கட்சி நிர்வாகியின் கன்னத்தில் பளார் விட்ட திமுக எம்எல்ஏ! திருவள்ளூர் அருகே பொங்கல் விழாவில் பரபரப்பு
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே திமுக நிர்வாகி ஒருவரை அக்கட்சி எம்.எல்.ஏவே கன்னத்தில் பளார் விடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் முன்பே பொதுவெளியில் கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ டிஜே கோவிந்தராஜன் நிர்வாகியை தாக்கியுள்ளார். உட்கட்சி பூசலால் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கட்சி சார்பிலும் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகை விழா நடந்து வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் டிரால்பாடி ஊராட்சியில் திமுக சார்பில், திராவிட பொங்கல் விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ டிஜே கோவிந்தராஜனும் பங்கேற்று இருந்தார். கட்சியின் ஒன்றிய அவைத் தலைவர் முனிவேல் உள்பட பலரும் கலந்துகொண்டனர். அப்போது இவர்கள் இருவரும் பேசியபடியே வந்துகொண்டிருந்தனர். சாலையின் முன்னும் பின்னும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்களும் உடன் நடந்து வந்துகொண்டிருந்தனர்.
அப்போது திடீரென எம்.எல்.ஏ கோவிந்தராஜன் கட்சி நிர்வாகி முனிவேலை கன்னத்தில் பளார் என அறைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் ஒரு நிமிடம் ஸ்டன் ஆகினர். எனினும் அவர் மீண்டும் மீண்டும் முனிவேலை தாக்கினார். இதையடுத்து அருகில் இருந்த நிர்வாகிகள் அவரை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.
இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு உண்டானது. தற்போது இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. உட்கட்சி பூசல் காரணமாக அவரை எம்.எல்.ஏ தாக்கியதாக கூறப்படுகிறது. ஒரு கட்சியின் எம்.எல்.ஏ ஒருவரே பொதுவெளியில் கட்சி நிர்வாகியை தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்!












Click it and Unblock the Notifications