காலையிலேயே ஆரம்பித்த உதயநிதி ஸ்டாலின்.. சனிக்கிழமையில் ரவுடி டைம் போட்டோ.. திமுகவினர் எதிர்ப்பு
சென்னை: தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலையில் தனது செல்ல நாயுடன் வாக்கிங் போன நிலையில், அதனுடன் விளையாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு ரவுடி டைம் என்று பெயரிட்டு வெளியிட்டுள்ளார். இதற்கு முன்பாகவும் பல முறை ரவுடி டைம் என்று கூறி நாயுடன் இருக்கும் புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார். அப்போது திமுகவினரே உதயநிதி ஸ்டாலினின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டார்கள். இப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அத்துடன் வெளியில் நடைபயிற்சியும் செல்வார். அப்படி செல்லும்போது, தனது செல்ல நாயையும் வாக்கிங் கூட்டி செல்வார்.. அந்த செல்ல நாயுடன் விளையாடிய புகைப்படங்களை அடிக்கடி எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

அவர் சில வாரங்களுக்கு முன்பு முதல் முறையாக நாயுடன் விளையாடியபடி வெளியிட்ட புகைப்படம் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஏனெனில் பலர் நாய்கடியால் அவதிப்பட்டு வரும் நிலையில், தெருநாய்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் குரல் எழுப்பி வந்தார்கள். அப்போது உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட புகைப்படத்தை திமுகவினர் பலர் ஆதரிக்கவில்லை.. மக்கள் நாய்க்கடியால் அவதிப்படுகிறார்கள். இப்போது இந்த புகைப்படம் அவசியம் தானா என்று கேள்வி எழுப்பினார்கள்.
அடுத்ததாக ஒரு முறை ரிப்பன் கட்டிய படி உதயநிதி ஸ்டாலின் ஒரு முறை ரவுடி டைம் புகைப்படத்தை வெளியிட்டார். அதில் ரிப்பன் கலரை வைத்து அதிமுகவினர், தவெகவினர் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். இதையடுத்து இதுபோன்ற புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று திமுகவினர் இணையதளங்களில் கோரிக்கையும் வைத்தனர். ஆனால் அடுத்தடுத்து ஒவ்வொரு வாரமும் உதயநிதி ஸ்டாலின் ரவுடி டைம் புகைப்படம் என்று வெளியிட்டு வருகிறார். ஆனால் ரிப்பன் கலர் மட்டும் மாறியிருந்தது. இதை திமுக ஆதரவாளர்களே கடுமையாக விமர்சித்தார்கள்.
இதனிடையே சனிக்கிழமையான இன்று காலையிலேயே உதயநிதி ஸ்டாலின் ரவுடி டைம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த திமுக ஆதரவாளர்கள், உதயநிதி ஸ்டாலின் திருந்த போவதில்லை என்று வெளிப்படையாகவே ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
திமுக ஆதரவாளர் ஒருவர் வெளியிட்ட பதிவில், "திமுக ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்றேன் , ஆறு மாதங்களில் தேர்தல், இந்த பதிவெல்லாம் தேவையா? 50 ஆண்டுகள் உங்கள் தந்தையின் உழைப்பு , இன்று இந்திய நாடே போற்றும் ஆட்சி. கவனமாக பதிவு செய்யுங்கள் எதையும். அரசியலில் நம் பதிவுகள் அனைத்தும் கூர்மையான இரு முனை கத்திகளே." இவ்வாறு கூறியுள்ளார்.
இன்னொரு நெட்டிசன்,யாரோ உள்ளடி வேலை பாத்துட்டு இருப்பதாக தோன்றுகிறது என்று விமர்சித்துள்ளார். இன்னொரு நெட்டிசன் இதெல்லாம் நமக்கு தேவையா கோபி அப்படி கேட்பது போல் கேட்கத் தோன்றுகிறது மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களே என்று கூறியுள்ளார். இன்னும் பலர் கடுமையாக விமர்சித்தபடி உள்ளார்கள்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!











Click it and Unblock the Notifications