"காமராஜர் எப்போதும் திமுகவை விட்டுக் கொடுத்தது இல்லை.!" குட்டி கதை சொல்லும் அமைச்சர் நாசர்
சென்னை: கல்வி திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர் காமராஜர் குறித்து சில நெகிழ்ச்சியான கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் குமணன்சாவடியில் கல்வித் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் சுமார் 1200 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குக் கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அமைச்சர் நாசர்
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நாசர், "மறைந்தும் கூட காமராஜர் நம்முடன் தான் வாழ்ந்த கொண்டு இருக்கிறார். முழுக்க முழுக்க இந்தியாவுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் தான் காமராஜர். இதற்காகத் தான் அவரை நாம் கொண்டாடி வருகிறோம். அவரை பெருமைப்படுத்தும் விதமாகவே சென்னை கடற்கரைச் சாலைக்கும் கூட அவரது பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

மரியாதை
காமராஜர் நமது நாட்டை வளர்க்க வழங்கிய தொண்டு மிகப் பெரியது. சென்னையிலேயே காமராஜருக்கு முதல்முறையாகச் சிலை வைத்ததும் திமுக தான் என்பதை மறந்துவிடக் கூடாது. அதேபோல காமராஜரும் கூட ஒரு எப்போதும் திமுகவை விட்டுக் கொடுத்தது இல்லை" என்று குறிப்பிட்ட நாசர், திமுக அரசு காமராஜர் மீது எந்தளவு மரியாதையை வைத்து இருந்தது என்பதை விளக்கும் வகையில் குட்டி கதை ஒன்றையும் பரிந்து கொண்டார்.

குட்டி கதை
அமைச்சர் மேலும் கூறுகையில், "கருணாநிதி முதல்வராக சமயத்தில், காமராஜர் ஆந்திராவுக்குச் செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆந்திராவில் வைத்து அவரை அம்மாநில அரசு கைது செய்யத் திட்டமிட்டு இருந்தது. இந்தத் தகவல் முதல்வராக இருந்த கருணாநிதிக்குத் தெரிய வந்தது. உடனே காமராஜரிடம் ஆந்திரா செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். இருப்பினும், அதையும் மீறி காமராஜர் ஆந்திராவுக்குப் புறப்பட்டார். அமைச்சர் மேலும் கூறுகையில், "கருணாநிதி முதல்வராக சமயத்தில், காமராஜர் ஆந்திராவுக்குச் செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆந்திராவில் வைத்து அவரை அம்மாநில அரசு கைது செய்யத் திட்டமிட்டு இருந்தது. இந்தத் தகவல் முதல்வராக இருந்த கருணாநிதிக்குத் தெரிய வந்தது. உடனே காமராஜரிடம் ஆந்திரா செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். இருப்பினும், அதையும் மீறி காமராஜர் ஆந்திராவுக்குப் புறப்பட்டார்.

வீட்டில் விட்ட போலீசார்
இதனால் திருத்தணியில் வைத்து அவரை தமிழ்நாடு போலீசார் கைது செய்தனர். ஆனால், கைது செய்து சிறைக்கு அழைத்துச் செல்லவில்லை. நேராகச் சென்னைக்கு அழைத்து வந்து அவரது வீட்டில் விட்டுச் சென்றார்கள். அந்தளவுக்குக் காமராஜர் மீது மரியாதையை வைத்துள்ளோம். நமது நாட்டிற்குப் பல திறமையான பிரதமர்கள், ஆளுநர்களை உருவாக்கித் தந்த பெருமை காமராஜரையே சேரும்.

நாட்டிற்குச் சொந்தமானவர்
அவர் மறைந்த போதும் கூட, காங்கிரஸ் கட்சியினர் அவரது உடலைக் காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கத் தான் முடிவு செய்திருந்தனர். ஆனால், காமராஜர் காங்கிரசுக்கு மட்டும் சொந்தமானவர் இல்லை.. தமிழகத்திற்கே சொந்தமானவர் என்று கூறி கிண்டியில் உள்ள தோட்டத்தில் காமராஜரை அடக்கம் செய்து, அங்கு அவருக்கு மணிமண்டபத்தையும் கட்டியது திமுக அரசு தான்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications