இப்போ வேலுமணி.. அடுத்து 'அவர்'தான்.. பல்லாயிரம் கோடி சம்பாதிச்சு இருக்காரு.. அமைச்சர் நாசர் பரபரப்பு
சென்னை: முன்னாள் அமைச்சர் வேலுமணியைத் தொடர்ந்து அடுத்து ஜெயக்குமார் வீட்டில் தான் ரெய்டு நடக்கும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் நாசர், எந்தவொரு தவறும் செய்யவில்லை என்றால் ஏன் பதறுகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய வர்த்தகர்கள் முன்னேற்றப் பேரவையின், இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, வளசரவாக்கத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திடம் வழங்கும் விழா நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், மதுரவாயல் சட்டசபை உறுப்பினர் கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெள்ளை அறிக்கை ஏன்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், "எதிர்க்கட்சியாக இருந்த போதே மாநிலத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஆனால் அதை அதிமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட மறுத்தது. திமுக ஆட்சி வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார்.

அடுத்து ஜெயக்குமார் தான்
இதன் காரணமாகவே வெள்ளை அறிக்கையை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்தே வருகின்றனர். இப்போது முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் ரெய்டு நடந்துள்ளது. அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீது தான் நடவடிக்கை இருக்கும். அவர்கள் முறைகேடான வகையில் பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தவர்கள். அதனால் தான் பதறுகிறார்கள். எந்தவொரு தவறும் செய்யவில்லை என்றால், அதை மக்கள் முன்னால் நிரூபிக்கட்டும். நிரூபித்த பிறகு வெளியே வரட்டும்.

1.5 டன் ஆவின் இனிப்பு
தீபாவளி சமயத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வீட்டுக்கு 1.5 டன் ஆவின் இனிப்புகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இது குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் விரைவில் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் வேண்டாம்" என்று அவர் தெரிவித்தார்.

Array
மேலும், ஒரு லிட்டர் பால் விவசாயியிடம் இருந்து 32 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யப்பட்டு, அதைப் பொதுமக்களுக்கு 42 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகத் தெரிவித்த அமைச்சர் நாசர், இதில் மொத்த வியாபாரிகளுக்கு 1.50 ரூபாய் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு 75 காசு அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அதேபோல போலி கார்டுகளைக் கண்டறிவது குறித்தும் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
Recommended Video

எஸ் பி வேலுமணி
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி முறைகேடாகப் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைக் குவித்ததாக அறப்போர் இயக்கம் மற்றும் ஆர் எஸ் பாரதி புகார் அளித்திருந்தனர். அதிமுக ஆட்சியிலிருந்த வரை இந்த புகார்கள் மீது எஃப்ஐஆர் கூட பதிவு செய்யப்படாமல் இருந்தது. இப்போது அந்த புகார்கள் மீது தான் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். செவ்வாய்க்கிழமை எஸ் பி வேலுமணிக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றன.

திடீர் பரபரப்பு
இந்நிலையில், அடுத்து எந்த முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பது போல பல்வேறு வியூகங்கள் இணையத்தில் பரவி வருகிறது. அந்த பட்டியலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் உள்ளார். இந்தச் சூழலில் திமுக அமைச்சர் ஒருவரே அடுத்து ஜெயக்குமார் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications