்லாம் பதில் அளிக்க நான் விரும்பவில்லை என்று நேரடியாக உதயநிதி ஸ்டாலினும் தெரிவித்திருக்கிறார்கள், அதேநேரம் அதிமுகவின் எந்த தலைவர்கள் குறித்த கேள்விக்கும் பதிலும் அளிப்பார், பேசுவார்.
இந்நிலையில் அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் சிலர் அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு துரைமுருகன் பதில் அளித்த விதம் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இருந்தது. அண்ணாமலை பெரியவர், அவரை பற்றி சின்னப்பையன் என்னிடம் கேள்விகேட்குறீங்க என்று கையெடுத்து கும்பிட்டார். திமுக தலைவர்கள் எல்லாருமே அண்ணாமலையை வேறுவிதமாக டீல் செய்து வருகிறார்கள் என்பதே நிதர்சமான உண்மையாக உள்ளது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக












Click it and Unblock the Notifications