J Anbazhagan: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை எப்படி உள்ளது..? மருத்துவமனை பரபரப்பு அறிக்கை
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
Recommended Video
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக நேற்று முன்தினம் குரோம்பேட்டை பகுதியில் உள்ள ரிலா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் நேற்று காலை அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மருத்துவமனை அறிக்கை
இந்தநிலையில், மருத்துவமனை தலைமை செயலதிகாரி இளங்குமரன் கலியமூர்த்தி இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரிலா இன்ஸ்டியூட் மற்றும் மருத்துவ மையத்தின் பிரத்தியேக கொரோனா வைரஸ் சிகிச்சை மருத்துவமனை பிரிவிலல், ஜெ.அன்பழகன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா பாதிப்பு
மூச்சுத்திணறல் பிரச்சனையுடன் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பிசிஆர் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. ஆரம்பத்தில் முகத்தில் பொருத்தக்கூடிய ஆக்சிஜன் வழங்கும் கருவி மூலமாக அவரால் ஆக்சிஜன் சுவாசிக்க முடிந்தது. ஆனால் பிறகு சுவாசத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

வென்டிலேட்டர்
தற்போது அவர் 80% அளவுக்கான ஆக்சிஜன் சப்ளையை வென்டிலேட்டர் மூலமாக பெற்று வருகிறார். கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலையில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. இவ்வாறு மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர்கள்
இதனிடையே, சில மூத்த திமுக தலைவர்கள், இன்று அதிகாலை, அன்பழகன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு விசிட் செய்துள்ளனர். ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்காமல், அவர்கள் சென்று, மருத்துவர்களிடம் அன்பழகன் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications