"Operation KAS".. வலைவீசிய மேற்கு மண்டல மினிஸ்டர்.. நழுவிய செங்கோட்டையன்.. அறிவாலயம் வெயிட்டிங்!
சென்னை: அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிரடியாக கலகக் குரல் எழுப்பியிருப்பது அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன்.. அதிமுகவின் நிர்வாகிகள் பலரது தூக்கத்தையும் தொலைக்க வைத்திருக்கிறது செங்கோட்டையனின் இந்த போர்க்கொடி. இந்த சூழ்நிலையில் செங்கோட்டையனை வலையில் சிக்க வைக்க மேற்கு மண்டல அமைச்சர் தமது லாபி மூலம் படுதீவிரமாக முயற்சிக்கிறாராம். ஆனாலும் நம்பிக்கையில்லாமல் இருக்கும் அறிவாலயத் தலைமையோ, முயற்சி செய்து பாருங்கள்.. ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறோம் என சொல்லிவிட்டதாம்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் அத்தியாயம் தொடங்கிய நாள் முதலே அனைவரது பார்வையும் செங்கோட்டையன் மீதே இருந்தது. ஏனெனில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் உள்நுழைந்து கோலோச்ச வழிவகுத்த குருநாதரே செங்கோட்டையன்தான்.

முன்னேறிய எடப்பாடி பழனிசாமி
அதிமுகவில் சடுகுடு ஆடும் 'ஸ்லீப்பர் செல்' செங்கோட்டையன்.. கேப்டன்' சசிகலா அண்ட் கோ செம்ம ஹேப்பி!
ஜெயலலிதாவால் சில பல காரணங்களுக்காக வேண்டா வெறுப்பாக செங்கோட்டையன் தூக்கி எறியப்பட அந்த இடத்தை லாவகமாக, விசுவாசத்தின் உச்சமாக வெளிப்படுத்தி கைப்பற்றிக் கொண்ட எடப்பாடி முதல்வராக, தற்போது அதிமுக பொதுச்செயலாளராக விஸ்வரூபம் காட்டி நிற்கிறார்.
உடனே பேசிய மேற்கு மண்டல அமைச்சர்
இந்த நிலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை புறக்கணிப்பதாக என்கிற 'முதல்' முழகத்துடன் தமது திருவிளையாடலை செங்கோட்டையன் தொடங்கி இருக்கிறார். செங்கோட்டையனின் கலகக் குரலை கேள்விப்பட்டதும் சசிகலாவை விட மிகவும் மகிழ்ந்து போனது மேற்கு மண்டல அமைச்சர்தானாம்.. உடனே செங்கோட்டையன் தரப்பை தொடர்பு கொண்டுவிட்டதாம்.
க்ரீன் சிக்னல் தந்த அறிவாலயம்
செங்கோட்டையன் விவகாரம் குறித்து அறிவாலயத் தலைமையிடமும் விவாதித்திருக்கிறார் அமைச்சர். அறிவாலயத் தலைமையோ, நிச்சயம் நம் பக்கம் வர வாய்ப்பு இல்லைதான்.. இருந்தாலும் முயற்சி செய்து பாருங்கள்.. கவனமாகவும் செய்யவும்.. முடிவு என்ன வரும் என நாங்களும் காத்திருக்கிறோம் என தெரிவித்துவிட்டதாம்.
Operation KAS
அறிவாலயத் தலைமை பட்டும் படாமல் பேசினாலும் செங்கோட்டையனை 'தூக்கி' காண்பித்து தம்மை பார்த்து ஒட்டுமொத்த அறிவாலயமும் மிரள வைக்க வேண்டும் என்ற வேகத்தில் "Operation KAS"- ஐ கையில் எடுத்துவிட்டாராம் அமைச்சர். அதேநேரத்தில் செங்கோட்டையன் தரப்போ, என்னைப் பற்றி அனேகமாக முழுமையாக அறிந்திருப்பவர் மேற்கு மண்டல அமைச்சர்கள் இருவருமே.. அவர்களுக்கு நான் எந்தப் பக்கம் போவேன் என்பது கூட தெரியும்.. இருந்தாலும் முயற்சித்துதான் பார்க்கிறார்கள்.. அது அவர்களது விருப்பம்.. நாம் நமது விருப்பத்தை மட்டும் தெரிவிப்போமே..எதற்கு பகை என நாசூக்காக சொல்லிக் கொண்டிருக்கிறதாம். அதுசரி அரசியலில் எந்த புற்றில் எந்த பாம்பு எப்போது வெளியே வரும் என யாருக்குதான் தெரியும்? என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
செங்கோட்டையன் பிரச்சனை என்ன?
கோவை அன்னூர் அருகே அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர். இந்த விழாவை மேற்கு மண்டல சீனியரான முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் புறக்கணித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், எங்களை வளர்த்து அடையாளம் காட்டியவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா. இந்த இருவரது படமுமே எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழா நிகழ்வுகளில் இடம் பெறவில்லை. இத்தனைக்கும் அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்தவர் ஜெயலலிதா. இதனை எப்படி எங்களால் ஏற்க முடியும்? என்றார். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெயக்குமாரோ, எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தியது அதிமுக அல்ல; விவசாயிகள் அமைப்புதான் என மழுப்பலாக மட்டுமே பதிலளித்துள்ளார். இந்த பின்னணியில்தான் அறிவாலயத் தலைமையும் கோதாவில் குதித்துவிட்டதாம்
-
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
பத்திரிகையாளர்களை மிரட்டினாரா செங்கோட்டையன்.. முற்றிய வாக்குவாதம்.. ப்ரஸ்மீட்டில் பரபரப்பு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications