களத்தில் இறங்கி பணியாற்றினார்.. கடைசி வரை தேடி தேடி மக்களுக்கு உதவினார்.. போய் வாருங்கள் அன்பழகன்!
சென்னை: இந்தியாவில் கொரோனா காரணமாக பலியான முதல் எம்எல்ஏ ஜெ. அன்பழகன்தான். மக்களுக்கு கடைசி நாட்களில் கூட இவர் களப்பணிகளை செய்து வந்தார்.
Recommended Video
திமுக சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் கொரோனா பாதிப்பு காரணமாக இன்று காலையில் காலமானார். கொரோனா தாக்கப்பட்டு கடந்த 2-ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இவர் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை அவரின் உயிர் பிரிந்தது.

மக்கள் பணி
கொரோனா சமயத்தில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்பழகன் திமுக சார்பாக உதவி வந்தார். திமுகவினர் தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் மக்களுக்கு தேடி தேடி உதவி செய்து வந்தனர். இதற்காக திமுக சார்பாக ஒன்றிணைவோம் வா என்று திட்டமிமும் செயல்படுத்தப்பட்டது. இந்த அன்பழகன் தனது தொகுதியான சேப்பாக்கத்தில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவி வந்தார்.

தெரியாது
இவர் அங்கு பல்லாயிரம் மக்களுக்கு பொருட்கள் கொடுத்தும், நிதி உதவி அளித்தும் உதவி இருக்கிறார். மிக தீவிரமாக இவர் களப்பணிகளை செய்து வந்தார். இதன் மூலம் இவருக்கு கொரோனா வந்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ஆனால் இவருக்கு எப்படி கொரோனா வந்தது என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

அன்பழகன் முதல் நபர்
தன்னுடைய உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் மக்களுக்காக இவர் உதவி செய்தார். வயோதிகத்திற்கும் இடையில் இவர் களத்தில் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா காரணமாக பலியான முதல் எம்எல்ஏ ஜெ. அன்பழகன்தான். இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக எம்எல்ஏ யாரும் பலியாகவில்லை. இந்தியா முழுக்க இருக்கும் அரசியல்வாதிகளை இந்த மறைவு அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.

எத்தனை பேர்
முக்கியமாக திமுகவின் உறுப்பினர்களையும், திமுகவின் மூத்த தலைவர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தியாவில் பெரிய அளவில் எம்எல்ஏக்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. நேற்று பாஜகவின் இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பீத் பத்ராவிற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி












Click it and Unblock the Notifications