Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பிரதமர் மோடியை போல் பாஜகவினர் பதில்" பத்திரிகையாளர்களை திட்டிய அண்ணாமலைக்கு உதயநிதி கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்திரிகையாளர்களை குரங்குகள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டியதற்கு திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை பிராட்வேயில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக கட்சித் தலைவராக இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மு. க. ஸ்டாலின் பற்றிய வாழ்த்தரங்கை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதில் முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பி-யுமான ப. சிதம்பரம், கவிஞர் வைரமுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சேகர்பாபு பற்றி உதயநிதி ஸ்டாலின்

சேகர்பாபு பற்றி உதயநிதி ஸ்டாலின்

இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், மழைக்காலம் என்பதால் நிகழ்ச்சியை உள் அரங்கத்தில் நடத்துமாறு தயாநிதி மாறன் அறிவுறுத்தி இருந்தார். ஆனால் அமைச்சர் சேகர்பாபு நினைத்தால் மழையை கூட நிறுத்திவிடுகிறார். ஏனென்றால் அவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தும் சொல்லுகிறேன். மழை பெய்தால் ஒரு இடத்தில் நடத்தவும், மழை இல்லையென்றால் இன்னொரு இடத்தில் நடத்தவும் ஏற்பாடு செய்திருக்கிறார் என்று பாராட்டினார்.

நிர்மலா சீதாராமன் பதில்

நிர்மலா சீதாராமன் பதில்

தொடர்ந்து, மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பணியாற்றி வருகிறார். அவரிடம் ஒரு கேள்வி கேட்டால், அவர் அளிக்கும் பதில்கள் யாராக இருந்தாலும் அசரடித்துவிடும். அண்மையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைந்துள்ளதே என்று நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், எதிர்மறையாக பார்க்காமல் அமெரிக்கா டாலரின் மதிப்பு உயர்வதாக நேர்மறையாக பாருங்கள். என்று பதிலளித்தார்.

வஞ்சிக்கும் பாஜக அரசு

வஞ்சிக்கும் பாஜக அரசு

எப்படிப்பட்ட மத்திய அமைச்சர் நமக்கு கிடைத்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி எப்படி பொய்களை பேசுவாரோ, பாஜகவினர் அனைவரும் அப்படியே வடை சுடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல், எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் இதுவரை எதுவும் நடைபெறவில்லை. ஆனால் 95 சதவிகிதப் பணிகள் முடிந்துவிட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்து சென்றுள்ளார். அந்த அளவிற்கு பாஜக அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.

அண்ணாமலை பற்றி உதயநிதி

அண்ணாமலை பற்றி உதயநிதி

திமுக இளைஞரணி - மாணவரணி சார்பாக இந்தி திணிப்பு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால் பாஜக சார்பாக ஆங்கிலத்தை திமுக திணிக்கிறது என்று ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல், பத்திரிகையாளர்களை பார்த்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குரங்குகள் என்று திட்டியுள்ளார்.

அதிமுக கையில் பாஜக குடுமி

அதிமுக கையில் பாஜக குடுமி

அந்த அளவிற்கு கேவலமான அரசை நடத்தி வருகிறார்காள். இதற்கு முக்கியக் காரணம், அதிமுக தான். அந்தக் கட்சி இருக்கிறதா, இல்லையா என்று தெரியாத நிலைக்கு சென்றுவிட்டது. ஏனென்றால் அதிமுக கையில் தான் பாஜகவின் குடுமி இருக்கிறது. மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து கேள்வி எழுப்பும் அரசாக திமுக மட்டுமே இருந்து வருகிறது என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+