திமுகவினருக்கு வாய்ப்பூட்டு! கூட்டணி பற்றி பேசவே கூடாது.. ஆர்எஸ் பாரதி திடீர் உத்தரவு.. பின்னணி
சென்னை: திமுகவினர் கூட்டணி பற்றி பொதுவெளியில் பேச இன்று வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளது. கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிக்கட்சியினர் தொடர்பான கருத்துகளை கழக நிர்வாகிகள் பொதுவெளியில் விவாதிப்பதை முழுமையாகத் தவிர்த்திட வேண்டும் என்று கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி இன்று அறிவித்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது வரை திமுக தனது கூட்டணியை தக்க வைத்துள்ளது. குறிப்பாக பல சிறிய கட்சிகள், அமைப்பினர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் கடந்த முறையை விட திமுக கூட்டணி வலுவான நிலையில் தான் உள்ளது.

இதற்கிடையே தான் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தினர். காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் திமுகவுக்கு பதில் விஜயின் தவெக கூட்டணிக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து சமூக வலைதளங்கள் மற்றும் பொதுவெளியில் கருத்து தெரிவித்தனர் இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்தனர்.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி பற்றி யாரும் பேச வேண்டாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் அமைதியாகினர். இப்போது வரை காங்கிரஸ், திமுக கூட்டணியில் தான் உள்ளது.
இந்நிலையில் தான் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி தனது எக்ஸ் பக்கத்தில் இன்று மாலையில் முக்கிய பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், ‛‛கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிக்கட்சியினர் தொடர்பான கருத்துகளை கழக நிர்வாகிகள் பொதுவெளியில் விவாதிப்பதை முழுமையாகத் தவிர்த்திட வேண்டும். தேவையற்ற சர்ச்சைகளினால் எவ்வித பலனும் இல்லை என்பதால் ஆக்கப்பூர்வமான கட்சி பணிகளில் கவனம் செலுத்தி தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். கூட்டணி தொடர்பான முடிவுகளை கழகத்தலைவர் (முக ஸ்டாலின்) உரிய நேரத்தில் அறிவிப்பார்'' என்று கூறியுள்ளார்.
ஆர்எஸ் பாரதியின் இந்த உத்தரவுக்கு பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் திமுக மாணவர் அணி ஏற்பாட்டில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகவை சேர்ந்த மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ கோ தளபதி பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ கோ தளபதி, ‛‛சிலர் காங்கிரஸில் இருக்கிறார். இப்போது அவர்களுடைய பெயரை சொன்னாலும் தவறு இல்லை. நான் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்ற சிலர் குறித்து குறிப்பிட்டு கூறுகிறேன். அவர்கள் இப்போது எம்பி பதவியில் இருக்கிறார்கள். அதனால், இந்தத் தேர்தலில் எவன் எம்எல்ஏ ஆகிறான் என்று அல்லவோ, இல்லை என்றால் என்ன என்று அவர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இதை தலைமை புரிந்து, அடுத்த முறை அவர்களுக்கு சீட்டுகளை வழங்க கூடாது. அதற்காக நமக்கு செய்யக்கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால், நாம்உணர்வு கொண்டே இந்திய கூட்டணியில் நிலைத்திருக்கிறோம்.
நாம் இந்தியா கூட்டணியைத் காப்பாற்றி வருகிறோம். நாமில்லாவிட்டால், இந்தியா கூட்டணி கிடையாது முழுக்க சேதமடைக்கும். டெல்லியில் இதற்கான பேச்சு நடக்கும் போது, அதற்கு முக்கிய காரணிகள் முதலமைச்சர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி மற்றும் அகிலேஷ் யாதவ் மூவர். காங்கிரசுக்கு ஒரு தொகுதிக்கு மட்டுமே சில ஆயிரம் வாக்குகள் கிடைக்கின்றன. பூத் கமிட்டியை அமைக்க ஆள் இல்லாத காங்கிரஸ் இந் த அளவிற்கு பேசுகிறார்கள் . இதுதான் மிகவும் வேதனையாக உள்ளது'' என்று கூறினார். இதற்கு ஜோதிமணி மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோர் எதிர்வினையாற்றி இருந்தனர்.
அதுமட்டுமின்றி கோ தளபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வலியுறுத்திஉள்ளார். ஏற்கனவே திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. டெல்லியில் கார்கே, ராகுல் காந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கூட்டணி பற்றி வெளியில் பேச வேண்டாம் என்று வாய்ப்பூட்டு போட்டபிறகு காங்கிரஸ் கட்சியினர் அமைதியாகினர். இப்போது கோ தளபதியின் பேச்சு மீண்டும் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் திமுகவினர் கூட்டணி பற்றியோ, கூட்டணி கட்சியினர் பற்றியோ பொதுவெளியில் பேச வேண்டாம் என்று அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி












Click it and Unblock the Notifications