"அபாண்டமான குற்றச்சாட்டு! பணிப்பெண்ணை குடும்பத்தில் ஒருவராகவே பார்த்தோம்!" மருமகள் மெர்லினா விளக்கம்
சென்னை: பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் வீட்டில் வேலை செய்து வந்த இளம்பெண் தாக்கப்பட்டதாகப் புகார் எழுந்த விவகாரம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து எம்எல்ஏ கருணாநிதியின் மருமகள் மெர்லினா விளக்கமளித்துள்ளார்.
பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து வருகின்றார். இவருக்கு மெர்லினா என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது.

இவர்கள் வீட்டில் பட்டியலின இளம் பெண் ஒருவரைக் கடந்தாண்டு முதல் வேலைக்கு வைத்துள்ளனர். தன்னை மெர்லினா அடித்து துன்புறுத்தியதாக அந்த பணிப்பெண் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், உடலில் தனக்கு ஏற்பட்ட காயங்களையும் அவர் காண்பித்தார்.
பகீர் புகார்: இது வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. பலரும் மெர்லினா செயலை கடுமையாக கண்டித்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாடினர். அவர்கள் மீது போலீசர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே எம்எல்ஏ கருணாநிதியும் இந்த விவகாரத்தில் விளக்கமளித்திருந்தார். அவர்கள் தனியாக வசித்து வருவதாகவும் இது குறித்து தனக்கு முழு விவரம் தெரியாது என்றும் கூறியிருந்தார்.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து மெர்லினாவும் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், "வணக்கம் நான் மெர்லினா.. கடந்த 2, 3 நாட்களாகவே இந்த பிரச்சினை ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த பிரச்சினை எதனால் நடக்கிறது என்று சத்தியமாக எங்களுக்குப் புரியவில்லை. நான் அனைவருக்கும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதனால் எங்களுக்குக் கெட்ட பெயர். பலரும் எங்களை மோசமாகத் திட்டுகிறார்கள்.
தவறாகப் பேச வேண்டாம்: நடந்தது என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல் தயவு செய்து மற்றவர்களைத் தவறாகப் பேசாதீர்கள். ஒரு அரசியல் பின்புலத்தில் இருந்து வருவதால் அதை வைத்து யாரையும் மிரட்டும் கொடுமைக்காரர்கள் நாங்கள் இல்லை. என்னைச் சுற்றி இருப்பவர்களிடமும் இது குறித்து விசாரிக்கலாம். எங்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை. இதனால் நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்.
சாப்பிட முடியல: 3 நாட்களாக என்னால் சாப்பிடவும் முடியவில்லை. தூங்கவும் முடியவில்லை. எனது மகளைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை. அந்த நிலைமைக்கு என்னைக் கொண்டு வந்துள்ளனர். இதுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்றே புரியவில்லை. அந்த பணிப்பெண்ணை குடும்பத்தில் ஒரு பெண்ணாகவே பார்த்துள்ளேன். இது அந்த பெண்ணுக்கே நன்றாகத் தெரியும். என்னால் அந்த பெண்ணிடம் நேரடியாகப் பேச முடியவில்லை. நான் சொல்லும் இந்த தகவல் அவருக்குச் சென்று சேரும் என நம்புகிறேன்.
அக்காவைப் பற்றி உணக்கு நன்றாகவே தெரியும்.. எந்த விதத்திலும் நான் உன்னைக் கஷ்டப்படுத்த நினைத்துக் கூட இல்லை. உன் கைப்பட நீ கடிதம் எழுதி வைத்துள்ளதைக் கூட நான் இப்போது தான் பார்த்தேன். இவ்வளவு அன்பு இருக்கும் போது எதற்காக இப்படி எல்லாம் செய்கிறாய்.. உனக்கு எதாவது வேண்டும் என்றால் நேரடியாக என்னிடம் பேசி இருக்கலாமே..
ரொம்ப தவறு: எதற்காக நீ இப்படி எல்லாம் செய்கிறாய்.. நீ ஒரு குடும்பத்தையே டேமேஜ் செய்கிறாய்.. இது சீரியஸான விஷயம்.. அது புரியாமல் நீ செய்து கொண்டு இருக்கிறாய்.. நீ செய்வது சரியானது இல்லை. உனக்கு நீ செய்வதே புரியவில்லை. நீ என்னைப் பற்றி, எனது கணவர் பற்றி, மகள் குறித்துப் பேசுகிறாய் ஓகே.. எனது மாமனார் என்ன செய்தார்.
எத்தனை ஆண்டு உழைத்து அவர் இந்த இடத்திற்கு வந்துள்ளார் தெரியுமா.. இதனால் எங்கள் குடும்பத்திலேயே மிகப் பெரிய பிரச்சினை வந்துள்ளது. இதெல்லாம் யோசிக்க மாட்டியா நீ.. தயவு செய்து நான் சொல்கிறேன். நீ புகார் கொடுப்பதாக இருந்தாலும் கூட எங்களைப் பற்றி மட்டும் பேசு.. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் பற்றிப் பேசி கவனம் ஈர்க்க முயல வேண்டாம். அது சரியானது இல்லை" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications