Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வரலாம்..வரலாம்.. நீட் தேர்வு திணிப்புக்கு எதிராக திமுக அரசு செய்தது இதுதான்! பட்டியல் போட்டு பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் ஏகே ராஜன் குழு அமைத்தது முதல் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தது வரையிலான நீட் எதிர்ப்பு நடவடிக்கைகளை அக்கட்சி விரிவாக பட்டியலிட்டுள்ளது.

நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு சீர்குலைக்கப்பட்டு தற்கொலைகள் அதிகரித்துள்ளன. மாணவர்களின் பெற்றோரும் தற்கொலை செய்தும் நிலை உருவாகி உள்ளது. சென்னை ஜெகதீஸ்வரன் என்ற மாணவரும் அவரது தந்தையும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாட்டில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

DMK Listed Tamilnadu Govt efforts to get exemption from NEET

இந்நிலையில் நீட் தேர்வை திணிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வரும் 20-ந் தேதி திமுக சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான திமுகவின் இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், திமுக மருத்துவ அணி செயலாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

மேலும் அந்த அறிக்கையில் திமுக ஆட்சிக் காலத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் விரிவாக பட்டியலிடப்பட்டுள்ளன.

ஏகே ராஜன் குழு: மே 2021-ல் திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடனே, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் நீட் பாதகங்கள் குறித்து ஆராயச் சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது.

12 முதல்வர்களுக்கு கடிதம்: நீட் விலக்கு கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுநரிடம், ஒப்புதல் வழங்கும்படி பல்வேறு தருணங்களில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார்கள். நீட் தேர்வுக்கு விலக்கு கேட்க வேண்டும் என்றும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக்கோரியும் அக்டோபர் 4, 2021 அன்று, 12 மாநில முதலமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்கள்.

ஆளுநருடன் சந்திப்பு: கடந்த 2021- ஆம் ஆண்டு நவம்பர் 27 -ஆம் தேதியன்று, ஆளுநரை நேரில் சந்தித்து நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமன்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். முதல்வர் ஸ்டாலினின் தொடர் அழுத்தம் - பிற அரசியல் கட்சிகளின் அழுத்தம் - பொதுமக்கள் - மாணவர் இயக்கங்களின் போராட்டத்தின் காரணமாக 5 மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 2, 2022 அன்று நீட் விலக்கு மசோதாவினை ஆளுநர் ரவி சட்டப்பேரவைக்கே திருப்பி அனுப்பினார்.

அனைத்து கட்சிக் கூட்டம்: மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து, ஆலோசிப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், பிப்ரவரி 5, 2022 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தைக் கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டது.

மீண்டும் மசோதா: அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் பிப்ரவரி 8, 2022 அன்று மீண்டும் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதல்வரின் சந்திப்பு: இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்தி, மார்ச் 15, 2022 அன்று தமிழ்நாடு ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்கள்.

DMK Listed Tamilnadu Govt efforts to get exemption from NEET

அமைச்சர்கள் சந்திப்பு: மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், மீண்டும் காலம் தாழ்த்தி வந்த ஆளுநரை ஏப்ரல் 22, 2022 அன்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தினர். இதையடுத்து, நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு ஆளுநர் ரவி மே 5, 2022 அன்று அனுப்பி வைத்தார்.

நாடாளுமன்றத்தில் திமுக: இப்படி தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் திமுக அரசு ஒருபுறம் எடுத்து வருவதும், ஆளுநர் அதனைத் தடுத்து நிறுத்துவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடரிலும், நீட் பிரச்சினையை திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பி வருகின்றனர்.

மோடியிடம் வலியுறுத்தல்: பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிற போதும், முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிற போதும், பிரதமரிடம் வைக்கப்படும் முதல் கோரிக்கையே நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோருவதுதான். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், பிரதமர் மோடியை டெல்லியில் பிப்ரவரி 28, 2023 அன்று சந்தித்தார்கள். அப்போதுகூட, பிரதமர் அவர்களிடம், நீட் ஒழிப்பைத்தான் வலியுறுத்தினார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+