"இவன் வேற ரொம்ப டார்ச்சர் பண்றான்!" விடாமல் கோஷமிட்ட திமுக தொண்டர்! தலை மீதே கை வைத்த சிவசங்கர்
சென்னை: பொதுவாக இந்தியாவில் அரசியல் தலைவர்களுடன் வரும் தொண்டர்கள் கோஷம் எழுப்பி வருவார்கள். ஆனால், சில சமயம் கொஞ்சம் எல்லை மீறி கோஷம் இருக்கும். அது சம்பந்தப்பட்ட அரசியல் தலைவருக்கே ஒரு மாதிரி இருக்கும். அப்படியொரு சம்பவம் தான் பெரம்பலூரில் நடந்துள்ளது. அமைச்சர் சிவசங்கருக்கு பின்னால் இருந்து தொண்டர் போட்ட கோஷத்தால் அவரே கடுப்பாகிவிட்டார்.
சென்னையில் இருந்து பெரம்பலூருக்கு இப்போது பல பேருந்துகள் இருந்தாலும் கூட ஏசி பேருந்துகள் எதுவும் இல்லை. கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், இந்த ரூட்டில் ஏசி பேருந்துகளைத் தமிழக அரசு இயக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த கோரிக்கையை ஏற்றுப் பெரம்பலூர் முதல் சென்னை வரை ஏசி பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டது.

அமைச்சர் சிவசங்கர்
பேருந்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பிறகு அமைச்சர் சிவசங்கர் தனது ஆதரவாளர்களுடன் பேருந்தில் சென்றுள்ளார். சிவசங்கர் தனது ஆதரவாளர்களுடன் பேருந்தில் சென்றார். அப்போது அமைச்சருக்குப் பின்னால் இருந்த தொண்டர் ஒருவர் ஆர்வ மிகுதியில் கோஷம் போட ஆரம்பித்தார். அமைச்சர் சிவசங்கர் வாழ்க அது இது என கோஷம் போட ஆரம்பித்தார். இதை கேட்ட உடன் அமைச்சர் சிவசங்கர், "இவரை புடிங்க.. என்னால முடியல. டார்ச்சர் பண்றான்" என்று சிரித்துக் கொண்டே அருகே இருப்போரிடம் கூறினார்.
அடங்காத தொண்டர்
ஆனாலும், அடங்காத அந்த தொண்டர் தொடர்ந்து கோஷங்கள் அள்ளி வீசினார். ஒரு கட்டத்தில் நிரந்தர அமைச்சர் என்று சொன்னவுடன் சிவசங்கரே பதறிவிட்டார். உடனே பின்னால் திரும்பி, "சும்மா இருய்யா" என்பது போல வாய் மேல் விரலை வைத்து காட்டினார். ஆனால், அமைச்சர் சொல்லியும் அவர் கேட்கவில்லை. அண்ணன் வாழ்க அண்ணன் வாழ்க எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தார்.
சும்மா இருய்யா
உடன் சென்ற எல்லாரும் சேர்ந்து சும்மா இருய்யா என்று குரலை உயர்த்திய பிறகே அந்த நபர் அமைதியானார். வேண்டாம் என்று திரும்பச் திரும்ப சொல்லியும் கேட்காத தொண்டரைப் பார்த்து, அமைச்சர் சிவசங்கர் தலையில் அடிக்காத குறையாகச் சிரித்துக் கொண்டார். எல்லாரும் சொன்ன பிறகே அவர் அமைதியானார். அதன் பிறகே அமைச்சர் அமைதியாகத் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. பலரும் அந்த தொண்டரின் பாசம் வேற லெவலில் இருப்பதாகப் பதிவிட்டு வருகிறார்கள். இன்னும் சிலர் ஓவராக கூவறான்ப்பா என்று வடிவேலு பட டயலாக்கையும் பதிவிட்டு வருகிறார்கள். அதேநேரம் ஏதோ எப்படியோ பெரம்பலூரில் இருந்து குளுகுளு பயணத்தில் இனி சென்னை போகலாம் என்பதால் பெரம்பலூர் மக்கள் மகிழ்ச்சியாகவே உள்ளனர்.












Click it and Unblock the Notifications