Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பனையூர்.. அப்பாவால் விரட்டப்பட்டவர்களின் சரணாலயம்.. ட்ரோல் செய்யும் திமுகவினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக இளைஞர் சங்கத் தலைவரை நியமிக்கும் விவகாரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்க்கும், பாமக நிறுவனர் ராமதாஸ்க்கும் இடையே பொதுக்குழுவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது சென்னை பனையூரில், மூன்றாவது தெருவில் நான் புதிதாக அலுவலகம் ஒன்றை ஆரம்பித்துள்ளேன். அங்கு வந்து அனைவரும் என்னைப் பார்க்கலாம்" என்று அன்புமணி கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். ஏற்கனவே விஜய் அலுவலகம் அங்கு உள்ள நிலையில்.. பனையூர் அப்பாவால் விரட்டப்பட்டவர்களின் சரணாலயம் என்று திமுகவினர் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

தமிழக அரசியல் இப்போது பொதுவெளியைவிடவும், சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படுகிறது. குறிப்பாக ட்விட்டரில் அதாவது எக்ஸ் தளத்தில் அதிகம் பேசப்படுகிறது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப்களை ஒப்பிடும் போது ட்விட்டர் தான் அரசியல் தலைவர்களின் பேச்சு, வீடியோக்கள் அதிகம் விமர்சிக்கப்படும் இடமாக இருக்கிறது. சினிமா, அரசியல், விளையாட்டு என எல்லா வகையான ட்ரோல்கள், விமர்சனங்கள் ட்விட்டரில் தான் செய்யப்படுகிறது.

Anbumani Ramadoss Panayur vijay

எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பது எதற்கு பொருந்துமோ அல்லது இல்லையோ.. அது நிச்சயம் ட்விட்டருக்கு பொருந்தும். அமெரிக்காவில் டிரம்ப் தொடங்கி இந்தியாவில் மோடி வரையிலும், அஜித்குமார் தொடங்கி அனிருத் வரையிலும் இங்கு பேசப்படாதவர்களே இல்லை.. ஸ்டாலின் தொடங்கி விஜய் வரை இன்று வரை விமர்சினத்திறகு உள்ளாகி வருகிறார்கள். டிரெண்டிற்கு தகுந்தாற்போல் ஆளும் கட்சிகள் எதிர்க்கட்சிகளையும், எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியையும் ட்ரோல் செய்கிறார்கள்..

அந்த வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பனையூரில் அலுவலகம் ஆரம்பித்துள்ளதாக கூறியதை திமுகவினர் உள்பட ஆளும் கட்சியினர், அதன் கூட்டணி கட்சியினர் ட்ரோல் செய்து வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.. விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே பட்டானூரில், பாமகவின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது.

இந்த கூட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் பேசும் போது, தன்னுடைய பேரன் முகுந்தன் பரசுராமனை மாநில இளைஞர் சங்கத் தலைவராக அறிவித்தார். அத்துடன் அன்புமணிக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட அன்புமணி ராமதாஸ், "யார்... எனக்கா?" என்று சிரித்துக்கொண்டே கேட்டார். அதற்கு ராமதாஸ் "ஆமாம்" என்றார்.

அப்போது அன்புமணி மைக்கை வாங்கி, "எனக்கெல்லாம் வேண்டாம். அவர் இப்போதுதான் கட்சிக்கு வந்து நான்கு மாதம் ஆகுது. உடனடியாக அவருக்கு பாமக இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பு என்றால், என்ன அனுபவம் இருக்கிறது அவருக்கு? நல்ல அனுபவசாலிக்கு அந்தப் பொறுப்பைக் கொடுங்கள். முகுந்தன் பரசுராமனுக்கு வேறு ஏதாவது பதவி கொடுங்கள். இப்போது பேசும்போது கூட நான் அதைத்தான் கூறினேன். களத்தில் நல்ல ஆட்கள், திறமையானவர்கள் வேண்டும் என்று பேசினேன். வந்த உடனே இளைஞர் சங்க பொறுப்பைக் கொடுத்துக்கிட்டு..." என்று அன்புமணி ஆவேசமானார்.

அப்போது கோபமடைந்த ராமதாஸ், "யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். நான் சொல்வதைக் கேட்கவில்லையென்றால், யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது. இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைக் கேட்க முடியாவிட்டால், யாரும் இனி இந்தக் கட்சியில் இருக்க முடியாது," என்று கறாராக கூறினார். அப்போது அன்புமணி, "அது சரி" என்றார். அப்போது ராமதாஸ், "என்ன சரி, சரி என்றால் போ அப்போ," என்றார்.

தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ், "முகுந்தன் பரசுராமனை பாமக மாநில இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்படுகிறார்," என்று அறிவிப்பு வெளியிட்டார். அதற்கு அன்புமணி, "குடும்பத்தில் இருந்து இன்னொருவரை தூக்கிப் போடுங்கள்," என்று கூறி, கையில் இருந்த மைக்கை மேஜை மீது எறிந்தார்.

பின்னர் பேசிய அன்புமணி, "சென்னை பனையூரில், மூன்றாவது தெருவில் நான் புதிதாக அலுவலகம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறேன். அங்கு வந்து அனைவரும் என்னைப் பார்க்கலாம்" என்று கூறினார். தொடர்ந்து தொலைப்பேசி எண்ணை அறிவித்து, "இந்த எண்ணை குறித்து கொள்ளுங்கள், என்னைத் தொடர்பு கொண்டு அனைவரும் வந்து எப்போது வேண்டும் என்றாலும், என்னை வந்து பார்க்கலாம்" என்று அன்புமணி கூறினார்.

அப்போது பேசிய ராமதாஸ், "மீண்டும் கூறுகிறேன்... உங்களுடைய இளைஞர் சங்கத் தலைவர் முகுந்தன் பரசுராமன். இன்னொரு அலுவலகம் கூட திறந்து நடத்திக்கொள். முகுந்தன் உனக்கு உதவியாக இருக்கப்போகிறார். இதை யாரும் மாற்ற முடியாது. உனக்கு விருப்பம் இல்லையென்றால், அதற்கு வேறு ஒன்றும் நான் சொல்ல முடியாது" என்று ராமதாஸ் கூறினார். இதனால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய ராமதாஸ், "நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். இது நான் ஆரம்பித்த கட்சி. நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும். அப்படி விருப்பம் இல்லாதவர்கள் விலகிக்கொள்ளுங்கள். விருப்பம் இல்லாதவர்கள், என் பேச்சைக் கேட்காதவர்கள் கட்சியிலிருந்து விலகிக் கொள்ளலாம் " என்று காட்டமாக கூறினார்.

இதனிடையே இப்போது ட்ரோல் விஷயத்திற்கு வருவோம்... பனையூரில் அலுவலகம் திறந்துள்ளதாக அன்புமணி திறந்துள்ள அறிவிப்பை திமுகவினர் ட்ரோல் செய்து வருகிறார்கள். பனையூர் அப்பாவால் விரட்டப்பட்டவர்களின் சரணாலயம் என்று ட்ரோல் செய்து வருகிறார்கள். அதற்கு மீம்ஸ் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்கள். பனையூரில் தவெக கட்சி தலைவர் விஜய் அலுவலகம் அமைத்துள்ளார்.

ஏற்கனவே விஜய்க்கும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகருக்கும் கருத்து மோதல் கட்சி ஆரம்பிக்கும் முன்பு இருந்தது. அதன்பிறகு சுமூகம் ஆனது. இந்நிலையில் விஜய் பனையூரில் இருந்து செய்யும் அரசியலை பனையூர் பண்ணையார் என்றும் திமுகவினர் கடந்த சில வாரங்களாக ட்ரோல் செய்து வருகிறார்கள். இப்போது அன்புமணியை விமர்சிக்கிறார்கள். அதேநேரம் பாமகவினரும், தவெகவினரும் ஸ்டாலின், அழகிரி இடையே கடந்த 2016ம் ஆண்டு வாக்கில் நடந்த மோதலை குறிப்பிட்டு திமுகவை விமர்சித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+