அதிமுகவில் சடுகுடு ஆடும் 'ஸ்லீப்பர் செல்' செங்கோட்டையன்.. கேப்டன்' சசிகலா அண்ட் கோ செம்ம ஹேப்பி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென கலகக் குரல் எழுப்பியதன் பின்னணியில் இருப்பது சசிகலாவும் அவரது குடும்பத்தினரும்தான்; இதனால் செங்கோட்டையன் விவகாரத்தை முன்வைத்து மீண்டும் எடப்பாடி பழனிசாமியை காட்டமாக விமர்சித்து வருகிறார் டிடிவி தினகரன்.. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் இனிவரும் ஒவ்வொரு நாளும் எடப்பாடி பழனிசாமிக்கு அக்னி பரீட்சையாகவே இருக்கும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

ஜெயலலிதாவால் ஓரம்கட்டப்பட்டு ஏறத்தாழ அரசியல் அத்தியாயத்தின் இறுதி கட்டத்தில் இருந்தவர்தான் கே.ஏ.செங்கோட்டையன். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மீண்டும் உயிர் பெற்றது செங்கோட்டையன் அத்தியாயம்.. காரணம் சசிகலா குடும்பத்தின் மீதான 'மாறாத' விசுவாசம் தொடர்ந்ததால்தான்.

edappadi palaniswami Sengottaiyan AIADMK sasikala

செங்கோட்டையன் பக்கம் திரும்பிய சசிகலா

பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த 'குருநாதர்' செங்கோட்டையன்..அதிர்ந்து போன சிஷ்யர் எடப்பாடி பழனிசாமி


இதனாலேயே சசிகலா சிறைக்குப் போகும் நிலையில் கூவத்தூரில் கே.ஏ. செங்கோட்டையனை முதல்வராக்க அவரது குடும்பம் தீவிரமாக லாபி செய்தது. ஆனால் அன்றைக்கு செங்கோட்டையனுக்கு இரட்டை இலக்க கோடிகளில் பெரும் கடன் இருந்தது; என்னதான் நிலம் புலம் இருந்தாலும் சுமக்க முடியாத இரட்டை இலக்க கோடிகள் கடனை சுமப்பதால் 'கப்பம்' செலுத்த முடியாது சின்னம்மா என கண்கலங்கி நின்றதால் சசிகலாவின் சாய்ஸ் எடப்பாடி பழனிசாமியானது என்பது அதிமுகவில் உள்ள அத்தனை பேருக்கும் தெரிந்ததுதான்.

செங்கோட்டையனின் விசுவாசம்

டெல்லி அதிமுக அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியையும் புறக்கணித்த செங்கோட்டையன்- இபிஎஸ் அவசர ஆலோசனை!


எடப்பாடி பழனிசாமி முதல்வரான நிலையில் சசிகலா குடும்பத்தின் நெருக்கடியால் தனது குருநாதரான கே.ஏ.செங்கோட்டையனை வேண்டா வெறுப்பாக அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார். அன்றில் இருந்து கே.ஏ.செங்கோட்டையன் அதிகமாக கவனம் செலுத்தியது தமது இரட்டை இலக்க கோடிகளிலான கடன்களை முடிவுக்கு கொண்டு வருவதுதான். அந்த கடன்கள் முடிவுக்கு வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியோ சசிகலாவுக்கு எதிரியாகிவிட்டார்; ஆனால் செங்கோட்டையனோ சசிகலா குடும்பத்திடம் இருந்து இம்மியளவும் விலகாமல் இன்று வரை தொடர்பில்தான் இருந்து வருகிறார்.

சசிகலா அண்ட் கோ ஹேப்பி

நாளும் நேரமும் வரட்டும் சின்னம்மா.. பார்த்துக் கொள்ளலாம் என்றே காத்திருந்த செங்கோட்டையனை களமாட வைத்துவிட்டது மன்னார்குடி ரிமோட் கண்ட்ரோல். தங்களது ஸ்லீப்பர் செல்களில் ஒன்றான செங்கோட்டையனின் இந்த பிரளயம் நிச்சயம் அதிமுகவில் ஆழிப்பேரலை எனும் சுனாமியாகத்தான் கரை சேரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையோடு இருக்கிறாராம் 'கேப்டன்' சசிகலா.,


நெருப்பில் எண்ணெய் ஊற்றும் டிடிவி

இப்படி தங்களது 'ஸ்லீப்பர் செல்' அதிமுகவுக்குள் சடுகுடு ஆடுவது சசிகலா அண்ட் கோவுக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சியை தந்துள்ளதாம். இதனால்தான் இந்த கலக ஜோதியில் தமது பங்குக்கும் எண்ணெய் ஊற்றி தீயை வளர்க்கும் திருப்பணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் இறங்கி, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சிக்கிறார் என்கின்றன அதிமுக மற்றும் அரசியல் வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+