"ஹாய் மேன் தோனி.. ஹலோ சார் ஹவ் ஆர் யூ".. துரைமுருகன் எங்கே போனாலும் ஒரே ஜாலிதான்.. கலகலத்த டெல்லி!

துரைமுருகனின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார் தோனி சென்னை: வழக்கத்துக்கு மாறாக தோனி, துரைமுருகனை சந்தித்து பேசியதுதான் இணையத்தில் இன்னமும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Subscribe to Oneindia Tamil

திமுக மூத்த தலைவர் துரைமுருகனுக்கு கிரிக்கெட் என்றால் கொள்ளை பிரியம்.. ஒருமுறை பேட்டியில், கிரிக்கெட் பற்றி கேள்வி எழுப்பியிருந்தனர்..

அதற்கு துரைமுருகன், "கிரிக்கெட்டில் எத்தனை கோல் போட்ருக்காங்கன்னு கேக்குற அளவுக்குதான் எனக்கு கிரிக்கெட்ட பத்தின புரிதல் இருந்துச்சு.. ஆனா, எனக்கு கிரிக்கெட் குறித்து விஷயங்களை கற்று தந்ததே மறைந்த கலைஞர்தான்.." என்று சொன்னார்..

கிரிக்கெட்

கிரிக்கெட்

உடனே அந்த நெறியாளர், அப்படின்னா உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்டார்.. அதற்கு துரைமுருகன் கொஞ்சமும் யோசிக்காமல் தோனி என்றார்.. எதையுமே கூலாக எடுத்து கொள்கிறார்.. டீமை கூலாகவே கையாள்கிறார்..தலைமை தாங்க கூடியவர்களுக்கு இருக்கவேண்டிய பண்பு இது.. அதனால்தான் எனக்கு தோனியை பிடிக்கும் என்று அந்த பேட்டியில் துரைமுருகன் சொல்லி இருந்தார்.

 ஐபிஎல்

ஐபிஎல்

கடந்த 2018ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்காக சென்னை வந்திருந்தபோது தோனியை, சந்தித்து பேசியதுடன், அப்போதைய ஐபிஎல் இறுதிப் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதற்காக தோனிக்கு துரைமுருகன் வாழ்த்து தெரிவித்தார்.. அதற்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் டி-ஷர்டில் தோனி தன்னுடைய கையெழுத்தை போட்டு துரைமுருகனுக்கு பரிசாக தந்திருந்தார்..

 தோனி

தோனி

இப்படிப்பட்ட சூழலில்தான் மறுபடியும் தோனியை சந்தித்துள்ளார் துரைமுருகன். டெல்லி ஏர்போட்டில் திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கதிர் ஆனந்த், அமைச்சர் துரைமுருகன், உள்ளிட்டோர் விஐபி லாஞ்சில் உட்கார்ந்திருந்தனர்.. அவர்களுக்கு சற்று தொலைவில், தோனியும் உட்கார்ந்துள்ளார்.. அப்போதுதான் இவர்கள் எதேச்சையாக பார்த்துகொண்டனர்.

உடல்நலம்

உடல்நலம்

துரைமுருகனை ஏற்கனவே தோனி சந்தித்து பேசியுள்ளதால், அவரை பார்த்ததும் டக்கென எழுந்து வந்தார்.. அதேபோல, தோனியை பார்த்ததும் துரைமுருகனும் எழுந்து வந்துள்ளார்.. ஹலோ ஹவ் ஆர் யூ.. என்று துரைமுருகனின் உடல்நலம்குறித்து விசாரித்துள்ளார் தோனி..

போஸ்

போஸ்

இதை பார்த்த அங்கிருந்தவர்களும், ஒரு போட்டோ எடுத்து கொள்கிறோம் என்று சொன்னதும், அப்படியே நின்று போட்டோவுக்கு ஒரு போஸ் தந்துள்ளனர்.. துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்தும், தோனி, அவரது மனைவி சாக்‌ஷி, மகள் ஆகியோர் எடுத்து கொண்ட போட்டோதான், 2வது நாளாக இணையத்தில் ரவுண்டடித்து கொண்டிருக்கிறது.

 சந்திப்பு

சந்திப்பு

யதேச்சையாக எடுத்ததால், இந்த போட்டோவில் டிஆர் பாலு உள்ளிட்டோர் இடம்பெற முடியாமல் போய்விட்டது. மொத்தமே 5 நிமிஷம்தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது.. பொதுவாக இப்படி பொதுவெளியான சந்திப்புகளை தோனி தவிர்த்துவிடுவார்.. ஆனால், அவர் துரைமுருகனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதும், உடல்நலம் விசாரித்ததும் பேசுபொருளாக மாறி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+