• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சபாநாயகர் பதவியை இவருக்குக் கொடுத்திரலாமா.. திமுகவில் இப்பவே ரெடியாகுறாங்களாம்!

By
|

சென்னை: தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மூலம் எப்படியும் ஆட்சியை பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளது திமுக முகாம். இதனால் அறிவாலய வட்டாரம் உற்சாக வெள்ளத்தில் மிதக்கிறது.

இந்நிலையில் ஆட்சி அமைத்தால் திமுகவில் யார் யாருக்கு என்ன பதவி என்பன உள்ளிட்டவைகள் குறித்தும் இப்போதே அங்கு விவாதிக்கப்படுகிறது. அந்த வகையில் ஒட்டன்சத்திரம் தொகுதி எம்.எல்.ஏ.வும், கடந்த கால் நூற்றாண்டு காலமாக தோல்வி என்றால் என்னவென்றே தெரியாமல் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வருபவருமான சக்கரபாணி சபாநாயகர் ஆகக்கூடும் எனக் கூறப்படுகிறது.

dmk may appoint sakkarapani as assembly speaker if comes to power

சட்டமன்ற செயல்பாடுகளில் அனுபவம் நிறைந்தவர் என்றும், கடந்த திமுக ஆட்சியில் அரசு கொறடாவாகவும் செயல்பட்டவர் சக்கரபாணி. மேலும் திண்டுக்கல் மாவட்ட அரசியலில் ஐ.பெரியசாமிக்கு நிகராக ஸ்டாலினின் குட் புக்கில் உள்ளவர் சக்கரபாணி. இப்படி தலைமையின் நன்மதிப்பை சம்பாதித்து வைத்துள்ளதால் சக்கரபாணிக்கு இம்முறை ஸ்டாலின் உரிய கவுரவம் அளிப்பார் எனக் கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

இதனிடையே சக்கரபாணி நல்லவர் தான், ஆனால் அதிர்ந்து கூட பேசமாட்டார், இவர் எப்படி அதிமுகவினரை சமாளிப்பார்..அதனால் துரைமுருகன் தான் அடுத்த சபாநாயகர் என்கின்றனர் துரைமுருகன் ஆர்மிகள். மேலும், அவரால் மட்டும் தான் அவையில் சிரிப்பையூட்டி கலகல என வைத்துக்கொள்ள முடியும் என்கின்றனர்.

முதல்ல தேர்தல் முடியட்டும்ப்பா. பிறகு ஆள் எடுக்கலாம்... இப்படித்தான் தேனி பக்கம் இப்பவே ஓ ரவீந்திரநாத் குமாரை எம்பியாக்கி விட்டார்கள் ஒரு கோவிலில்.. என்று சிலர் முனுமுனுக்கின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

சென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
வருடம்
வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
2019
தயாநிதி மாறன் திமுக வென்றவர் 4,48,911 57% 3,01,520
சாம் பால் பாமக தோற்றவர் 1,47,391 19% 3,01,520
2014
எஸ்.ஆர் விஜயகுமார் அஇஅதிமுக வென்றவர் 3,33,296 42% 45,841
தயாநிதி மாறன் திமுக தோற்றவர் 2,87,455 36% 0
2009
தயாநிதி மாறன் திமுக வென்றவர் 2,85,783 47% 33,454
முகமது அலி ஜின்னா எஸ்.எம்.கெ அஇஅதிமுக தோற்றவர் 2,52,329 41% 0

 
 
 
English summary
DMK is getting ready to face the big political chanages soon and it may field Sakkarapani as Assembly speaker if comes to power again.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more